Details
''கனிந்த மனத் தீபங்களாய்'' என்ற இந்த நாவல் ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாய் வெளிவர இருக்கிறது. இந்த நாவல்தான் நான் எழுதிய முதல் நாவல் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும் கொஞ்சம் கனமான நாவல். கனம் என்றால் எல்லா விதத்திலும்தாம்.''கனிந்த மனத்தீபங்களாய்'' என்ற நாவல் மூன்று பாகங்களைப் வெளிவந்தபோது இது பெரிய அளவில் வெற்றி பெறாதோ என்ற ஐயம் எனக்குள் இருந்தது. ஆனால்''வாய்மொழி விளம்பரம்'' என்பார்களே அது போல ''கனிந்த மனத்தீபங்களாய்'' வாசகர்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது என்பதையே அதன் அடுத்த பதிப்பு வெளிவரும் செய்தி நிரூபக்கிறது.