- Home /
- இரும்பு குதிரைகள் - பாலகுமாரன் - Irumbu Kuthiraigal - Balakumaran
- Description
-
Details
என்னுரை:என் சூழ்நிலையை, எனக்கு நேர்ந்தவற்றை, என் அநுபவத்தை மட்டும்தான் எழுதுவேன் என்பதை நான் கட்டளைக் கல்லாகவோ , சுமையாகவோ, சங்கல்பகவரோ கொள்ள வில்லை.ஆயினும் அவ்விதம் எழுதுவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. இயல்பு தெரிகிறது. இதைவிட என் சூழ்நிலையில், என் அனுபவங்களில் எழுத இன்னும் விஷயம் இருக்கிறது. பகிர்ந்து கொள்ள செய்தி இருக்கிறது.எனக்கு சென்னையிலுள்ள டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம். பர்ச்சேஸ் உத்தியோகம், மனிதர்களை இங்கே சந்தித்த வண்ணமாகவே இருக்க வேண்டும்.உத்தியோகம் வயிற்றுப் பிழைப்பு என்றாலும், கவிதைபோல இதுவும் எனக்கு சுவாரஸ்யம். களுத்துப்பட்டியும், பிளாஸ்டிக் பெட்டியுமாய் வரும் புதிய சேல்ஸ் இளைஞன், என்னவானாலும் சிரிப்பே காட்டாத வியாபாரிகள், இடைத்தரகர்கள், களைப்பும் சிவப்புமாய் வருகிற டிரைவர்கள் அல்லது கிளீனர்கள், உன்னை மாதிரி எதனை பேரைப் பார்த்திருக்கிறேன் என்று முதல் த்வனியிலேயே காட்டிவிடும் பெரிய மனிதர்கள் சகலரையும் தினசரி சந்திக்க வேண்டும்.இவர்களின் பகல் வேஷம் தாண்டி இவர்களை உற்றுப் பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம்.அப்படி ஒவ்வொரு நெஞ்சாய் துருவ ஆரம்பித்தபோது உருவானது இரும்பு குதிரை.என்னோடு உத்தியோகமாய் பேசின டிரைவரையும் கிளீனரையும் நேசிக்கத் துவங்கி, நானும் லாரிகளை நேசிக்கத் துவங்கினேன்.போக்குவரது ஒரு தனி உலகம். சேகரித்த தகவல்களை நாற்பது சதவிகிதம்தான் நாவலில் வைக்க முடிந்தது. அவ்வளவுதான் வைக்க முடியும். பொழுதுபோக்கு இலக்கியம் என்று கட்டம் கட்டி இலக்கியத்தை ஜாலியான விஷயமாக மாற்றிவிட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு எண்ணெய் பிசுக்கும் டீசல் நெடியும் கலந்த ஒரு நாவல் மையத்தைச் சொல்லியிருக்கிறேன் இந்த நாவலில்.இதைக் காட்டிலும் கடினமான விஷயங்களை, தொடராய், வெகுஜனப் பத்திரிகைகளில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.ஏனெனில் வாசகர் தரம் நாளுக்கு நாள் வளர்ந்து திடப்பட்டு வருவதைக் காண்கிறேன். புரிந்து கொள்ளும் ஆவலோடு அவர்கள் முன் வருவதை அறிகிறேன். தமிழ் நாவல் இலக்கியம் நல்ல உச்சிகளைத் தொடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.என்றும் அன்புடன்,பாலகுமாரன்.“ரீகலெக் ஷ ன் ஆஃப் தாட்ஸ் மனுஷாளுடைய பெரிய சொத்து இது. நடந்ததை நினைவுக்குக் கொண்டுவந்து யோசனை பண்ணத் தன்னைப் பக்குவப் படுத்திக்கறது மனுஷாளுக்கு மட்டுமே உண்டு. மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ, காமமோ வந்துடறதில்லே. வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லை. கோபப்பட்டா என்னாகும்னு நம்மாலே யோசிக்க முடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்சி.”“ஞானத்துக்கும் தொழிலுக்கும் என்னப்பா சம்பந்தம்? இரை தேடறது நமக்கும் உண்டே. புத்தியை வயத்தாலே கட்டிப் போட்டிருக்கே. ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழி யாய்ன்னு ஒளவைக் கிழவி பாடறாளே. இரை தேட வேண்டாம்னா பாறாங்கல்லாய்ப் போயிடுவோம். பாறைக்குப் பிரச்சனை இல்லை. மிருகம் மாதிரி இரை மட்டும் தேடற சுபாவமும் இல்லை. இரையும் தேடி ஞானமும் தேடி... அட்டா என்ன சுகம், எப்படிப்பட்ட போராட்டம். இது பனிஷ்மென்ட் இல்லை அம்பி. சுயமா புடம் போட்டுக்கற வித்தை, சுவாரஸ்யமான விளையாட்டு.”"சவுக்கடிபட்ட இடத்தைநீவிடத் தெரியா குதிரைகண்மூடி வலியை வாங்கும்இதுவுமோர் சுகம்தானென்றுகதறிட மறுக்கும் குதிரைகல்லென்று நினைக்க வேண்டாம்கதறிட மேலும் நகைக்கும்உலகத்தை குதிரை அறியும்"‘Irumbu Kudirai’ and ‘Mercury Pookkal’ won the Rajah Sir Annamalai Chettiar Award and Ilakkiya Chinthanai award respectively, and have both crossed 21 editions. his second ‘Irumbu Kuthirai’ (Iron horse) was serialised in Kalki. ‘Iron horse’ was Balakumaran’s unique way of describing a truck.ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
- Specification
-
Specification
SKU Code TMN B 060 Weight in Kg 0.0600 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name பாலகுமாரன் Balakumaran Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம் - Reviews