- Home /
- ஆசை என்னும் வேதம் - பாலகுமாரன் - Aasai Ennum Vedham - Balakumaran
- Description
-
Details
"நாகராஜனுக்கு வசுமதியை திருமணம் செய்து வைத்து அவளை பெற்றோர்களாக பார்த்து படுகுழியில் பிடித்து தள்ளினார்கள்.கணவன் நாகராஜன் இறந்துவிடுகிறான், "எனக்கு புருஷன் செத்துப் போனது குறையில்லை. செத்து போனவன் புருஷனாய் இல்லையே என்கிற குறை. நல்ல புருஷனோடு வாழவில்லையே என்ற குறை." என்று வசுமதி வருந்துகிறாள். "" நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம் எல்லாம் நான் ---- என்னுள் அடக்கம். இவையனைத்து குணங்களும் என்னுள் உண்டு.நான் கோபிக்கும் போது தீ எரிகிறது.நான் சிரிக்கும் போது காற்று சுழல்கிறது.நான் அழும்போது நீர் பொழிகிறது.நான் உழைக்கும் போது நிலம் புரள்கிறது.தான் மௌனமாய் இருக்கும் போது ஆகாயம் விரிகிறது.என்னையே இவையாக,, இவையே நானாக உணர்கிறேன். தனித்தனியே இல்லாது ஒட்டுமொத்தமாய் உணர்கிறேன். "புத்தக விமர்சனம்: வாசகர் கடிதம்:-நீங்கள் எழுதிய 'ஆசை என்னும் வேதம்' கதையின் முடிவு நன்றாக இருந்தது. ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒருவனோடு வாழ, நம் சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? நம்மால் சமுதாய மரபுகளை மீறமுடியுமா? நீங்கள் சொல்லுகிற இந்த முடிவு நிச்சயம் மலரத்தான் போகிறது. ஆனால் இப்போது அல்ல. அதற்கு நிறைய காலம் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்.இக்கதையில் ஒரு விதவையின் உணர்ச்சிகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். மனிதனுக்கு உணவு, உடை எவ்வளவு அவசியமோ அதுமாதிரி செக்ஸ் என்பதும் அவசியம். அது இயற்கை. ஒரு பெண் விதவையாகிவிட்டால் சாப்பிடாமல், உடுத்தாமல் இருக்க முடியுமா? அதை அவள் பூர்த்தி செய்துகொள்ளும் உரிமை அவளுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களுடைய வாதம் மிகச் சரியானது.உங்களுடைய இந்தக் கதைக்கு பாராட்டோ, புகழ் வார்த்தைகளோ சொல்லக் கூடாது. அதற்கு மேலும் ஒரு வார்த்தை தேடிக் கொண்டிருக்கிறேன். இதில் கதை என்பதைவிட, அதில் வரும் சம்பவங்கள்தான் மனதை நெருடியது. சம்பவங்கள் தொடர்பான சிந்தனைகள் மிக அருமை.இதற்காக உங்களை இருகரம் கூப்பி நமஸ்கரிக்கின்றேன்.இப்படிக்கு,பி.ஜெயலட்சுமிஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
- Specification
-
Specification
SKU Code TMN B 051 Weight in Kg 0.0400 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name பாலகுமாரன் Balakumaran Publisher Name திருமகள் நிலையம் - Reviews