பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal - Barathiyar Kavitaigal - Bharadhiyar Kavithaikal - Bharadiyar Kavitaikal
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
கவிதைகள்/ தமிழ் இலக்கியம்.
காகித அட்டை/ பேப்பர்பேக்;
551 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
திருத்தப்பட்ட முதல் பதிப்பு: 2022.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
பாரதியார் கவிதைகள் - வசன கவிதைகள் உட்பட முழுவதும்
(கவியரசு கண்ணதாசனின் பாராட்டைப் பெற்ற பதிப்பு).
முன்னுரை:
அரசவைக் கவிஞர்
கவியரசு திரு.கண்ணதாசன்
'ஒரு நல்ல கவிஞன் காலத்தின் கண்ணாடி' என்பார்கள். பெரும்பாலான கவிஞர்கள் நிகழ்காலத்தின் கண்ணாடியாகவே இருந்திருக்கிறார்கள். பாரதி ஒருவனே மூன்று காலங்களுக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறான்.
தமிழுக்கு மரியாதை இல்லாதபோது தமிழின் உயர்வை வியந்து பாடினான். தேசிய ஒருமைப்பாடு பற்றி முன்னோடியாக நின்று சிந்தித்தான். விடுதலை வருமுன்னரே, வந்துவிட்டதாகக் கனவு கண்டான்; எதிர்காலத்துக்கான தேசிய பொருளாதாரத்தைத் தெளிவாக விளக்கினான்.
அவன் மூன்று காலங்களையும் பிரதிபலித்துவிட்டதால், எந்தக் காலத்துக்கும் அவன் கவிதை பொருந்துவதாகி விட்டது.
காலாகாலங்களுக்கு அழியாதபடி நிலைத்து நிற்பவனே காலத்தின் பிரதிநிதி.
பாரதி எந்தக் காலத்துக்கும் பிரதிநிதி. அவனது கவிதைகளைப் பல்வேறு பதிப்பகத்தார் இதுவரையில் வெளியிட்டிருக்கிறார்கள். 'பாரதி பதிப்பகமும்' ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. இப்போது மீண்டும் ஒரு சிறந்த பதிப்பை அது கொண்டு வருகிறது.
ஏறிவிட்ட விலைவாசிகளையொட்டி விலை சற்று ஏறி இருக்கிறது. எத்தனை இலட்சம் பிரதிகள் பாரதி பாடல்கள் வெளி வந்தாலும் ஒவ்வொரு தலைமுறையும் வாங்கிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்பன்,
கண்ணதாசன்.
சென்னை - 17.
25.5.81
*************************************************
உள்ளடக்கம்:
I. தேசிய கீதங்கள்
01.பாரத நாடு
01.வந்தே மாதரம்;
02.ஜய வந்தே மாதரம்;
03.நாட்டு வணக்கம்;
04.பாரத நாடு;
05.பாரத தேசம்;
06.எங்கள் நாடு;
07.ஜய பாரதம்;
08.பாரத மாதா;
09.எங்கள் தாய்;
10.வெறிகொண்ட தாய்;
11.பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி;
12.பாரத மாதா நவரத்தின மாலை;
13.பாரத தேவியின் திருத்தசாங்கம்;
14.தாயின் மணிக்கொடி பாரீர்!;
15.பாரத ஜனங்களின் தற்கால நிலைமை;
16.போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்;
17.பாரத சமுதாயம்;
18.ஜாதீய கீதம் - 1;
19.ஜாதீய கீதம் - 2.
02.தமிழ்நாடு
20.செந்தமிழ்நாடு;
21.தமிழ்த்தாய்;
22.தமிழ்;
23.தமிழ்மொழி வாழ்த்து;
24.விதியே! விதியே!;
25.வாழிய செந்தமிழ்.
03.சுதந்திரம்
26.சுதந்திரப் பெருமை;
27.ஓர் வரம்;
28.சுதந்திர தாகம்;
29.சுதந்திர தேவியின் துதி;
30.விடுதலை;
31.சுதந்திரப் பள்ளு.
04.தேசிய இயக்கப் பாடல்கள்
32.சத்ரபதி சிவாஜி;
33.கோக்கலே சாமியார் பாடல் ;
34.தொண்டு செய்யும் அடிமை;
35.மேத்தா திலகருக்குச் சொல்வது;
36.நிதானக் காட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்;
37.பாரத தேவியின் அடிமை;
38.வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று;
39.தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி;
40.நடிப்புச் சுதேசிகள்.
05.தேசிய தலைவர்கள்
41.வாழ்க நீ எம்மான்;
42.குரு கோவிந்தர்;
43.தாதாபாய் நவுரோஜி;
44.பூபேந்திர விஜயம்;
45.வாழ்க திலகர் நாமம்!;
46.லோகமான்ய பால கங்காதர திலகர்;
47.லாஜ்பத்ராய் துதி;
48.லாஜ்பத்ராய் பிரலாபம்;
49.வ.உ.சி.க்கு வாழ்த்து.
06.பிற நாடுகள்
50.மாஜினியின் சபதம்;
51.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து;
52.புதிய ருஷியா;
53.பிஜி தீவினிலே.
II. தெய்வப் பாடல்கள்
01.தோத்திரப் பாடல்கள்
01.விநாயகர் நான்மணிமாலை;
02.முருகா! முருகா!;
03.வேலன் பாட்டு;
04.கிளி விடு தூது;
05.முருகன் பாட்டு;
06.வள்ளிப் பாட்டு - 1;
07.வள்ளிப் பாட்டு - 2;
08.எத்தனை கோடி இன்பம்;
09.போற்றி அகவல்;
10.சிவசக்தி;
11.காணி நிலம் வேண்டும்;
12.நல்லதோர் வீணை;
13.மஹாசக்திக்கு விண்ணப்பம்;
14.அன்னையை வேண்டுதல்;
15.பூலோக குமாரி;
16.மஹாசக்தி வெண்பா;
17.ஓம் சக்தி;
18.பராசக்தி;
19.சக்திக் கூத்து;
20.சக்தி;
21.வையம் முழுதும்;
22.சக்தி விளக்கம்;
23.சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்;
24.சக்தி திருப்புகழ்;
25.சிவசக்தி புகழ்;
26.பேதை நெஞ்சே;
27.மஹாசக்தி;
28.நவராத்திரிப் பாட்டு;
29.காளிப்பாட்டு;
30.காளி ஸ்தோத்திரம்;
31.யோக சக்தி;
32.மஹாசக்தி பஞ்சகம்;
33.மஹாசக்தி வாழ்த்து;
34.ஊழிக் கூத்து;
35.காளிக்குச் சமர்ப்பணம்;
36.காளி தருவாள்;
37.மஹா காளியின் புகழ்;
38.வெற்றி;
39.முத்துமாரி;
40.தேச முத்துமாரி;
41.கோமதி மகிமை;
42.சாகாவரம்;
43.கோவிந்தன் பாட்டு;
44.கண்ணனை வேண்டுதல்;
45.வருவாய் கண்ணா;
46.கண்ண பெருமானே;
47.நந்தலாலா;
48.கண்ணன் பிறப்பு;
49.கண்ணன் திருவடி;
50.வேய்ங்குழல்;
51.கண்ணம்மாவின் காதல்;
52.கண்ணம்மாவின் நினைப்பு ;
53.மனப்பீடம்;
54.கண்ணம்மாவின் எழில்;
55.திருக்காதல்;
56.திருவேட்கை;
57.திருமகள் துதி;
58.திருமகளைச் சரண் புகுதல்;
59.ராதைப் பாட்டு;
60.கலைமகளை வேண்டுதல்;
61.வெள்ளைத் தாமரை;
62.நவராத்திரிப் பாட்டு;
63.மூன்று காதல்;
64.ஆறு துணை;
65.விடுதலை வெண்பா;
66.ஐயம் உண்டு;
67.ஆரிய தரிசனம்;
68.சூரிய தரிசனம்;
69.ஞாயிறு வணக்கம்;
70.ஞானபாநு;
71.சோமதேவன் புகழ்;
72.வெண்ணிலாவே!;
73.தீ வளர்த்திடுவோம்;
74.வேள்வித் தீ;
75.கிளிப்பாட்டு;
76.இயேசு கிறிஸ்து;
77.அல்லா.
02.ஞானப் பாடல்கள்
78.அச்சமில்லை;
79.ஜய பேரிகை;
80.சிட்டுக் குருவியைப் போலே;
81.விடுதலை வேண்டும்;
82.மனத்தில் உறுதி வேண்டும்;
83.ஆத்ம ஜெயம்;
84.காலனுக்கு உரைத்தல்;
85.மாயையைப் பழித்தல்;
86.சங்கு;
87.அறிவே தெய்வம்;
88.பரசில வெள்ளம்;
89.பொய்யோ? மெய்யோ?;
90.நான்;
91.சித்தாந்தச்சாமி கோயில்;
92.நான்;
93.அம்மாக்கண்ணு பாட்டு;
94.வண்டிக்காரன் பாட்டு;
95.கடமை அறிவோம்;
96.அன்பு செய்தல்;
97.சென்றது மீளாது;
98.மனத்திற்குக் கட்டளை;
99.மனப்பெண்;
100.பகைவனுக்கு அருள்வாய்;
101.தெளிவு;
102.கற்பனையூர்.
III.பல்வகைப் பாடல்கள்
01.நீதி
01.புதிய ஆத்திசூடி;
02.பாப்பா பாட்டு;
03.முரசு.
02.சமூகம்
04.புதுமைப் பெண்;
05.பெண்கள் வாழ்க!;
06.பெண்கள் விடுதலைக் கும்மி;
07.பெண் விடுதலை;
08.தொழில்;
09.மறவன் பாட்டு;
10.நாட்டுக் கல்வி;
11.புதிய கோணங்கி.
03.தனிப் பாடல்கள்
01.நீதி
02.சமூகம்
03.தனிப் பாடல்கள்
12.காலைப் பொழுது;
13.அந்திப் பொழுது;
14.நிலாவும் வான்மீனும் காற்றும்;
15.மழை;
16.புயற்காற்று;
17.பிழைத்த தென்னந்தோப்பு;
18.அக்கினிக் குஞ்சு;
19.சாதாரண வருஷத்துத் தூமகேது;
20.அழகுத் தெய்வம்;
21.ஒளியும் இருளும்;
22.சொல்;
23.கவிதைத் தலைவி;
24.கவிதைக் காதலி;
25.மது;
26.சந்திரமதி.
04.சான்றோர்
27.தாயுமானவர் வாழ்த்து;
28.நிவேதிதா;
29.அபேதானந்தா சுவாமிகள்;
30.ஓவியர்மணி இரவிவர்மா;
31.சுப்பராம தீட்சிதர்;
32.மகாமகோபாத்தியாயர்;
33.வெங்கடேசு ரெட்டப்ப பூபதி;
34.ஹிந்து மதாபிமான சங்கத்தார்;
35.வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு.
05.சுயசரிதை
36.கனவு;
37.பாரதி அறுபத்தாறு.
06.வசன கவிதை
IV.முப்பெரும் பாடல்கள்
01.கண்ணன் பாட்டு
01.கண்ணன் - என் தோழன்;
02.கண்ணன் - என் தாய்;
03.கண்ணன் - என் தந்தை;
04.கண்ணன் - என் சேவகன்;
05.கண்ணன் - என் அரசன்;
06.கண்ணன் - என் சீடன்;
07.கண்ணன் - என் சற்குரு;
08.கண்ணம்மா - என் குழந்தை;
09.கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை;
10.கண்ணன் - என் காதலன் (1);
11.கண்ணன் - என் காதலன் (2);
12.கண்ணன் - என் காதலன் (3);
13.கண்ணன் - என் காதலன் (4);
14.கண்ணன் - என் காதலன் (5);
15.கண்ணன் - என் காந்தன்;
16.கண்ணன் - என் காதலி (1);
17.கண்ணன் - என் காதலி (2);
18.கண்ணன் - என் காதலி (3);
19.கண்ணன் - என் காதலி (4);
20.கண்ணன் - என் காதலி (5);
21.கண்ணன் - என் காதலி (6);
22.கண்ணன் - என் ஆண்டாள்;
23.கண்ணம்மா - எனது குலதெய்வம்.
02.பாஞ்சாலி சபதம்
முதலாவது அழைப்புச் சருக்கம்
01.பிரமதுதி;
02.சரஸ்வதி வணக்கம்;
03.ஹஸ்தினாபுரம்;
04.துரியோதனன் சபை;
05.துரியோதனன் பொறாமை;
06.துரியோதனன் சகுனியிடம் சொல்வது;
07.சகுனியின் சதி;
08.சகுனி திருதராட்டிரனிடம் சொல்லுதல்;
09.திருதராட்டிரன் பதில் கூறுதல்;
10.துரியோதனன் சினம் கொள்ளுதல்;
11.துரியோதனன் தீ மொழி;
12.திருதராட்டிரன் பதில்;
13.துரியோதனன் பதில்;
14.திருதராட்டிரன் சம்மதித்தல்;
15.சபா நிர்மாணம்;
16.விதுரனைத் தூது விடல்;
17.விதுரன் தூது செல்லுதல்;
18.விதுரனை வரவேற்றல்;
19.விதுரன் அழைத்தல்;
20.தருமபுத்திரன் பதில்;
21.விதுரன் பதில்;
22.தருமபுத்திரன் தீர்மானம்;
23.வீமனுடைய வீரப்பேச்சு;
24.தருமபுத்திரன் முடிவுரை;
25.நால்வரும் சம்மதித்தல்;
26.பாண்டவர் பயணமாதல்;
27.மாலை வருணனை.
இரண்டாவது சூதாட்டச் சருக்கம்
28.வானியை வேண்டுதல்;
29.பாண்டவர் வரவேற்பு;
30.பாண்டவர் சபைக்கு வருதல்;
31.சூதுக்கு அழைத்தல்;
32.தருமன் மறுத்தல்;
33.சகுனியின் ஏச்சு;
34.தருமனின் பதில்;
35.சகுனி வில்லுக்கு அழைத்தல்;
36.தருமன் இணங்குதல்;
37.சூதாடல்;
38.நாட்டை வைத்தாடுதல்.
மூன்றாவது அடிமைச் சருக்கம்
39.பராசக்தி வணக்கம்;
40.சரஸ்வதி வணக்கம்;
41.விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி;
42.விதுரன் சொல்வது;
43.சூது மீண்டும் தொடங்குதல்;
44.சகுனி சொல்வது;
45.சகாதேவனைப் பந்தயம் கூறுதல்;
46.நகுலனை இழத்தல்;
47.பார்த்தனை இழத்தல்;
48.வீமனை இழத்தல்;
49.தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்;
50.துரியோதனன் சொல்வது;
51.சகுனி செல்வது.
நான்காவது திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்
52.திரௌபதியை இழத்தல்;
53.திரௌபதி சூதில் வசமானது பற்றி கௌரவர் கொண்ட மகிழ்ச்சி;
54.துரியோதனன் சொல்வது;
55.திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச்சொல்லியது...;
56.துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது;
57.விதுரன் சொல்வது;
58.துரியோதனன் சொல்வது;
59.திரௌபதி சொல்லுதல்;
60.துரியோதனன் சொல்வது.
ஐந்தாவது சபதச் சருக்கம்
61.துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல் ;
62.திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்;
63.சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்;
64.வீட்டு மாசாரியன் சொல்வது;
65.திரௌபதி சொல்வது;
66.வீமன் சொல்வது;
67.அர்ஜுனன் சொல்வது;
68.விகர்ணன் சொல்வது;
69.கர்ணன் பதில்;
70.திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை;
71.வீமன் செய்த சபதம்;
72.அர்ஜுனன் சபதம்;
73.பாஞ்சாலி சபதம்;
74.பாஞ்சாலி சபதம்.
முன்னுரை
03.குயில் பாட்டு
01.குயில்;
02.குயிலின் பாட்டு;
03.குயிலின் காதற் கதை;
04.காதலோ காதல்;
05.குயிலும் குரங்கும்;
06.இருளும் ஒளியும்;
07.குயிலும் மாடும்;
08.நான்காம் நாள்;
09.குயில் தனது பூர்வ ஜென்மக் கதையுரைத்தல்.
V. புதிய பாடல்கள்
01.சுதந்திர தேவியிடம் முறையீடு;
02.தெய்வம் நமக்கு அனுகூலம் ;
03.இந்தியாவின் அழைப்பு ;
04.குருவிப் பாட்டு ;
05.செல்வத்துள் பிறந்தனம்மா?;
06.பிரெஞ்சு தேசிய கீதம்;
07.மணிமுத்துப் புலவர்;
08.உயிர்பெற்ற தமிழர் பாட்டு;
09.இளசை ஒருபா ஒருபஃது;
10.தனிமை இரக்கம்;
11.வாங்கமே வாழிய! ;
12.காவடிச் சிந்து;
13.வந்தே மாதரம்;
14.என்னே கொடுமை!;
15.எனது தாய்நாட்டின் முன்னாட்பெருமையும், இன்னாட் சிறுமையும்;
16.யான்;
17.சந்திரிகை;
18.ஆசுகவி;
19.ஞானரதப் பாட்டு;
20.பகவத் கீதை;
21.பெரியோரின் பெருமை;
22.சுதந்திரம்;
23.செட்டி மக்கள் குலவிளக்கு.
*************************************************
இயன்றவரை
தமிழே பேசுவேன்,
தமிழே எழுதுவேன்.
சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்.
எப்போதும் பராசக்தி - முழு உலகின் முதற் பொருள் -
அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன்.
அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன். - மகாகவி பாரதியார்.
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
- பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்
- பாரதி.
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...”
ஆசிரியர் குறிப்பு: சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.
SKU Code | Bharti B 453 |
---|---|
Weight in Kg | 0.400000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | மகாகவி பாரதியார் @ மகாகவி சி.சுப்ரமணிய பாரதி -Subramania Bharati |
Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippakam |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 10.00 Discount: 6.25%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%