Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இதுதான் என் பெயர் - சக்கரியா - Ithuthan En Peyar - Paul Zacharia - பவுல் சக்கரியா பால் சக்கரியா சுகுமாரன்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 231
₹75.00

மொழிபெயர்ப்பு நாவல்/புதினம்; மூலம்: மலையாளம்.

காகித உறை/ பேப்பர்பேக்;

62 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share

சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் நாவல். “என் மனதுக்குள்ளிருக்கும் அரசியல் வளர்ச்சி நிலைகள் மிக இயல்பாகவே என் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன” என்று குறிப்பிடும் சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’.

Gandhi's murder is independent India's first political assassination. In a sense, Its also the first call to religious intolerance of the nation. This fiction starts with Gandhi's death and delves into two person's – Gandhi's Gotse and Gotse's Gandhi - psyche before and after that death. This psychological interrogation makes sarkariya's Novel. Sarkariya who announces “The political growth stages of my mind are naturally expressed in my writings”, expresses his politics in literature on “This is my Name”. Translated into tamil by Poet and Translator Sukumaran, Well-known for his translations of Marquez and Bashir among other works.

எழுத்தாளர் குறிப்பு : சக்கரியா (பி. 1945) கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் உருளிக்குன்னத்தில் ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர். உருளிக்குன்னம், பாலா, மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். பெங்களூர், காஞ்ஞிரப்பள்ளி கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தவர். ‘ஏஷியாநெட்’ மலையாளத் தொலைக்காட்சியின் நிறுவன ஆலோசகர். இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். சொந்தப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் உட்பட இருபத்துமூன்று நூல்களுக்கு ஆசிரியர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லா இலக்கியப் பிரிவுகளிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார். அருந்ததி ராயின் ‘தி எண்ட் ஆஃப் இமாஜினேஷன்’ கட்டுரையை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

More Information
SKU Code Kch B 231
Weight in Kg 0.470000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789352440207
Author Name சக்கரியா @ பவுல் சக்கரியா @ பால் சக்கரியா - Paul Zacharia. மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு: சுகுமாரன் Sukumaran
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:இதுதான் என் பெயர் - சக்கரியா - Ithuthan En Peyar - Paul Zacharia - பவுல் சக்கரியா பால் சக்கரியா சுகுமாரன்

Similar Category Products





Other Books by சக்கரியா @ பவுல் சக்கரியா @ பால் சக்கரியா - Paul Zacharia. மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு: சுகுமாரன் Sukumaran