இப்புத்தகத்தில் 2 புதினங்கள் இடம்பெற்றுள்ளன.
1.சக்ரவாஹம் - 112 பக்கங்கள்
2.அருகம்புல் - 120 பக்கங்கள்.
1.சக்ரவாஹம்:- ஜீஜாபாய் பூ மாதிரி சிரித்தாள்.
"அடேயப்பா... முதன் முதலாக சிரிக்கிறாய். அதுவும் அழகாக பெரியதாக சிரிக்கிறாய். முதன் முதலாக உணவு கொடுத்த புருஷனை நமஸ்கரித்தாயே. முதன் முதலாக சிரிக்கிற மனைவியை புருஷன் என்ன செய்ய வேண்டும். நமஸ்கரிக்க வேண்டுமா" என்று கேட்க, "ஐயோ! இது என்ன அசட்டுத்தனம்.
ஜீஜாபாய் உறக்கச் சிரித்தாள்.
"அடேயப்பா...சங்கீதமாய் இருக்கிறது உன் சிரிப்பு, வெகு நாளாயிற்று இப்படியொரு சிரிப்பை ஒரு பெண்ணிடமிருந்து கேட்டு..."
துகாராம் உண்மையாக ஆதங்கத்துடன் சொன்னான்.
"இப்படிப் பாராட்டினால் போதும். மனைவியை இப்படி ஒரு முறை பாராட்டினால் அது நூறு முறை நமஸ்காரம் செய்ததற்கு இணை. மனைவியை நமஸ்கரிப்பது என்பதே மனைவியை பாராட்டுவதுதான். இதுதான் பல கணவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.
அவருக்கு முன் வாழ்ந்த ஞானதேவர், ஏசுநாதர், நாமதேவர் போன்றவர்களின் பாடல்களைப் படிக்க கொண்டிருந்தவர், தான் எழுதிய பாடல்களை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டிருந்தவர், தொடர்ந்து பாடல்கள் புனைய ஆரம்பித்தார்.
பல சபைகளில் அவைகளை பாட ஆரம்பித்தார். இதை யாரோ பெரியவர்களின் பாட்டு என்று சபையும் அந்தப் பாடல்களை அங்கீகரித்துப் பாடத் துவங்கியது. தான் தொடர்ந்து பாடல்கள் புனைய வெட்கமாக இருந்தது. செய்யலாமா, கூடாதா என்ற எண்ணம் வந்தது. மறுபடியும் கர்வம் வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. தனிமையில் அழிந்து போன அகங்காரம் மறுபடியும் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளுமோ, மிகப் பெரிய கவிஞன், பக்திமான் என்று பலர் பாராட்ட, திரும்பவும் கொம்பு முளைத்து விடுமோ என்று பயந்தார்.
துகாராமிற்குள் பாண்டுரங்கன் தோன்றினார்.
"பாடு. பாடுவதற்காகத்தான் பிறந்திருக்கிறாய்" என்று ஊக்கப்படுத்தினார். அவர் தயங்கியபோது நாமதேவர் கனவில் தோன்றினார்.
"துகாராம் நான் புனைய இருந்த நூறு கோடிப் பாடல்களில் தொண்ணூற்று நாலு கோடியே நாற்பது லட்சம் பாடல்களை நன் எழுதி விட்டேன்.மீதி இருக்கின்ற ஐந்து கொடியே அறுபது லட்சம் பாடல்களை நீதான் புனைய வேண்டும். உன் பாடல்களை இந்த ஊரை குளிர்விக்கும். பாடுபவரை மகிழ்விக்கும். தயவுசெய்து பாடு" என்று நாமதேவரும் வற்புறுத்த, அவருக்கு பாடல் புனையும் காலை எளிதில் கை வந்தது.
2.அருகம்புல்:-
உழைக்காமல், ஓடி ஆடாமல் அள்ளி அள்ளி சாப்பிடாதே. அப்போது மேல் வயிறு பெருத்து விடும். மேல்வயிறு பெருத்துப் போனால் மூச்சு வாங்கும். மூச்சு வாங்கினால் மூளை சரியாக வேலை செய்யாது. மூளை சரியாக வேலை செய்யாவிட்டால் கோபம்தான் குதறிக் கொண்டு வரும். கோபம் குதறிக் கொண்டு வந்தால் உன்னுடைய நெருங்கிய உறவுகளை இழந்துவிட வாய்ப்பு இருக்கிறது. உறவுகளை இழந்துவிட்ட வாய்ப்பு இருக்கிறது. உறவுகளை இழந்துவிட்டு அப்புறம் என்ன வாழ்க்கை. எல்லோரோடும் கூடி வாழ்வதே மனிதனுடைய லட்சணம்.
உழைக்காமல், ஓடி ஆடாமல் அள்ளி அள்ளி சாப்பிடாதே. அப்போது மேல் வயிறு பெருத்து விடும். மேல்வயிறு பெருத்துப் போனால் மூச்சு வாங்கும். மூச்சு வாங்கினால் மூளை சரியாக வேலை செய்யாது. மூளை சரியாக வேலை செய்யாவிட்டால் கோபம்தான் குதறிக் கொண்டு வரும். கோபம் குதறிக் கொண்டு வந்தால் உன்னுடைய நெருங்கிய உறவுகளை இழந்துவிட வாய்ப்பு இருக்கிறது. உறவுகளை இழந்துவிட்ட வாய்ப்பு இருக்கிறது. உறவுகளை இழந்துவிட்டு அப்புறம் என்ன வாழ்க்கை. எல்லோரோடும் கூடி வாழ்வதே மனிதனுடைய லட்சணம்.
ஆசிரியர் குறித்து:
பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.