Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

என் சீஸை நகர்த்தியது யார்? - பேட்ரிக் ஸ்பென்சர் ஜான்சன் - En Cheesai Nagarthiyadhu Yaar ?- WHO MOVED MY CHEESE ? - Tamil - Dr. SPENCER JOHNSON

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4404
₹350.00
பிணைப்பு: கடின அட்டை; 
பக்கங்கள்: 100; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ ISBN-10: 8186775250
ISBN-13: 978-8186775257

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

1 கோடிக்கும் மேல் விற்பனையாகியுள்ள புத்தகம்.

உங்கள் வேலையிலும் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களைத் திறம்படக் கையாள்வதற்கான ஒரு வியத்தகு வழி. 

உலகின் மிகப் பிரபலமான நிர்வாக முறையை எடுத்துரைக்கும் 'ஒன் மினிட் மேனேஜர்' புத்தகத்தின் இணையாசிரியர்கள்.

ஒரு சிறிய அரிய பொக்கிஷம். 

ஸ்பென்சர் ஜான்சனின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு.
யுஎஸ்ஏ டுடேயில் முதலிடம் ! 
நியூயார்க் டைம்ஸில் முதலிடம் !
வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் முதலிடம் !
பிசினஸ் வீக்கில் முதலிடம் !

என் சீஸை நகர்த்தியது யார்? (ஆங்கிலம்:Who Moved My Cheese?), மாற்ற மேலாண்மையை மிக எளிய கதையின் மூலம் சித்தரிக்கும் ஒரு சுயமுன்னேற்ற நூல் ஆகும். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் எப்படி உங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றி கற்று தரும் புத்தகம்.  காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, பணம், உடல் நலம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவற்றை எவ்வாறு உங்களின் வளர்ச்சிக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அழகாக சொல்லப் பட்டிருக்கிறது. செப்டம்பர் 8, 1998 ஆம் ஆண்டு, ஸ்பென்சர் ஜான்சன் என்பவரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப் பட்டது. 37 மொழிகளில் எழுதப்பட்டு 26 மில்லியன்கள் விற்பனை செய்யப்பட்ட மேலாண்மை வர்த்தக நூலாகும்.

இது தமிழில் நாகலட்சுமி சண்முகம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸினால் 2012-ல் வெளியிடப்பட்டது.

மாற்ற மேலாண்மையைக் கருவாகக் கொண்டு இரு சுண்டெலிகளும், இரு குள்ளர்களும் தங்களது உணவிற்காக சீசை (பாலாடைக்கட்டியைத்) தேடி அலைவதாகும்.      

புத்தக விமர்சனம்:-
"ஜெர்மனியில் இருந்து இந்தியா வரை, எல்லோருமே 'என் சீஸை நகர்த்தியது யார்?' என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்." - த கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்.

இப்புத்தகத்தில் இருந்து நீங்கள் கீழ்கண்டவற்றைக் கற்றுக் கொள்ளலாம்:
- மாற்றம் வரக்கூடும் என்று எதிர்பார்த்து இருப்பது எப்படி 
- மாற்றத்திற்கு ஏற்ப வேகமாக மாறுவது எப்படி
- மாற்றத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி 
- மாற்றம் மீண்டும் மீண்டும் வந்தாலும் அதற்கேற்ப வேகமாக மாறுவது எப்படி 

"ஸ்பென்சர் ஜான்சனின் தனித்துவமிக்க உள்நோக்குகளும், கதை சொல்லும் திறனும், எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிறந்து விளங்க விரும்பும் அனைவரும் விரைவில் படித்துப் புரிந்து கொள்ளும்படியான ஓர் அறிய புத்தகமாக இப்புத்தகத்தை ஆக்குகின்றன" 
- ரேண்டி ஹாரிஸ், முன்னாள் துணைத் தலைவர், மெரில் வின்ச் இன்டர்நேஷனல்.

இப்புத்தகத்தைப் போற்றிப் புகழும் பெருநிறுவனங்களின் சில:
AMWAY;  
APPLE; 
CITIBANK; 
DELL; 
GENERAL MOTORS; 
IBM; 
KODAK; 
MARRIOTT; 
MERCEDES BENZ; 
NESTLE; 
PEPSI; 
US ARMY, NAVY & AIR FORCE; 
XEROX.

ஆசிரியர்: பேட்ரிக் ஸ்பென்சர் ஜான்சன் ஒரு அமெரிக்க மருத்துவர் மற்றும் ஆசிரியர். இவர் Value Tales Series குழந்தைகள் புத்தகங்கள் மூலமாகவும், மற்றும் அவரது 1998 ஊக்கப் புத்தகம் 'Who Moved My Cheese' மூலமும் பெரும் புகழ் ஏணியை எட்டினார்.                                

அறிமுகம்: கென்னத் ஹார்ட்லி பிளாஞ்சர்ட் ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். அவரது விரிவான எழுத்து வாழ்க்கை 60 க்கும் மேற்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியது, அதில் பெரும்பாலானவை இணை-எழுதப்பட்ட புத்தகங்கள்.   

மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4404
Weight in Kg 0.250000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788186775257
Author Name Dr. SPENCER JOHNSON. Foreword by KENNETH BLANCHARD. Translator - Nagalakshmi Shanmugam. ஸ்பென்சர் ஜான்சன். அறிமுகம் - கென்னத் பிளான்சார்டு. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name Manjul Publishing House Pvt. Ltd. @ மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:என் சீஸை நகர்த்தியது யார்? - பேட்ரிக் ஸ்பென்சர் ஜான்சன் - En Cheesai Nagarthiyadhu Yaar ?- WHO MOVED MY CHEESE ? - Tamil - Dr. SPENCER JOHNSON

Similar Category Products





Other Books by Dr. SPENCER JOHNSON. Foreword by KENNETH BLANCHARD. Translator - Nagalakshmi Shanmugam. ஸ்பென்சர் ஜான்சன். அறிமுகம் - கென்னத் பிளான்சார்டு. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்