Details
About spirituality. நம்மால் எதைப்பற்றியும் சொல்லாமல் இருக்க முடியாது. பகிராமல் வாழ முடியாது. நேற்று ஒரு கனவு கண்டேன் என்பதும், இன்றைக்கு எங்கள் வீட்டில் இந்த உணவு என்பதும், எப்போதும் நான் வெள்ளை உடைகள் தான் அணிகிறேன் என்பதும் நம்மால் நெருங்கியவரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. அதை போலவே நான் இடையறாது என்னை அவதானித்துக் கொண்டிருக்கிறேன். என் மனதை உள்மனதை கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லத் தோன்றும். உங்களுடைய இந்த விஷயம் உடைபட்டு போவதற்கு இது முக்கிய காரணமாக அமையும். ஏனெனில் இதைப்பற்றி உடனடியாக ஏதேனும் ஒருகருத்து சொல்வார்கள். எதற்கு வெள்ளை உடை அணிகிறாய். கருப்பு உடை தான் நல்லது என்று சொல்வார்கள். இதோடு நீண்ட தாடியும்.