Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஞான வாசிட்டம் மெய்ஞ்ஞானத் திரட்டு - பா.கமலக்கண்ணன் - Gnana Vaasittam Meignana Thirattu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 413
₹80.00
ஆன்மீகம் நூல்.
காகித அட்டை (பேப்பர்பேக்); 
108 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதல் பதிப்பு: அக்டோபர் 2018; 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);  
வானதி பதிப்பகம். 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் ஞான வாசிட்டம் மெய்ஞ்ஞானத் திரட்டு, பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

முன்னுரை:
அயோத்தி நகரை ஆட்சி செய்த மாமன்னன் தசரதச் சக்கரவர்த்தியின் மூத்த மகனாகிய இராமபிரான், வில் ஏந்தாத சிறிய வயதில், வசிஷ்ட மகரிஷியிடம் குருகுலக் கல்வி கற்றார். அப்போது வசிஷ்டர், இராமனுக்குப் பல முனிவர்கள் மற்றும் மன்னர்களின் ஞான அனுபங்களைப் பற்றிய கதைகளைப் போதித்தார்.

வசிஷ்ட மகரிஷிக்கும் இராமபிரானுக்கும் இடையே நடந்த உரையாடல்களை, வால்மீகி முனிவர் ஒரு இலட்சம் வடமொழி சுலோகங்களாகப் பரத்வாஜ மகரிஷிக்குக் கூறினார். காஷ்மீரத்துப் பண்டிதரான அபினந்த ஆச்சாரியார் என்பவர் அப்பெருநூலிலிருந்து ஆறாயிரம் சுலோகங்களைத் திரட்டி, ஒரு குறுநூலை உருவாக்கினார். பின்னர், வீரை என்ற நகரத்தில் மாதவப்பட்டர் குலத்தில் தோன்றிய ஆளவந்தான் என்பவர், அந்த ஆறாயிரம் சுலோகங்களைத் தமிழில் 2055 பாடல்களாக "ஞானவாசிட்ட இராமாயணம்" என்ற தலைப்பில் உருவாக்கினார்.

ஞான வசிட்டம் என்ற 2055 பாடல்களைக் கொண்ட தமிழ் நூல் இரண்டு தொகுதிகளாக 1924ஆம் ஆண்டிலும், 1974ஆம் ஆண்டிலும் வெளிவந்தன என்று அறிந்தேன். என்னுடைய தேடுதலில் 1974இல் வெளிவந்த முதல் தொகுதி மட்டும் பாத்து ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. இரண்டாம் தொகுதி, 1924ஆம் ஆண்டு பதிப்பு, 2017ஆம் ஆண்டில்தான் கிடைத்தது.

'ஞான வாசிட்டம்'என்னும் நூல் வழக்கழிந்து போகும் நிலையில் உள்ளது. இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தால் இந்த நூல் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும். ஆகவே இந்த நூலை ஆய்வு செய்யத் தொண்டங்கினேன். ஞான நூல்களை வாங்கி வாசிப்போர் குறைந்து வரும் நிலையில் என்னுடைய ஆய்வு நூலை மிகவும் சுருக்கமாகவும் பயனுள்ள வகையிலும் உருவாக்கக் கருதி ஞானக் கருவூலமாக விளங்கும் 115 பாடல்களை திரட்டினேன்.

பொருளடக்கம்: 
1.வைராக்கியப் பிரகரணம் (1.அவதாரிகை; 2.சுகப்பிரமரிஷி); 
2.முமூட்சுப் பிரகரணம் (அவதாரிகை); 
3.உற்பத்திப் பிரகரணம் (1.ஞான விண்மகன்; 2.லீலை; 3.இதோபதேசம்); 
4.திதிப் பிரகரணம் (1.தாமவியாழகடர்; 2.வீமபாசதிடர்) ;  
5.உபசாந்திப் பிரகரணம் (1.ஜனகர்; 2.புண்ணியபாவனர்; 3.பிரகலாதன்; 4.உத்தலாகன்; 5.சுரகு; 6. பாசவிலாசர்; 7.வீதகவ்வியன்; 8.காக புஜண்டர்; 9.தேவபூசை; 10.வேதாளம்; 11.பகீரதன்; 12.சிகித்துவஜன்; 13.கஜன்; 14.மித்தையா புருடன்; 15.இட்சவாகு; 16.மானு வேடன்); 
6.நிருவானப் பிரகரணம் (அவதாரிகை); 
7.இந்நூலில் ஒளிரும் முத்துகள்.
இணைப்பு (சித்தர் முறையில் யாகத்தீயில் தெய்வத் தோற்றங்கள்).

ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
More Information
SKU Code VAN B 413
Weight in Kg 0.440000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:ஞான வாசிட்டம் மெய்ஞ்ஞானத் திரட்டு - பா.கமலக்கண்ணன் - Gnana Vaasittam Meignana Thirattu

Similar Category Products

Other Books by பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan