Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பகவத் கீதை - மகாகவி பாரதியார் - Bhagavad Geethai - Subramania Bharati - Bhagavad Gita - Barathiyar - Bharadhiyar - Bharadiyar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 460
₹120.00

தமிழ் இலக்கியம்/ இதிகாசம் / மகாபாரதம்.

காகித அட்டை/ பேப்பர்பேக்;

136 பக்கங்கள்;

மொழி: தமிழ்;

முதல் பதிப்பு: ஆண்டு 2022.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

உள்ளே. . 

உலகமெல்லலாம் கடவுள் மயம். 

01.அர்ஜுன விஷாத யோகம். 

02.ஸாங்கிய யோகம்

03.கர்ம யோகம்

04.ஞான கர்ம சந்யாச யோகம் 

05.சந்யாச யோகம். 

06.தியான யோகம். 

07.ஞான விஞ்ஞான யோகம்

08. அக்ஷர பிரஹ்ம யோகம்

09. ராஜ வித்தியா ராஜ ரகசிய யோகம்

10. விபூதி யோகம்

11. விசுவரூப தரிசன யோகம்

12. பக்தி யோகம்

13. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

14. குணத்ரய விபாக யோகம்

15. புருஷோத்தம யோகம்

16. தெய்வாசுர சம்பத் விபாக யோகம். 

17. சிரத்தார்ரய் விபாக யோகம். 

18. மோக்ஷ சந்யாச யோகம்

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

உலகமெல்லலாம் கடவுள்மயம்

வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத்கீதை செய்யப்பட்டது. 

மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற் கருத்து. எல்லாவிதமான பற்றுகளையும் களைந்துவிட்டு மனச்சோர்வுக்கும் கவலைக்கும், கலக்கத்துக்கும் பயத்துக்கும், இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு! ஐயமுற்றோன் அழிவான். 

மனிதன் எல்லாத் துன்பங்களின்றும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும், தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்டமேனும் நஷ்டமேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டே இருக்க வேண்டும். தன்னுயிரைப் போல் மண்ணுயிரைப் பேண வேண்டும். நாம் உலகத்தாரக்கு நல்வழிகாட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசித்திருக்கிறார். 

துர்யோதனாதியர் காமக் குரோதங்கள்; 

அர்ஜுனன் - ஜீவாத்மா; 

ஸ்ரீகிருஷ்ணன் - பரமாத்மா.

இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒரு போதும் அர்த்தமாகாது.

பூமண்டலத்தார் அனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்கு உரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்ட பகவத் கீதை. இதில் ஐயமில்லை. 

சாகாதிருத்தல்; மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையில் ரசம், அமரத்தன்மை இஃதே வேத ரகசியம். 

ஈசனைச் சரணாகதியடைந்து இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால், இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி  சாஸ்திரம்; இஃது யோக சாஸ்திரம்; இஃது ஞான சாஸ்திரம்; இஃது மோக்ஷ சாஸ்திரம்; இஃது அமரத்துவ சாஸ்திரம்.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தை கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதே எனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய் இல்லை.அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வேள்றொழித்தற்கு உரியன. நன்மைகள் செய்தற்கும் எய்துதற்கும் உரியன. சரணாகதியால் ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்ய விரதத்தால் ஆனந்தத்தையடைவீர்கள்! இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்!

இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது. 

- பாரதி.

ஆசிரியர் குறிப்பு: சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.

More Information
SKU Code Bharti B 460
Weight in Kg 0.300000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name மகாகவி பாரதியார் Subramania Bharati
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:பகவத் கீதை - மகாகவி பாரதியார் - Bhagavad Geethai - Subramania Bharati - Bhagavad Gita - Barathiyar - Bharadhiyar - Bharadiyar

Similar Category Products





Other Books by மகாகவி பாரதியார் Subramania Bharati