Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மதங்களும் சிந்தனைகளும் - தொகுத்தவர் சிதம்பரம் ராஜேந்திரன் - Madhangalum Sindhanaigalum by Chidambaram Rajendiran

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 321
₹12.00
ஆன்மீக புத்தகம்.

மொழி: தமிழ்; 
காகித அட்டை (Paperback); 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);  
32 பக்கங்கள்; 
பாரதி பதிப்பகம்;  
முதற் பதிப்பு: ஜூலை 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
சர்வ சமயச் சிந்தனைகள். மதநம்பிக்கை இருந்தும் அறச் செயல்கள் செய்யாவிடில் என்ன பயன்? மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில் செல்லும் வழியாகும். மதங்கள், அம்மதங்களில் எத்தகைய சிந்தனைகளை முதன்மையானது, அதைப் பின்பற்றியே வழிமுறைகளும் இருந்திருக்கின்றன. எல்லா மதங்களும் அன்பு, அமைதியையே போதிக்கின்றன.

தொகுத்தவர் : சிதம்பரம் ராஜேந்திரன்.

புத்தர்: 
நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாகிறாய்.
எதைச் சிந்தித்தாலும் பெரிதாய்ச் சிந்தியுங்கள். உங்கள் குறிக்கோளுக்குப் பொருந்தாத குறைவான எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

குரான்: 
பிறருடைய துன்பத்தைக் கண்டு மகிழாதீர்கள். அதில் நாமும் கண்டிப்பாகச் சிக்கிக் கொள்வோம். 
இரு விஷயங்களை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். ஒன்று திருமறை. மற்றொன்று என் வாழ்க்கை முறை.

பைபிள் : 
பிறனை முகஸ்துதி செய்கிறவன் அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
ஒரு தனிமனிதனுக்கு மூலதனம் அவனது இளமைப் பருவம். சாதாரணமான மனிதன் சாதனையாளனாவது இந்த மூலதனத்தைச் செம்மையாகப் பயன்படுத்துவதால் தான். 

போப்: 
ஒரு நூல் முழுவதும் வேகமாகப் படிப்பதைவிட ஒரு பக்கத்தை நன்றாய் உணர்ந்து கொள்வது மேலாகும்.
மனிதன் கற்பவற்றுள் உயர்ந்த கற்பனைக்குரிய பொருள் மனிதனே !
 
சந்திரசேகரேந்திர சுவாமிகள்: 
பெண்கள் தான தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுவதற்கு இடமே தரக் கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது.
 
திருமந்திரம்: 
அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்.
மனது செம்மையானால் மருந்துகள் வேண்டாம்.
 
இரமன மகரிஷி: 
அமைதியே நமது இயல்பான சுபாவம். அதை வேறு எங்கும் தேட வேண்டாம். அமைதியை ஒளித்து வைத்து உபத்திரவப் படுத்தும் எண்ணங்களை ஒழித்தால் போதும்.
 
கீதை: 
நன்மை பெறுவதால் மிகச் சந்தோஷமும், பாதிப்பு ஏற்படும் பொது கவலையும் கொள்ளாமல் பற்றற்று இருப்பவனே பூரண அறிவு பெற்றவன்.
 
ஆதிசங்கரர்: 
ஜீவ காருண்யம் உள்ளவர்களிடம் தெய்வங்களும் பணிந்து நிற்கும்.

வள்ளலார்: 
மெதுவாகப் பேசு அது உன் இரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையையே பாதுகாக்கும்.
இறைவன் எங்கிருக்கிறான் என்றால் யார் எந்த உயிரையும் தன் உயிர் போல் பார்க்கிறோனோ அந்த உள்ளத்தில் தான் இறைவன் இருப்பான்.
 
ஸ்ரீ ராமானுஜர்:
உங்கள் உணர்வுகளைப் பற்றற்று வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.
விக்கிரங்களைக் கற்களாகக் காண்பவர்கள் மனிதர்களைச் சாதியினால் பிரிப்பவர்கள் ஆகியோருடன் உறவைத் தவிர்த்து விடுங்கள்.

குருநானக்: 
உள்ளத்திலும் உரையாடலிலும் சத்தியம் குடி கொண்டால் சத்தியத்தின் முத்திரை படிந்தால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்கள் அனைத்தும் அகலும்.
நன்மை செய்தவர்க்கு நன்மை செய். தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்.
பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை. திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை.
 
அரவிந்தர்:
தன் குறைகளையும், பொய் இயக்கங்களையும் ஒப்புக் கொண்டு அவற்றில் இருந்து விளக்குவதே முக்திக்கு வழி. 
மனிதனின் விதியை இறைவனின் இச்சா சக்தியால் செயல்படும் கருணையால் மட்டுமே ரத்து செய்ய முடியும்.
More Information
SKU Code Bharti B 321
Weight in Kg 0.100000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name தொகுத்தவர் சிதம்பரம் ராஜேந்திரன் Chidambaram Rajendiran
Publisher Name காமதேனு நிலையம் Kamadhenu Nilayam
Write Your Own Review
You're reviewing:மதங்களும் சிந்தனைகளும் - தொகுத்தவர் சிதம்பரம் ராஜேந்திரன் - Madhangalum Sindhanaigalum by Chidambaram Rajendiran

Similar Category Products