Details
பூமிப் படத்திலிருந்து மறைந்து போன ஒரு நாடும், மொழியும், நாகரிகமும், மனிதர்களும், அவர்களது பழக்க வழக்கங்களும் எத்தகையதாக இருக்கும்? உடமைகளற்ற ஒரு நாட்டில், மக்களின் வாழ்க்கை எத்தகையதாக இருக்கும்? என்ற சிந்தனையே நாவலுக்குக் கருவாயிற்று. பகை இல்லை, போரில்லை, கருவிகள் கூட இல்லை. அங்கே 'அக' உணர்வு மட்டுமே தலைசிறந்து நிற்கிறது.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.