- Home /
- HOW TO STOP WORRYING AND START LIVING - Tamil - கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி - டேல் கார்னகி
- Description
-
Details
பணக்கவலைகளை அறவே நீக்குவது எப்படி?களைப்பேயின்றி என்றென்றும் இளமையாக இருப்பது எப்படி?ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்வது எப்படி?வேலை, தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படி?உங்களது தனித்துவத்தை வளர்த்தெடுத்து அதைப் பேணிக்காப்பது எப்படி? என்று வாழ்க்கைத் தேவையானவற்றிற்கான பதில்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.ஒரு நாவலைப் போல, படிக்க சுவாரசியமாகவும், அதே சமயம் வாழ்வில் எளிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இருக்கும். பதற்றங்களும், பயங்களும், கவலைகளும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழத் தேவையில்லை என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.ஆயிரக்கணக்கான மக்கள் கவலையை எப்படி வெற்றி கொண்டுள்ளனர் என்பதைப் பற்றிய ஒரு விறுவிறுப்பான, சுருக்கமான ஆவண அறிக்கியை எழுத நான் முயற்சித்திருக்கிறேன். ஒரு விஷயம் உறுதி: இது எளிதில் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு புத்தகம். அதை நீங்கள் தயக்கமின்றிப் பின்பற்றலாம்.நம் வாழ்வில் இருந்து கவலையை விரட்டுவதற்கு வெற்றிகரமாகச் பரிசோதிக்கப்பட்டச் சோதனைகளின் தொகுப்பு இது. இருந்தாலும், நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு எச்சரிக்க விரும்புகிறேன்: இப்புத்தகத்தில் எந்தவொரு புதிய விஷயத்தையும் உங்களால் கான முடியாது. ஆனால் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படாத பல விஷயங்களை நீங்கள் இதில் காண்பீர்கள். கச்சிதமான வாழ்க்கையை வாழ்வதற்குப் போதுமான விஷயங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். நம் பிரச்சனை அறியாமை அல்ல, செயலின்மைதான். பண்டைய அடிப்படை உண்மைகள் பலவற்றை மீண்டும் எடுத்துரைத்து, விளக்கிக் காட்டி, சீரமைத்து, பக்குவப்படுத்தி, அவற்றின் பெருமையைப் பறைசாற்றி, அவற்றை நீங்கள் உங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதேனும் செய்ய உங்கலைத் தூண்டுவதுதான் இப்புத்தகத்தின் நோக்கம்.உள்ளடக்கம்:-நுழையுமுன்அ. நான் ஏன் இப்புத்தகத்தை எழுதினேன்ஆ. இப்புத்தகத்தைத் திறம்பட உபயோகிக்க ஒன்பது பரிந்துரைகள்பகுதி ஒன்று : கவலையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள்1.நிகழ்காலத்தில் வாழுங்கள்2.கவலையளிக்கும் சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான வெற்றிச் சூத்திரம்3.கவலையின் விளைவுபகுதி இரண்டு : கவலையை ஆய்வு செய்வதிலுள்ள அடிப்படை உத்திகள்4.கவலைகளைத் தோற்றுவிக்கும் பிரச்சினைகளை ஆய்வு செய்து அவற்றைத் தீர்ப்பது எப்படி5.உங்களது தொழில் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படிபகுதி மூன்று : கவலைப் பழக்கம் உங்களை நாசமாக்குவதற்கு முன் அதை முறியடிப்பது எப்படி6.உங்கள் மனத்தில் இருந்து கவலையை நீக்குவது எப்படி7.சிறு விஷயங்கள் உங்களைச் சீர்குலைக்க அனுமதிக்காதீர்கள்8.இந்த விதி உங்கள் கவலைகளில் பலவற்றை ஒழிக்கும்9.தவிர்க்க முடியாதவற்றுடன் மல்லுக்கு நிற்காதீர்கள்10.இழப்பு - நிறுத்த உத்தரவை அமல்படுத்துங்கள்11.மரத்தூளை இரம்பத்தால் அறுக்க முயற்சிக்காதீர்கள்பகுதி நான்கு : மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரக்கூடிய மனப்போக்கை உருவாக்குவதற்கான ஏழு வழிகள்12.உங்கள் வாழ்க்கையைப் பரிபூரணமாக மாற்றக்கூடிய எட்டு வார்த்தைகள்13.பழிக்குப் பழி வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்14.நீங்கள் இதைச் செய்தால், நன்றியின்மை பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டியிருக்காது15.உங்கள் வசம் உள்ளவற்றிற்குப் பதிலாக, நீங்கள் பத்து இலட்சம் டாலர்களைப் பெற்றுக் கொள்வீர்களா?16.உங்களைப்போல் இவ்வுலகில் வேறொருவர் இல்லை17.உங்களிடம் ஓர் எலுமிச்சம் பழம் இருந்தால், அதைப் பிழிந்து எலுமிச்சம்பழ ஜூஸ் தயாரியுங்கள்18.இரண்டே வாரங்களில் உங்கள் மனச்சோர்வைக் குணமாக்குவது எப்படிபகுதி ஐந்து : கவலையை வெற்றி கொள்வதற்கான கச்சிதமான வழிமுறை19.என் பெற்றோர் கவலையை எப்படி வெற்றி கொண்டனர்பகுதி ஆறு : விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படுவதில் இருந்து விடுபடுவது எப்படி20.இறந்துபோன நாயை எவரும் எட்டி உதைப்பதில்லை21.நீங்கள் இதைச் செய்தால், விமர்சனம் உங்களைக் காயப்படுத்தாது22.நான் செய்துள்ள முட்டாள்தனமான காரியங்கள்பகுதி ஏழு : களைப்பையும் கவலையையும் தவிர்த்து உங்கள் ஆற்றலையும் உற்சாகத்தையும் உயர்வாக வைத்துக் கொள்வதற்கு ஆறு வழிகள்23.ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரத்தைப் பெறுவது எப்படி24.உங்களுக்குக் களைப்பை ஏற்படுத்தும் விஷயம் குறித்து உங்களால் என்ன செய்ய முடியும்25.களைப்பை தடுத்து, என்றும் இளமையாகத் தோற்றமளிப்பது எப்படி26.களைப்பையும் கவலையையும் தடுப்பதற்கு உதவும் நான்கு நல்ல பழக்கங்கள்27.களைப்பு, கவலை, மற்றும் கோபம் ஆகியவற்றை உருவாக்கும் சலிப்பைக் களைவது எப்படி28.தூக்கமின்மை பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்ப்பது எப்படிஆசிரியர் : டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார். - Specification
-
Specification
SKU Code PRK B 4332 Weight in Kg 0.2500 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. 9788183227995 Author Name DALE CARNEGIE - டேல் கார்னகி, நாகலட்சுமி சண்முகம் Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம் - Reviews
-
Customer Reviews 1 item(s)
- Must read
-
A life changing book
Read More