Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கோத்திரங்கள் வரலாறு - சிவாகம ஞான கலாநிதி, ஜோதிடர் புலவர் ஏ.பு.சந்தான குருக்கள் - Kothirangal Varalaaru - Pulavar Santhaana Gurukkal - Kotirankal Varalaru - Kothirankal Varalaru - Gothirangal Varalaru - Ghothirankal Varalaaroo

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Alnce B 999
₹40.00

கோத்திரங்கள், வகைகள்.

காகித அட்டை/ பேப்பர்பேக்; 

64 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: 2019.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் கோத்திரங்கள் வரலாறு, புலவர் சந்தான குருக்கள் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

பதிப்புரை: 

ஜந்தூணாம் நர ஜன்மம்  துர்லபம் - ஆதி சங்கரர்.

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது 

மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு 

பேடும் நீங்கிப் பிறத்தல் அரிது 

பேடு நீங்கிப் பிறந்த காலையும் 

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

ஞானமும் கல்வியும் நயந்த காலையும் 

தானமும் தவமும் தாம் செயல் அரிது 

தானமும் தவமும் தாம் செய்வர் ஆயின் 

வானவர் நாடு வழி திறந்திடுமே 

- ஔவையார்.

ஆம்! மனிதப் பிறவி மிகமிக உயர்வானது. விலங்கு, பறவை, பாம்பு, பல்லி என ஊர்ந்து போகும் ஜீவராசிகள் - என்று ஏதாவது ஒன்றாக இல்லாமல், மனிதராகப் பிறந்தது... மிகவும் உயர்ந்தது என்ற ஔவையார், மனிதப் பிறவியின் உயர்வை படிப்படியாக விவரிக்கிறார். இப்படிப்பட்ட உயர்வை, சிலர் புரிந்து கொன்ல்கிறார்கள்; பலருக்குப் புரியவில்லை. அதை உணர்த்துவதே இந்நூலின் நோக்கம். 

 

நாம் அனைவருமே உத்தமமான ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள். பரம்பரையில் முதல்வரான அந்த ரிஷிகளின் பெயரைச் சொல்லித் தொடங்குவதே 'கோத்திரம்'.

 

முன்னுரை: 

உலகில் மனிதப் பிறவி எடுப்பது சிறப்பு எனப்படும். மனிதர்களை வழிமுறையாகவும், பாரம்பரியமாகவும் அறிந்துகொள்ளும் வழிமுறையே கோத்திரம் என்று சொல்லப்படுகிறது எனலாம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்கள் மூதாதையர்கள் பற்றி ஓரளவே தெரிந்திருக்கும். தந்தை, பாட்டன், பூட்டன் என மூன்று தலைமுறைகள் நினைவில் கொள்வதே சிரமமாக உள்ளது. அந்த குடும்பத்திற்கு முதல் தலைமுறை  யார்? என்பதை குறிப்பிடுவதே கோத்திரம் எனலாம்.

கோயிலில் அர்ச்சனை செய்ய அர்ச்சகரிடம் கேட்டால் அவர் முதலில் கேட்பது உங்கள் கோத்திரம் என்ன? என்பதாகும். பலருக்குக் கோத்திரம் தெரிவதில்லை. நமஸ்காரம் செய்யும்போது, "அபிவாதயே" என்று சொல்லி ஆரம்பித்து தன் கோத்ர பிரவரம், அடுத்து தன் கோத்திரம் சொல்லி இன்ன சூத்திரம், இன்ன வேத சாகை உடைய இன்ன பெயருடையவன் நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லவேண்டும். நால்வகை வருணத்தாருக்கும் கோத்திர பிரவரம் உண்டு. பிரவரம் என்பது கோத்திர மூலரிஷிகள் வழிவந்த மற்ற குலமுதல்வர்களான ரிஷிகள். ஆனால் இப்போது பெரும்பாலும் பிராமணர்கள் மட்டிலுமே இதை கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் கோத்திரம் தெரிந்தாலும் பிரவரம் தெரிவதில்லை. வைதிக வாத்தியார்களை கேட்டு அறிய வேண்டியுள்ளது. அவர்களுக்கும் எல்லா கோத்திர பிரவரங்களும் தெரிவதில்லை.

மற்றைய வர்ணத்தார் ஒரு சிலர் கோத்திரம் அறிந்து சொல்கின்றனர்.

இதுபற்றி முழுமையான தகவல்களுடன் ஒரு நூல் செய்யும்படி, அல்லயன்ஸ் புத்தக பதிப்பக உரிமையாளர் திரு.ஸ்ரீநிவாஸன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்நூல் எழுதப்பட்டது. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அன்னாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் தந்தை, தாய், என் குருமார்கள் ஆகிய அனைவரின் தாள் பணிந்து இந்நூலை எழுத முற்படுகிறேன். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ மஹாபெரியவா, என் சிறுவயதில் என்னை ஆசிர்வதித்து, 'வேத சாஸ்திரங்கள் படி உனக்கு அவை நன்கு வரும்.' என்று அருளினார்கள். அந்த அருளாசியின் துணையினால் இந்நூல் எழுதத் துணிந்தேன். குறை சுட்டி, நிறை பாராட்டி ஆதரிக்குமாறு பணிவுடன் விண்ணப்பித்து தொடங்குகிறேன்.     

- புலவர் ஏ.பு.சந்தான குருக்கள்.

ஆசிரியரைப் பற்றி: ஏனாத்தூர் (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த ஊர், புஷ்பரத குருக்கள், சகுந்தலா தம்பதியருக்கு முதல் மகன். ஆதிசைவ குருக்கள், பிறந்தநாள்:10.9.1944.

*  கல்வி - புலவர் பட்டயம், எம்.ஏ.பி.எட்., ஆசிரிய பயிற்சி.

* பணி - 1963 முதல் 2002 ஆசிரியப் பணி, அர்ச்சகர், புரோகிதர், ஜோதிடர்.

* இதர கல்வி - யஜுர் வேதம், ஜோதிடம், சித்த மருத்துவம், சைவ சித்தாந்தம், ஆகமப் பயிற்சி, தர்ம சாஸ்த்திர பயிற்சி

* குருவானவர்கள் - கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் (காஞ்சிபுரம்), டி.எஸ்.நடராஜ குருக்கள் (திருக்கச்சூர்). என்.கே. சுந்தரேச குருக்கள் (காஞ்சிபுரம்), கோ.பாலசுந்திர நாயகர் - தமிழ் பேராசிரியர் (காஞ்சிபுரம்), ஞானப் பிரகாச சுவாமிகள் மடத்தில் சைவ சித்தாந்தப் பயிற்சி.

* தீஷா குரு - இவர் மாமனார் டி.எஸ்.நடராஜ குருக்கள், திருக்கச்சூர்.

* வேறு கலைகள் - விவசாயம், அலங்காரம்.

* மறக்க முடியாத நிகழ்ச்சி - 1957-ல் காஞ்சி பெரியவர் இவர் வீட்டில் முகாமிட்டு, ஆசி வழங்கியது. வேதம், சாஸ்திரங்கள் நன்கு வரும் "படி" என்று ஆசிர்வதித்தார். அது  நிகழ்ந்தது.

* வெளியிட்ட நூல்கள் -  1.தர்மம், 2.தர்ம சாஸ்திரங்களும் திருக்குறளும், 3.தர்ம சாஸ்திரமும் மருத்துவமும், 4.மணி விழா, 5.கோதானம், 6.சந்தியாவந்தனம், 7.ஆசிர்வாதம், 8.ஜோதிடத்தில் பஞ்சாங்கம்.

* கௌரவப் பட்டங்கள் - சிவகாம கலாநிதி. சிவாகாம வாஸஸ்பதி, தமிழ்ச் செம்மல்.

* யாத்திரைகள் - 150-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற தலங்களில் தரிசனம், கையிலாய யாத்திரை கேதார்நாத், பத்ரிநாத், பசுபதிநாத் யாத்திரை. 

More Information
SKU Code Alnce B 999
Weight in Kg 0.020000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சிவாகம ஞான கலாநிதி, ஜோதிடர் புலவர் ஏ.பு.சந்தான குருக்கள், M.A., B.Ed., பரம்பரை சித்த மருத்துவர் - Pulavar Santhaana Gurukkal - Santhana Gurukal
Publisher Name அல்லயன்ஸ் - Alliance
Write Your Own Review
You're reviewing:கோத்திரங்கள் வரலாறு - சிவாகம ஞான கலாநிதி, ஜோதிடர் புலவர் ஏ.பு.சந்தான குருக்கள் - Kothirangal Varalaaru - Pulavar Santhaana Gurukkal - Kotirankal Varalaru - Kothirankal Varalaru - Gothirangal Varalaru - Ghothirankal Varalaaroo

Similar Category Products

Other Books by சிவாகம ஞான கலாநிதி, ஜோதிடர் புலவர் ஏ.பு.சந்தான குருக்கள், M.A., B.Ed., பரம்பரை சித்த மருத்துவர் - Pulavar Santhaana Gurukkal - Santhana Gurukal