Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கந்தபுராணம் மூலமும் உரையும் - 6 தொகுதிகள் - கச்சியப்ப சிவாச்சாரியார் - சிவ.சண்முகசுந்தரம் - Skanda Purana - Kachiyappa Sivacharyar - Siva Shanmuga Sundaram - Kantha Puranam Kanthapuranam Kandha Puranam Kandhapuranam Kandhapuraanam Kanthapuraanam Kandapura

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PARI B 001
₹4,600.00

தமிழ் இலக்கியம், பக்தி இலக்கியம்.

கடின அட்டை உறை /Hardbound; 

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share

கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம் மூலமும் உரையும் - உரையாசிரியர் கயிலை மாமணி முனைவர் சிவ.சண்முகசுந்தரம். 

சிவபெருமானின் மூன்று திருக்கண்களுள் கந்தபுராணம் நெற்றிக்கண்ணாகப் போற்றப்படுகிறது. வடமொழியில் உள்ள பதிணென் புராணங்களுள் சிவபெருமானுக்குரியவை பத்துப் புராணங்கள். அவற்றுள் ஒன்று கந்தபுராணம். அதிலுள்ள ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டம் சிவரகசிய காண்டம். அதனுள் உள்ள நமது வரலாற்றைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டுத் தமிழில் பெருங்காப்பியமாக இயற்றுவாயாக என முருகப்பெருமான், கச்சியப்ப சிவாசாரியார் கனவில் தோன்றி கட்டளையிட்டும், முதலடி "திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்" என எடுத்துக் கொடுக்க, 

அடி எடுத்துக் கொடுத்ததாகவும் புராண வரலாறு தெரிவிக்கிறது. 

நாளும் 100 பாடல்கள் எழுதி, கந்தகோட்டம் முருகன் திருவடியில் கச்சியப்ப சிவாச்சாரியார் வைத்துவிடுவது வழக்கம். மறுநாள், கோவில் நடை திறக்கும்போது, அந்தப் பாடல்களில் திருத்தம்செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு அருளியது முருகனே என்று, பக்தர்கள் போற்றுகின்றனர். இந்த நூல் அரங்கேற்றம் முடிந்ததும் கச்சியப்பரை பல்லக்கில் தூக்கி, காஞ்சி நகரம் முழுவதும் வலம் வந்து மரியாதை செய்துள்ளனர் பக்தர்கள். இந்த நூல் இயற்றப்பட்ட காலம், 11ம் நூற்றாண்டு என அறிய முடிகிறது.

முருகனின் தோற்றம், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்படுதல், இளவயது திருவிளையாடல், சூரனை வதம் செய்தல், சூரனுக்கு அருள் வழங்கிய திறம், தெய்வானை மற்றும் வள்ளியை திருமணம் செய்து கொண்டது என, அனைத்தையும் எடுத்துரைக்கிறது. சிவன் பெருமைகளையும் மிகுதியாக கூறுகிறது.   

"எந்தப் புராணமும் கந்தப் புராணத்தில் உள", என்கிற பழமொழிக்கேற்ப, இப்புராணத்தில் சொல்லப்படாத செய்திகளே இல்லை எனலாம்.

கம்பராமாயணத்திற்கு இணையாகப் போற்றப்படும் பெருமை வாய்ந்த பக்தி இலக்கிய நூல் கந்த புராணம். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 135 படலங்களுடன், 10,345 பாடல்களைக் கொண்டது. 

உரையாசிரியர் சிவ.சண்முகசுந்தரம் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதால் எளிமையான தமிழ் நடையில் ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவுரை, அருஞ்சொற்பொருள், குறிப்புரை என்ற அமைப்பில் படைத்துள்ளார். பொருள் விளங்காமல் இருக்கும் சொற்களைக் கண்டறிந்து, அவற்றிற்கு அருஞ்சொற்பொருள் வழங்கப்பட்டுள்ளமையால் பாடல்கள் எளிமையாகப் புரிகின்றன. நூலின் கடைசிப் பகுதியில் ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள பாடல்களின் முதல் குறிப்புச் சொற்களை அகர வரிசையில் தந்திருப்பதால், எந்த பாடலைப் பார்க்க வேண்டுமோ அந்தப் பாடலை உடனே பார்க்கும் வகையில் உரையாசிரியர் வழங்கியிருக்கிறார்.   

ஆசிரியர் குறித்து: சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முருகன் தலம் குமரக் கோட்டம். அந்தக் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக விளங்கிய காளத்தியப்ப சிவாச்சாரியாரின் மகன் கச்சியப்ப சிவாச்சாரியார். தமிழ் மற்றும் சமஸ்கிருத அறிஞராக இருந்த காஞ்சியப்பர் (கச்சியப்பா சிவா சாகர்) குமார குமார கோட்டத்தில் உள்ள ஒரு பூசாரி ஆவார். கச்சியப்பர் ஒரு  நல்ல கவிஞரும் வேதாந்தியும் ஆவார். இவரது மிகச் சிறந்தப் படைப்பு   கந்த புராணம். து சமஸ்கிருத ஸ்கந்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது  அதே பாணியில் இயற்றப்பட்டுள்ளது. இது மொத்தம் ஆறு காண்டங்களையும்  13,305 பாடல்களையும்   உள்ளடக்கியது.   கச்சியப்பர்,  பரசுராம முத்தலியார் கந்தா புராணத்திற்கு  எழுதிய முன்னுரையின் படி, இது கி.மு. 778  உடன் தொடர்புடைய சாகா ஆண்டு 700 இல் முடிக்கப்பட்டது.

More Information
SKU Code PARI B 001
Weight in Kg 6.000000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name கச்சியப்ப சிவாச்சாரியார் - சிவ.சண்முகசுந்தரம் Kachiyappa sivacharyar Siva Shanmuga Sundaram
Publisher Name பாரி நிலையம் Paari Nilayam
Write Your Own Review
You're reviewing:கந்தபுராணம் மூலமும் உரையும் - 6 தொகுதிகள் - கச்சியப்ப சிவாச்சாரியார் - சிவ.சண்முகசுந்தரம் - Skanda Purana - Kachiyappa Sivacharyar - Siva Shanmuga Sundaram - Kantha Puranam Kanthapuranam Kandha Puranam Kandhapuranam Kandhapuraanam Kanthapuraanam Kandapura

Similar Category Products