Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

முதலில் ஓர் இந்தியன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் - ஒரு வாழ்க்கை வரலாறு - APJ ABDUL KALAM : A LIFE - Tamil - APJ Abdul Kalam Oru Vazhkai Varalaru.

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4467
Regular Price ₹495.00 Special Price ₹445.00

Save: 50.00 Discount: 10.10%

பிணைப்பு: சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ ISBN-10: 8183227376
ISBN-13: 978-8183227377

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
வாழ்வின் பொருள் என்பது  ஒரு தத்துவரீதியான, ஆன்மீகரீதியான கேள்வி. வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியது அது. கலாமின் எண்பத்தி மூன்று வருட வாழ்க்கைப் பயணத்தின் ஊடாகப் பல வடிவங்களில் அது வெளிப்படுத்தப்பட்டிருப்பதை வாசகர்களால் காண முடியும். கலாமின் வாழ்க்கையைப் பற்றி படிப்பதன் மூலம் - 

"நான் என்ன செய்ய வேண்டும்?",
"நான் ஏன் இங்கு இருக்கிறேன்?",
"வாழ்க்கை என்பது எதைப் பற்றியது?",
"என் வாழ்வின் நோக்கம் என்ன?" 

போன்ற தங்களுடைய சொந்தக் கேள்விகளுக்கான விடைகளை வாசகர்கள் தங்களுக்குத் தாங்களே கண்டுபிடித்துக் கொள்வார்கள். இந்நூலாசிரியர் முப்பத்தி மூன்று வருடங்களாகக் கலாமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஏவுகணைகளை உருவாக்கும் பணித்திட்டத்தில் கலாமின் கீழ் ஓர் அறிவியலறிஞராகப் பணியாற்றிய அவர், கலாமின் தொழில்நுட்ப மேலாளராகவும், இறுதியில் அவருக்குச்  சொற்பொழிவுகளை எழுதிக் கொடுப்பவராகவும் அவருடைய நூல்களின் இணையாசிரியராகவும் ஆனார். அப்துல் கலாம் அவர்கள், சமுதாயத்தின் கீழ்மட்ட நிலைகளைச் சேர்ந்த மக்களுக்காக ஆதரவு குரல் கொடுத்தவர் என்றும், அவர்களை உத்வேகப்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி அயராது பாடுபட்டவர் என்றும் இந்நூலாசிரியர் விளக்குகிறார். இறுதியாக, மனத்தின் மூன்று விஷங்களான பொறாமை, வெறுப்பு, மெத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒரு மகான் அவர் என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். 

ஒழுங்குடன்கூடிய மனத்தைக்கொண்ட, தன் ஐம்புலன்களை முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த, சமய நம்பிக்கை கொண்ட ஓர் உண்மையான மனிதர் கலாம் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் பார்க்கலாம்.


ஆசிரியர் :    அருண் திவாரி, ஜி.பி.பண்ட் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலில் முதுகளைப் படிப்பை முடித்துவிட்டு, 1982ல் ஹைதராபாதிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உருவாக்கப் பரிசோதனை மையத்தில் ஓர் ஏவுகணை அறிவியலறிஞராகச் சேர்ந்தார். முதல் மூன்று ஆகாஷ் ஏவுகணை உருவாக்கப் பணித்திட்டங்களில் ஏர்ஃபிரேம் வடிவமைப்பாளராகவும் பணித்திட்ட மேலாளராகவும் அவர் பணியாற்றினார். 1992ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உருவாக்க மையத்தின் திட்ட இயக்குனராக அப்துல் கலாம் அவரை நியமித்தார். அப்போது ராணுவத் தொழில்நுட்பங்களைப் பொதுமக்களுக்குப் பயன்படுத்தும் திட்டங்களில் அவர் ஈடுபட்டார். அப்துல் கலாமின் குழு உறுப்பினர் என்ற முறையில் 'டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்' அமைப்பைச் சேர்ந்த பான்-ஆப்பிரிக்கா இ-நெட்வொர்க்கின் முதல் தொடர்பை அருண் திவாரி நிறுவினார். அதன் மூலம், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள பல பல்கலைக்கழகங்களும் மருத்துவமனைகளும் இந்தியாவில் உள்ள  பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளோடு இணைக்கப்பட்டுள்ளன.

1999ல், அருண் திவாரி, அப்துல் கலாமின் தன் வரலாற்றுப் புத்தகமான 'அக்கினிச் சிறகுகள்' நூலைக் கலாமுடன் இணைந்து எழுதினார். அதைத் தொடர்ந்து அவர் மேலும் பன்னிரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.

அருண் திவாரி தற்போது ராணுவத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டைப் பெறுவதற்கான திட்டங்களை வடிவமைப்பது மற்றும் அதன் மூலம் இந்தியாவில் ஒரு வலுவான ராணுவத் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்த ஆலோசனையாளராகப் பணி புரிந்து வருகிறார்.

ஹைதராபாத் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மேலாண்மை அறிவியல் பள்ளியில் அவர் வருகைப் பேராசிரியராக இருக்கிறார்.


                                          மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.

More Information
SKU Code PRK B 4467
Weight in Kg 0.260000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183227377
Author Name ARUN TIWARI. Translator - NAGALAKSHMI SHANMUGAM. அருண் திவாரி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name Manjul Publishing House Pvt. Ltd. @ மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:முதலில் ஓர் இந்தியன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் - ஒரு வாழ்க்கை வரலாறு - APJ ABDUL KALAM : A LIFE - Tamil - APJ Abdul Kalam Oru Vazhkai Varalaru.

Similar Category Products





Other Books by ARUN TIWARI. Translator - NAGALAKSHMI SHANMUGAM. அருண் திவாரி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்