Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

குறையொன்றுமில்லை I - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Kuraiyondrumillai I - Kurayondrumillai Volume 1 - Sri Mukkur Lakshminarasimhachariar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 426
₹200.00

ஆன்மீகம் நூல்.

காகித அட்டை/ பேப்பர்பேக்;

368 பக்கங்கள்;

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: டிசம்பர், 1997;  

முப்பத்தி ஐந்தாம் பதிப்பு, பிப்ரவரி, 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் குறையொன்றுமில்லை - I, முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.    
 
முன்னுரை:
"ஆஸ்திக ஸமாஜம்" என்றாலே ஈரரசு படாதபடி சென்னையில் வீனஸ் காலனியில் உள்ள "ஆஸ்திக ஸமாஜ"த்தையே குறிக்கும். கலை பல வளர்க்கும் மாபெரும் ஸ்தாபநம் அது. அதில் வருடா வருடம் உபந்யஸிக்கக் கொடுத்து வைத்தவர்களில் அடியேனும் ஒருவன். சென்ற வருடம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் திருநாமமான "விச்வம்" என்ற சொல்லின் பெருமையை விவரித்துக் கொண்டிருக்கும் பொது கல்கி வார இதழின் பதிப்பாசிரியர் உயர்திரு கி.ராஜேந்திரன் அவர்கள் நாள்தோறும் வந்து கேட்டு ஆனந்தித்தருளினார். உபந்யாசம் முழுவதும் ஒலிநாடாவில் ஏற்றப்பட்டது. கலியின் வலிமையைப் போக்கும் கல்கியில் உபந்யாஸத்தின் தொகுப்பு ஒலிநாடாவில் பதிவானதைக் கேட்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களின் அருள்வாக்கின்படி "குறையொன்றுமில்லை" என்கிற தலைப்பில் 47 வாரங்கள் தொடர்ந்து வந்தது. இதைத் தனிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற உயர்ந்த கருத்துடன் உயர்திரு கி.ராஜேந்திரன் அவர்களும், "வானதி பதிப்பகத்தின்" உரிமையாளர் உயர்திரு திருநாவுக்கரசு அவர்களும் கலந்தாலோசித்து அதைத் தற்போது செயல்படுத்தியிருக்கின்றனர்.
 
"குறையொன்றுமில்லை" படிப்பவர்க்குக் குறையொன்றுமில்லையே"
- முக்கூர் லக்ஷ்மீநரஸிம்ஹாசாரியார்.
  
காருண்யம் பகவானிடத்திலே நாம் எல்லாவற்றையும் கொடுத்தாலும், ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்துவிட்டு ராஜ பதவியை கேட்கிற மாதிரிதான்.
 
நாம் எது பண்ணினாலும் அவனுடைய காருண்யத்துக்கு முன்பு அது விலை செல்லாது.
 
வேதம் 
வேத கோஷம் நம்மை ஈர்த்து உட்கார வைக்கிறது. பாராயணம் முடியும் வரை உட்கார்ந்து கேட்க்கும் எண்ணம் யாருக்கு வருகிறதோ, அவரை பகவான் நிச்சியம் பார்ப்பான்.
 
தாயார் 
பொறுமையே உருவானவள் பூமி பிராட்டி. நாம் எவ்வளவுதான் தப்பு செய்தாலும் அதை பகவானிடத்தில் சொல்லமாட்டாள். நாம் ஒரு துளி நல்லது செய்தல் கூடஅதை பெரிதுபடுத்தி அவனிடத்திலே சொல்லுவாள். அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு.
 
அதிதி தேவோ பவ
கிரஹத்துக்கு வரக்கூடிய அதிதிகளிடத்திலே எம்பெருமான் இருக்கிறான்.  அதனால் தான் எம்பெருமானை வேதம் சொல்கிறபோது 'மாத்ரு தேவோ பவ ! பித்ரு தேவோ பவ ! ஆச்சார்ய தேவோ பவ ! அதிதி தேவோ பவ ! என்கிறது.  அதிதியை தெய்வமாக நினைக்க வேண்டும்.  ஏனென்றால் பகவானே நமக்கு இவன் அன்னமிடுகிறானா என்று அதிதியாய் பார்க்க வருவான்.  ஆகையினாலே, அதிதிகளாய் வரக்கூடியவர்களை உடனே வரவேற்று உபசரிக்க வேண்டும்.
 
அன்னமயகோசம் 
அன்னத்தைக் குறைதால்தான் அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்படும். வேதமானது அன்ன சூக்ததிலேயே சொல்கிறது. "எவன் என்னை நிறைய சாபிடுகிறானோ அவனை நன் சாப்பிடுகிறேன்" என்று அன்னமே சொல்கிறது.
 
"யோ புங்தே அஹமேவ புங்தே"
 
ஆகையால் அன்னத்தை நிறைய சாபிட்டால் தான் பலம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அன்னத்தை குறைத்து அனுபவித்தால், அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்படுகிறது. வியாதி எல்லாம் நீங்குகிறது.                                                                                                                                                                
 
ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமிகள் அருளியது - குறையொன்றுமில்லை.
 
விச்வஸ்ய பதி என்று கிருஷ்ணனைக் கொண்டாடுகிறோம்.
 
பகவான் நாராயணன்தான் வாசுதேவனாய் வந்து பிறந்தான். இந்த பலராம, கிருஷ்ண சப்தங்கள் இரண்டுமே விச்வ சப்தத்தினால் அறியப்படுகின்றன.
 
இந்த விஷயத்தில் உபநிஷத் சொல்வது போலவே விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் சொல்கிறது. அதனால்தான் பெரியவர்களுக்கு ஸஹஸ்ரநாமத்திலே ஓர் ஈடுபாடு.
 
யார் பிரும்மம் என்று விசாரித்தால், தேவகி புத்ர என்று சொல்கிறது உபநிஷத். அவன் புண்டரீகாக்ஷன். சர்வத்தையும் தாங்கக்கூடிய எம்பெருமான்.
 
வேத, வைதீகமான முறை கிருஷ்ணாவதாரத்தில் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் பிறந்தவாறும், வளர்ந்தவாறும் எண்ணினாலே போதும், அதுவே யக்ஞப்ரகரணம்.
 
யக்ஞத்துக்கு சில நியமங்கள் உண்டு. அரணியைக் கடைந்து அக்னி உண்டு பண்ணவேண்டும். அந்த நாளில் நியமமாய் வாழ்ந்தவர்கள் மந்திரத்தைச் சொல்லி கையைக் காண்பித்தாலே அக்னி உண்டாகிவிடும்.
 
அவ்வாறு உண்டாக்கிய அக்னியை ஒரு நதியைக் கடந்து கொண்டு வர வேண்டும். நதிக்கு வலப்புறத்திலே ஒரு யக்ஞவாடிகை அமைக்கவேண்டும். அந்த யக்ஞவாடிகையிலே அக்னியை பிரதிஷ்டை பண்ண வேண்டும். அங்கே பல யாகங்கள் செய்து வேறு இரண்டு யக்ஞவாடிகைகளுக்கு அதே அக்னியைக் கொண்டு போக வேண்டும். அந்த மூன்று அக்னியிலும் நடுவிலே ஜ்வலிப்பவன் பரமாத்மா.
 
இப்படி விசேஷமாக யக்ஞம் செய்து சேவித்தவர்களுக்கெல்லாம் பகவான் அனுக்ரஹம் விசேஷமாக ஏற்படுகிறது.
 
ஆகையினாலே, “கிருஷ்ணாவதாரமும் யக்ஞமும் ஒன்றுதான்” என்று ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். இதை நாம் மனத்திலே நினைத்துப் பார்க்க வேண்டும்.
 
தேவகி, வசுதேவர் என்கிற அரணிக் கட்டையிலிருந்து கிருஷ்ணன் என்கிற அக்னி உண்டானான். 'அக்னி' என்கிற சப்தத்தினால் மறைத்துச் சொல்லப்படக்கூடியவன் பரமாத்மா.
 
அந்த 'அக்னி'யை வசுதேவர் சிரசிலே எழுந்தருளப் பண்ணினார். ஆற்றைக் கடந்து வந்தார். முழங்கால் அளவுக்கு வடிந்து வருடிக் கொடுத்தாள் யமுனா நதி.ஆதிசேஷன் ஆயிரம் சிரசுகளால் குடை பிடித்தான்.
மறு கரை அடைந்து நந்தகோபனுடைய திருமாளிகையிலே காருகபத்ய அக்னி குண்டமாகிய நந்த கோபன் மாளிகையிலே கிருஷ்ணனாகிய அக்னியைப் பிரதிஷ்டை செய்தார்.
 
ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமிகள்.
குறையொன்றுமில்லை.                                                                                                                                            
ஆசிரியர் குறிப்பு : ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள். இந்த ஐந்து நரசிம்மர்களும் தம்மைக் காட்டிக்கொண்டது ஸ்ரீ உ.வே. முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் என்ற புகழ் பெற்ற நரசிம்ம உபாசகரிடம். இவர் உலக நன்மைக்காக நரசிம்மரின் அவதார தினமான சுவாதி நட்சத்திரங்களில் நூற்றியெட்டிற்கும் மேலான யக்ஞங்களை நடத்தியுள்ளார்.
 
இவற்றில் சில, பிரபல நரசிம்ம ஷேத்திரங்களான, மங்களகிரி, வேதாத்ரி, கடிகாசலம் என்ற சோளிங்கர், அந்தர்வேதி, யாதகிரி, ஷோபநாத்ரி, வாடபல்லி, ஸிம்ஹாசலம், நைமிசாரண்யம், பிருந்தாவனம், ஸ்ரீ ரங்கம், நங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
 
ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் மட்டபல்லி யக்ஞ வாடிகை சந்நிதானத்தில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியாரின் நாலடி உயரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் சிலாரூபம். இவர் நிகழ்த்திய நூற்றியெட்டிற்கும் மேற்பட்ட சுவாதி யக்ஞங்களில், யக்ஞ மூர்த்தியாக இருந்த லஷ்மி நரசிம்மர், இன்றும் மாதந்தோறும் சுவாதித் திருமஞ்சனம் பெற்றுக்கொண்டு அழகுறக் காட்சியளிக்கிறார்.
More Information
SKU Code VAN B 426
Weight in Kg 0.610000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:குறையொன்றுமில்லை I - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Kuraiyondrumillai I - Kurayondrumillai Volume 1 - Sri Mukkur Lakshminarasimhachariar

Similar Category Products

Other Books by முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar