இனிது இனிது காதல் இனிது பாகம் -1 - பாலகுமாரன் - Inidhu Inidhu Kaadhal Inidhu 1 - Balakumaran - Inithu Inithu Kadhal Inithu Enidhu Enithu Paagam 1 Part 1 Kathal Kaathal
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller

More Products
Availability: In stock
SKU:
TMN B 046
₹130.00
காதல் தொடர் சிறுகதைகள்.
காகித அட்டை / பேப்பர்பேக்;
256 பக்கங்கள் ;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: ஆகஸ்ட், 1991;
எட்டாம் பதிப்பு :ஜூலை, 2017.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
புத்தகத்திலிருந்து:
இருள் - ஒளி. மயக்கம்-தெளிவு. அழுகை-சிரிப்பு. பயம்-துணிவு. அறிவு - அறியாமை. இனிப்பு - கசப்பு. இன்பம் துன்பம் இவையுள் ஒன்றை மட்டும் விரும்பினால், அதற்கு எதிரான தன்மீது வெறுப்புப் பிறக்கும். விரும்புவதை நல்லது என்றும், வெறுப்பதைக் கேட்டது என்றும் பிரித்துக் கொள்கிறோம். விருப்பு வெறுப்பு இல்லையெனில் நல்லதுமில்லை, கேட்டதுமில்லை; உள்ளது இருக்கும்.
உள்ளத்தை உள்ளபடி பார்ப்பது என்பது உயர்வான இடம். காது கொடுத்துக் கேட்பதும், கண் திறந்து பார்ப்பதும், கலந்து போகாமல் தனித்திருந்து சிந்திப்பது விலகலை உங்களுக்குத் தரும்.
விலக விலக உலக விஷயங்கள் மிகச் சுலபமாய்ப் பிடிபடும்.
"சரி, ஒரு அக்கறையின்மையோடு இருக்கவேண்டும். என்கிறாயா, பாலகுமாரா?" என்ற கேள்வி வரலாம்.
அக்கறையின்மை என்பது அறியாமை. அது காதலற்ற நிலை. எல்லாக் கதைகளையும் காதலோடு, அக்கறையோடு கேளுங்கள். ஆனந்தப்படாமல், துக்கப் படாமல் பாருங்கள்.அதே சமயம் உன்னிப்பாய் பாருங்கள். பிறர் துக்கம், சந்தோஷம், சகலமும் பாருங்கள்.
உங்களுக்கும் இவை நேரலாம் என்று பாருங்கள். 'நான் பொழச்சேம்பா' என்று ஓடாது பாருங்கள். "நல்ல வேளை எனக்கு நடக்கலை' என்ற குதூகலம் இல்லாது பாருங்கள். 'போடு இன்னும் நாலு போடு லவ்வா பண்றே..." என்பதிலும் பங்கு பெறாமல், 'லவ்தானே பண்ணான். அதுக்கு இத்தினி அடியா' என்கிற பதட்டமும் இல்லாது பாருங்கள்.
காதலின் பொருட்டு இல்லையெனினும், வேறு எதன் பொருட்டோ அடியும் உதையும் அவமானமும், துக்கமும் உங்களுக்கும் வரலாம். அடி வாங்காத குழந்தையோ, அவமானப்படாத மனிதரோ உண்டா இங்கு ? நமக்கும் நேரலாம் என்கிற அக்கறை மனித நேயத்தின் முதல்படி.
தனக்கு நேரும்போது தாங்கி, அமைதியாவது இரண்டாவது படி.
காதல் என்பது ஒரு ஆண் பெண் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை... ஒருவனிடமிருந்து சகலரிடமும் பரவ வேண்டிய உன்னத உணர்வு. அதில் ஆணுக்குப் பெண் ஓர் ஆரம்பம். பெண்ணுக்கு ஓர் ஆண் ஆரம்பம். ஈர்ப்பதில் ஈடுபட்டு மலர, ஈர்க்காத இடத்திலும் மலரின் வாசம் பரவும்.
சகலமும் நேசிக்கத் தகுந்தவையே என்பது புரியும்.
"கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர், என்று சேக்ஸ்பியர் சொல்வதுண்டு. ஆனால் காதல் கயவர்களையும் நல்லவர்களாகவும் இனிய பண்பு மிக்கவர்களாகவும் மாற்றி விடுகிறது என்பது உண்மை. காதல் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தெளிவையும் எல்லாவற்றையும் விட நல்ல சிநேகிதத்தை தருமானால் சாகும் வரை காதலித்து கொண்டே இருக்கலாம்" "மரணம் பயம். தனிமை தரும் பயம். தனிமை என்பது மரண பயம். "
திருமணம் என்பது நம்பிக்கை. பரஸ்பர நம்பிக்கை. அந்த நம்பிக்கை வர ஆழ்ந்த காதல், ஆரவாரமற்ற அன்பு முக்கியம். நேசம் உண்மையெனில் ஆடாது, அதிராது, ஆவேசப்படாது. "
"மனிதன் உடலால் ஆனவன். மனசால் வாழ்பவன். இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. புறக்கணிக்க முடியாதவை. புறக்கணிக்க பிரிக்க விபரீதம் நிகழும்."
BOOK REVIEWS:
மதிப்பிற்குரிய பாலகுமாரன் அவர்கட்கு,
வணக்கம். ஜூ.வி.யில் முப்பத்து நான்கு வரம் தொடர்ந்து வெளியான 'இனிது இனிது காதல் இனிது' இன்றோடு நிறைவு பெற்றிருக்கிறது. ஜூ.வி. பாணியிலிருந்து மிகவும் மாறுபட்ட தொடர் என்றாலும், விகடன் நிறுவனத்தினர் முழு சுதந்திரத்துடன் உங்கள் கருத்துக்களை எழுத அனுமதித்தற்கு அவர்களைப் பாராட்டியே தீர வேண்டும்.
பாரதியின் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு பட்டினத்தார் பெண்கள் பற்றி கொண்ட கருத்தின் மறுபக்கத்தை விளக்க ஆரம்பித்த தொடர், உங்களின் அருமையான Touch-டன் முடிவுற்றது.
எத்தனை விதமான காதல்கள் எத்தனை விதமான Character-கள்?
காதலன் கண் இழந்த பின்பும், தன் காதலில் உறுதியாய் நின்ற அந்த மலையாளப் பெண்மணி, 'காதல் பெரிதா... படிப்பு பெரிதா' என்கிற கேள்வி எழுகையில் காதல் பெரிதுதான்... ஆனால் அதனைவிடப் படிப்பு பெரிது என்று தன் காதலியே உணர்த்த, அவளை நினைத்தவாறே மேல் படிப்பிற்காக அவளை விட்டு விலகும் காதலன்... தத்தம் அண்ணனும், அக்காவும் திருமணம் செய்து கொண்டதால் இரு குடும்பத்திற்குள்ளும் மனக் கசப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் எதிர்ப்பையும் மீறி மணமுடிக்கும் காதலர்கள்... தனது சிறு வயதுக் காதலை மனசுக்குள்ளேயே வைத்திருந்து பிற்காலத்தில் அந்தப் பெண்ணை அவளது கணவன் மூலமே சந்தித்து, அவளது மகளின் தெளிவைக் கண்டு பிரமிக்கும் பெரியவர்... தியேட்டரில் ஆரம்பிக்கும் கேலி, காதலாய் வளர பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நண்பர்கள் ஆதரவுடன் புது வாழ்க்கை தொடங்கும் காதலர்கள்...
இத்தொடரில் நீங்கள் வெற்றி பெட்ரா காதலர்களை மட்டுமல்ல, தோல்வியடைந்த காதலர்களைக் கூட அங்கங்கே சொல்லியிருக்கிறீர்கள்...
காதலில் மட்டுமல்ல, சகல விஷயங்களிலும் தெளிவுடன் இருக்க இந்தத் தொடர் அறிவுறுத்துகிறது. விரும்புவதை நல்லது என்றும், வெறுப்பதைக் கேட்டது என்றும் பிரித்துக் கொள்கிறோம். "விருப்பு வெறுப்பு இல்லையெனில் நல்லதுமில்லை, கெட்டதுமில்லை, உள்ளது இருக்கும்' என்ற வரிகள் யோசிக்க வைப்பவை. யோசித்தால் தெளிவு தரக் கூடியவை.
இத்தொடர் முழுதும் கட்டுரை பாணியிலேயே கொண்டு சென்றால் சொல்ல வந்த விஷயங்கள் நிறைய பேரை எட்டாது என்று கதை சொல்லும் பாணியிலேயே கொண்டு சென்று உங்கள் கருத்துக்களை அங்கங்கு தூவியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
-என்றென்றும் அன்புடன்,
ஆ.மோகன்குமார்.

ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
SKU Code | TMN B 046 |
---|---|
Weight in Kg | 0.040000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன் Balakumaran |
Publisher Name | திருமகள் நிலையம் Thirumagal Nilayam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%