ஹாரி பாட்டரின் முதல் நாவலான இதில், ஹாரி பாட்டர் கதையில் பின்னாட்களில் வரும் பல முக்கியமான விஷயங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
கும்மிருட்டான ஒரு இரவில், வயது முதிர்ந்த – விசித்திர உடையணிந்த ஒரு தாத்தா, ஒரு குழந்தையை ஒரு வீட்டின் முன் கொண்டுவந்து வைப்பதில், படம் தொடங்குகிறது. அதன்பின், ஹாரி பாட்டர் என்ற சிறுவன், தனது பதினோராவது பிறந்தநாளில் அடியெடுத்து வைப்பதைப் பார்க்கிறோம். அவனுக்குத் தாய் தந்தையர் இல்லை. தனது மாமாவான ’வெர்னான்’ மற்றும் அவரது மனைவி பெதூனியா ஆகிய இருவரும், அவனை வளர்த்து வருகிறார்கள். வீட்டின் சம்பளமில்லா வேலைக்காரனாக இருந்து வருகிறான் ஹாரி.
ஒருநாள், ஒரு ஆந்தை, ஒரு கடிதத்தை எடுத்துவந்து, இவர்கள் வீட்டின்முன் போடுகிறது. அதனைப் பார்த்தவுடன் கடுப்பாகும் வெர்னான், அந்த ஆந்தைக் கடிதத்தை எடுத்துக் கிழித்துப் போட்டு விடுகிறார். ஆனால், தொடர்ந்து ஆந்தைகளின் கடித மழையால் கலவரமடையும் வெர்னான், யாருமற்ற ஒரு இடத்துக்குத் தனது வீட்டை மாற்றிக் கொள்கிறார்.
ஒரு நாள், இரவில், திடும் என்று இவர்கள் வீட்டுக் கதவு உடைக்கப்பட, அங்கு வரும் நெடிதுயர்ந்த பூதம் போன்ற ஒரு ஆள் – பெயர் ரூபியஸ் ஹாக்ரிட்(ராப்பி கால்ட்ரேன் – கோல்டன் ஐ மற்றும் வேர்ல்ட் இஸ் நாட் எனஃப் படங்களில் பாண்டுக்கு உதவும் தாதா), ஹாரி பாட்டருக்கு, ஹாக்வார்ட்ஸ் என்ற பள்ளியில் சேர அனுமதி கிடைத்திருப்பதாகச் சொல்லி, அவனைத் தன்னுடனேயே அழைத்துச் சென்று விடுகிறான்.
அதிசயமடையும் ஹாரி, அந்தப் பள்ளியைப் பற்றி ஹாக்ரிட்டிடம் வினவ, தொலைதூரத்தில், சிறுவர்களுக்கு மந்திரக் கலைகளைக் கற்றுத் தரும் பள்ளி ஒன்று இருப்பதாகவும், அந்தப் பள்ளியில் ஹாரிக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் சொல்கிறான். அதே பள்ளியில் தான் ஹாரியின் பெற்றோரும் படித்ததாகவும் சொல்கிறான்.
ஆசிரியர் : ஜே. கே. ரௌலிங் ஒரு ஆங்கில புதின எழுத்தாளர். ஹாரிபாட்டர் கதை மூலம் உலகப் புகழ் பெற்றுள்ள ஜே.கே.ரவுலிங், இந்த இடத்தை பிடிக்க தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. ரவுலிங் அவரது பாத்திரங்கள்க்கு-செல்வந்தர்கள் மற்றும் குழந்தைகள் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றது, அவரின் கதைகளை குழந்தைகள் மீண்டும் மீண்டும் வாசிப்பதை பெருமளவில் விரும்புகின்றனர்.
மொழிபெயர்ப்பாளர் பி. எஸ். வி. குமாரசாமி - 10 புத்தகங்களுக்கு மேல் அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.