Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பிரும்ம இரகசியம் - படைப்பின் விளக்கம் - ர.சு. நல்லபெருமாள் - Brahma Ragasiyam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 008
₹150.00
பேப்பர்பேக்; 
296 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
வானதி பதிப்பகம்.

 FREE SHIPPING ON ALL ORDERS. 
 Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்திய தத்துவ ஞானங்களை எளிய முறையில் புரிந்து ரசிக்கும் படியாக அமைந்த புத்தகம். நாஸ்திக தத்துவத்தில் இருந்து சைவ சித்தாந்தம் வரை இந்திய தத்துவங்களை கேள்வி-பதில் முறையில் எழுதப்பட்ட நூல். அந்ததந்த தத்துவங்களை அருளிச் செய்த மகான்களிடமே நேரடியாக பேட்டி கண்டு தத்துவ விளக்கங்களைப் பெறுவது போல் எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசினால் சிறந்த நூலுக்கான முதல் பரிசினை 1982 பெற்றது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல். இந்த நூல் பிரும்ம இரகசியம் படைப்பின் விளக்கம், நல்லபெருமாள் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டது.                          
பதிப்புரை:-
நம் பாரத நாட்டு ஞானிகள் ஆத்மா சம்பந்தமாகத் தொடர்ந்து சிந்தித்தவர்கள். அவர்கள் சிந்தனைகள் பல உண்மைகளை உலகுக்குத் தந்தன. அவற்றின் சாரமாக விளங்குவது பிரும்ம ரகசியம்.

வாழ்வுக்கு வழிகாட்டும் ஞான ஒளியாக இந்த உண்மைகள் இன்றைக்கும் பிரகாசிக்கின்றன. அஞ்ஞான இருளை அகற்றி ஞான ஒளியை நிறைக்கின்றன.

வேதகால முதல் ஞானிகளும் மகான்களும் சொன்ன உண்மைகளை எல்லாம் பிரும்ம ரகசியம் தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றது. மூல முதலான பிரும்மத்தைப் பற்றிய பல இரகசியங்கள் உரையாடல்கள் மூலம் தெளிவுபடுத்தப் பெறுகின்றன.

படித்தவர்களாலும் புரிவதற்குச் சிரமப்படும் ஞான விஷயங்களையும் தத்துவங்களையும் பாமரர்களுக்கும் எளிதாகப் புரியும்படியாக இந்த பிரும்ம ரகசியம் நூலை ஆசிரியர் அமைத்திருக்கின்றார்.

மகாஞானியாகிய நசிகேதன் எமனிடமே பிரும்ம ரகசியத்தைக் கற்றவர். அவர் பல ஞான புருஷர்களையும் சந்தித்து விவாதித்துத் தெளிவது போல் இந்நூல் அமைந்திருக்கின்றது.   

1.உபநிஷதம் பற்றி - கார்க்கியிடமும் 
2.லோகாயதம் பற்றி - சார்வாகரிடமும் 
3.சமணம் பற்றி - மகாவீரரிடமும் 
4.பௌத்தம் பற்றி - ஆரியசங்கரிரடமும் 
5.சாங்கியம் பற்றி - கபிலரிடமும் 
6.யோகம் பற்றி - பதஞ்சலியிடமும் 
7.நியாயம் பற்றி - கௌதமரிடமும் 
8.வைசேஷிகம் பற்றி - கணாதரிடமும் 
9.மீமாம்சம் பற்றி - ஜைமினியிடமும் 
10.பட்ட மீமாம்சம் பற்றி - குமாரிலபட்டரிடமும் 
11.அத்வைதம் பற்றி - சங்கரரிடமும் 
12.விசிஷ்டாத்வைதம் பற்றி - இராமானுஜரிடமும் 
13.துவைதம் பற்றி - மத்வரிடமும் 
14.சைவசித்தாந்தம் பற்றி - உமாபதி சிவத்திடமும் 

உரையாடி நசிகேதன் ஆன்மஞானத்தைத் தெளிவுபடுத்துகின்றனர்.

கேட்பவரும், தெளிவுபடுத்துபவர்களும் மகா ஞானிகள். ஆகவே, உண்மைகள் மிகவும் நன்றாகத் தெளிவு பெறுகின்றன. படிக்கும்போது, நம் மனத்தில் அவை அழுத்தமாகத் பதியவும் செய்கின்றன.

ஒவ்வொரு இந்துவிடமும், தத்துவவாதியிடமும் இருக்க வேண்டிய நூல் இந்தப் பிரும்ம ரகசியம்.

பிரும்ம ரகசியம் சிந்திக்கத் தூண்டும் ஆற்றல் கொண்டது. தெளிவுதரும் செம்மையும் அமைந்தது.           

ஆத்ம லாபமும், வாழ்வில் அமைதியும் தரும் ஜீவனுள்ள நூல், இந்த ஞான விளக்கமான பிரும்ம ரகசியம்.

படிப்பவர்க்கு அறிவையும் ஞானத் தெளிவையும் உயர்வையும் தரும் உயர்ந்த தமிழ் நூல் இந்தப் பிரும்ம ரகசியம்.

இதுவரை யாரும் செய்திராத அருமையான ஞான விசாரணை முயற்சி.

ஆசிரியர் ர.சு.நல்லபெருமாள் அவர்கள் தத்துவ ஞானங்களைக் கற்றுத் தெளிந்து, எளிய இனிய உரைநடைத் தமிழில் அருமையாக விளக்கிச் சொல்லுகிறார்கள்.

ஞானங்களின் சாரமான இந்தத் தத்துவ விளக்க நூலை வானதி பதிப்பக வெளியீடாக அனுமதியளித்த ஆசிரியர் திரு.ர.சு.நல்லபெருமாள் அவர்களுக்கு மிக்க நன்றி. அருமையான இந்த ஞானநூலை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 

- ஏ. திருநாவுக்கரசு - வானதி பதிப்பகம். 

எழுத்தாளர் பற்றி : ர.சு.நல்லபெருமாள் ஒரு முதுபெரும் தமிழ் எழுத்தாளர். சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான தமிழக அரசின் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்ற இவர், அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், ல.ச. ராமாமிருதம் போன்ற எழுத்தாளர்களின் எழுத்து காலகட்டத்தை சேர்ந்தவர். 
More Information
SKU Code VAN B 008
Weight in Kg 0.630000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ர.சு.நல்லபெருமாள் - R.S.Nallaperumal
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:பிரும்ம இரகசியம் - படைப்பின் விளக்கம் - ர.சு. நல்லபெருமாள் - Brahma Ragasiyam

Similar Category Products