Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கண்ணன் கனியமுதம் - திருமுருக கிருபானந்த வாரியார் - Kannan Kaniyamudham

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 328
₹60.00
ஆன்மீகம் நூல். 

148 பக்கங்கள்; 
ஒன்பதாம் பதிப்பு- டிசம்பர் 2018; 
மொழி: தமிழ்; 
வானதி பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் கண்ணன் கனியமுதம், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.     

முன்னுரை: 

பரிட்சித்து மன்னன் மரணத் தறுவாயில் ஏழுநாள் சுகமுனிவர் கூறக் கேட்டு முத்தி நலம் பெறச் செய்தது கண்ணன் கனியமுது.

கண்ணபிரான் பூபாரம் தீர்க்கத் திருவவதாரம் செய்தவர். இவருடைய இனிய வரலாறு கனியமுதம் போன்றது. பவப் பசியை மாற்றும்; பரகதியில் ஏற்றும்.

ஒவ்வொரு பகுதியும் படித்தோர்க்குப் பெருமகிழ்ச்சியைத் தரவல்லது கண்ணன் கனியமுது.

கோகுலம் என்ற தண்டமிழ்ப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினேன். இதனைத் தனியே மக்கள் படித்து இன்புறும் பொருட்டு திரு.ஏ.திருநாவுக்கரசு அவர்கள் தமது வானதி பதிப்பகத்தில் அழகாக வெளியிடுகின்றார். வானதி பதிப்பகம் தனக்கே உரிய அரிய அழகு ஓவியமாக வெளியிடுகின்றது.

கோகுலம் வெளியீடு அதிபர். திரு.சதாசிவம் அவர்கட்கும், வானதி பதிப்பகத்து அன்பர்கட்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றி. வானோரும் போற்றும் இதனை ஏனோரும் ஓதிக் கண்ணன் கருணையைப் பெறுவார்கள்.

                                        நேரிசை வெண்பா 

கண்ணன் கனியமுதைக் கற்றோர் கலித்தீர்வர் 
எண்ணற் கரியநீதி எய்துவரால் - மண்ணவரும் 
விண்ணவரும் போற்றவே வித்தகப் புத்தமுத 
வண்ணமுடன் வாழ்வார் மகிழ்ந்து.

                                                                     அன்பன்,
                                                                     கிருபானந்தவாரி.                                                                                    

எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
More Information
SKU Code VAN B 328
Weight in Kg 0.500000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கண்ணன் கனியமுதம் - திருமுருக கிருபானந்த வாரியார் - Kannan Kaniyamudham

Similar Category Products