Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஆலயங்கள் சமுதாய மையங்கள் -தவத்திரு குன்றக்குடி அடிகளார் - Aalayangal Samudhaya Maiyangal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 018
₹27.00
ஆன்மீகம்.

புத்தக உரை: காகித அட்டை (Paperback); 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font); 
மொழி: தமிழ்; 
பக்கங்கள்: 171; 
முதற் பதிப்பு: அக்டோபர் 1987; 
நான்காம் பதிப்பு: ஏப்ரல் 1996; 
வானதி பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் ஆலயங்கள் சமுதாய மையங்கள், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டது. தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது.           

முன்னுரை:-
தமிழர் நாகரிகம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டது. இந்த உண்மையினைத் திருக்கோயில் கலவெட்டுகளும் திருமுறைகளும் எடுத்துக் கூறுகின்றன. புதுமை என்பது சூன்யத்திலிருந்து தோன்றுவதில்லை. முதிர்ந்த பழைமைதான் ஒரு புதுமையைப் பிரசவிக்கிறது. இதுவே வரலாற்றுண்மை. சிலர் பழைமையை மலடாக்கிப் புதுமையின் விரிவைத் தடை செய்து வருகின்றனர். இது வளரும் போக்குடைய வரலாற்றுக்கு முரண்பட்ட நிலை. பழைமையைப் புதுமையாக விரிவடையச் செய்து, ஒரு நல்ல சமுதாய அமைப்பைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்தது இந்த நூல். இந்த நூலின் கருத்துக்கள் சார்பு நிலைகளினின்றும் விலகி விவாதிக்கும் பழக்கமுடையவர்களால் விவாதிக்கப்படுவதை வரவேற்கிறோம். மெய் கண்ட தேவர், முதல் கார்ல்மார்க்ஸ் வரை இந்நூலில் பேசப்பட்டுள்ளனர். சிந்திப்பவர்கள் இந்த நூலினை ஏற்பர் நம்புகினறோம்.

பதிப்புலகத்தில் வானதி திருநாவுக்கரசு அவர்கள் ஒரு வேந்தர். அழகுறச் செய்வது அவர்தம் இயல்பு. வானதி பதிப்பகம் இந்த நூலினை வெளியிட முன்வந்ததற்கு நன்றி! கடப்பாடு! அருமை நண்பர் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

குன்றக்குடி அடிகளார் 18-9-67      

பொருளடக்கம்
பக்கம்
1 ஆலயங்கள் சமுதாய மையங்கள் ................................................ 5
2 கோயில் வளர்த்த வாழ்வியற் கலைகள்.................................... 42
3 திருக்கோயில் பூசனை எல்லாரும் செய்யலாமா? - ஓர் ஆய்வு.. 75
4 சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ................... 99
5 வாழ்வும் வளமும் .......................................... 136

தமிழ்நாடு, ஆலயங்கள் நிறைந்த நாடு, விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள், தமிழ்நாட்டுக்கு அழகும் பொலிவும் ஊட்டுவன. கல்லெல்லாம் கலையாக்கி, பேசும் பொற் சித்திரமாக்கி, வழிபடும் தெய்வமாகவும் படைத்துக் காட்டிய திறம் தமிழர்க்கேயுரியது. சென்ற காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, தமிழ்நாட்டின் வரலாற்றை இயக்குவதில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்துள்ளன. ஏற்றுக் கொண்டுள்ளன! தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையில், வளர்ச்சியில், மாற்றங்களில் மிகுதியும் பங்கு பெற்றிருந்தவை திருக்கோயில்களே - என்பது வரலாறு கூறும் உண்மை. அன்றாட வாழ்க்கை முதல், மொழி, கலை, இலக்கியம், சமயம் ஈறான அனைத்துத் துறைகளிலும் திருக்கோயில்களுக்குப் பங்குண்டு. தமிழ்நாட்டின் அரசியல், பொருளியல், சமூகவியல் ஆகிய அனைத்துமே திருக்கோயில்களின்வட்டத்தைச் சார்ந்தே இயங்கியுள்ளன; வளர்ந்து வந்துள்ளன. தமிழ்நாட்டு வரலாறு திருக்கோயில்களின் வரலாறு. திருக்கோயில்களின் வரலாறு தமிழ் நாட்டின் வரலாறு.

வாழ்வியலும் சமயமும்:-

வாழ்க்கை அருமையானது, அருமையிலும் அருமையானது. “வாழ்க்கை பொய்யானது; துன்பமானது” என்ற கருத்து தமிழியலுக்கு மாறானது. “வாழ்க்கை வாழ்வதற்கே!” “வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்” என்பது தமிழ் நெறி. தமிழர் கோட்பாடு. வாழ்வாங்கு வாழ்வதற்குச் சிந்தனை தேவை; தெளிவு தேவை; அறிவு தேவை. “சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்பது திருமுறை. மானிடத்தை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுவது சிந்திக்கும் திறனேயாம். “நான் ஆர்? என் உள்ளம் ஆர்?” என்று சிந்திக்கின்ற பொழுது உயிர் தன் மதிப்பீடு செய்து கொள்கிறது; தன்னை அறிந்து கொள்கிறது. தன்னுடைய குற்றங் குறைகளைத் தெரிந்து உணரும் உயிர், மேம்பாட்டை நோக்கி அவாவுவது இயற்கையின் நிகழ்வு. இது அறிவியல் சார்ந்த உண்மை. குறைகளை உணர்தலே நிறைகளைப் பெறுவதற்குரிய வாயில்! தன் அறியாமையை உணர்தலே அறிவைப் பெறுவதற்குரிய வாயில்! மனிதன் விலங்கல்ல; மனிதனுமல்ல! மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி, மனிதத் தன்மையை முயன்று பெற்று, அதனினும் உயர்ந்த இறை நலம் அல்லது கடவுள் மங்கலம் அடைதலே. வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி. இந்த முயற்சி எளிதில் கைகூடுவதே! ஆயினும் அருமைப்பாடு உடையது என்பதையும் மறந்து விடுதற்கில்லை !                                                                                                                                                                            
எழுத்தாளர் பற்றி :  குன்றக்குடி அடிகள் (சூலை 11, 1925 - ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
More Information
SKU Code VAN B 018
Weight in Kg 0.570000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name தவத்திரு குன்றக்குடி அடிகளார் - Mr. Kundrakudi Aadikalaar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:ஆலயங்கள் சமுதாய மையங்கள் -தவத்திரு குன்றக்குடி அடிகளார் - Aalayangal Samudhaya Maiyangal

Similar Category Products

Other Books by தவத்திரு குன்றக்குடி அடிகளார் - Mr. Kundrakudi Aadikalaar