Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Maha Periyava - Part 8 by P.Swaminathan மகா பெரியவா - தொகுதி VIII - பி சுவாமிநாதன்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Sree B 12
₹120.00
காகித அட்டை; 
144 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2018;
நூலாசிரியர்: பி.சுவாமிநாதன்; 
 பதிப்பகம்: ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ். 

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
'செந்தமிழ்க் கலாநிதி' பி சுவாமிநாதன் அவர்கள் எழுதிய மகா பெரியவா - தொகுதி VIII. ஸ்ரீ மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் 25வது நாள்.

                                                               பதிப்புரை:

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நாம் வணங்க வேண்டியவர்களின் வரிசையைப் பட்டியலிட்டிருக்கிறார்கள் சான்றோர்கள்.

தாயிற் சிறந்த கோயில் இல்லை. தாயே முதல் தெய்வம்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தந்தையே இரண்டாவது தெய்வம்.

தாயும், தந்தையும் சேர்ந்து அறிமுகப்படுத்தும் குரு, மூன்றாவது தெய்வம். முக்கியமான தெய்வம் இவரே!

இறுதியில்தான், தெய்வத்தை வைத்தார்கள்.

எவர் ஒருவர் தாயையும் தந்தையையும் பாசத்துடன் பரிவுடனும் காத்து வருகிறாரோ, அவர் எந்த ஒரு ஆலயத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. பெற்றோர் மீது கொண்டிருக்கக் கூடிய பக்தி, தெய்வத்தையே வீட்டுக்கு வரவழைத்து விடும். தேவையான நற்பலன்களை வழங்கி விடும்.

எவர் ஒருவர் குரு மீது பக்தியும், மரியாதையும் கொண்டு வணங்கி வருகிறாரோ, அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் அடுத்த நிலையில் இருக்கிற தெய்வம் வழங்கி விடும்.

எல்லாவற்றையும் தாண்டியது இறை பக்தி. நாம் செய்கிற தர்ம அதர்மங்களுக்கு சாட்சியாக விளங்கி அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பது தெய்வம்.

ஆக, எவர் ஒருவர் இந்த உலகில் மேலே சொன்ன நால்வரையும் போற்றி ஆராதிக்கிறாரோ, அவர் பதினாறு விதமான செல்வங்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வார்.

                                                                என்னுரை:

"இந்தக் கலியுகத்தில் தெய்வத்தை நேருக்கு நேர் தரிசிக்கக் கூடிய பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?" என்று காஞ்சி மகா பெரியவாளை நேரில் தரிசித்த பக்தர்களிடம் கேட்டால், "ஆமாம்... அந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மகா பெரியவா திருவடிவத்தில் தெய்வத்தைத் தரிசித்திருக்கிறோம்" என்பார்கள், உணர்ச்சிவசப்பட்டு.

ஆம்! காஞ்சி மகா பெரியவாளை நேருக்கு நேர் தரிசித்த பக்தர்கள் அனைவரும் சாட்சாத் சர்வேஸ்வரனையே கண்களுக்கு நேராகத் தரிசித்தவர்கள். அப்படி என்றால், மகா பெரியவாளை நேரில் தரிசிக்காதவர்கள் துர்பாக்கியசாலிகள் என்று பொருள் கொள்ளக் கூடாது! அந்த மகானை இன்றைக்கு நினைத்தாலும், மறைமுகமாக வந்து அருள் பாலிக்கிறார். அந்த வகையில் நாம் அனைவரும் பாக்கியசாலிகள்தான்.

அந்த வகையில் நானும் பாக்கியசாலிதான்.

ஆம்! என் நினைவுக்குத் தெரிந்து மகா பெரியவாளைத் தரிசித்ததில்லை.

முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேனோ, என்னவோ.... இன்று அவரைப் பற்றிப் பேசவும் எழுதவும் பேரு கிடைத்திருக்கிறது.

கலியுக தெய்வம், நடமாடும் தெய்வம், கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் இன்றைக்குப் பக்தர்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுபவர் காஞ்சி மகா பெரியவா.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லப்படக் கூடிய வரிசையில் முதலிடத்திலும் (மாதா), மூன்றாம் இடத்திலும் (குரு) இருக்கிறவர்கள் கொட்டிக் கொடுக்கிறவர்கள்.

ஒரு குழந்தை தன் தாயிடம் என்ன கேட்டாலும், அன்பின் மிகுதியால் கொடுத்தே விடுவாள். கொடுக்க வேண்டாம் என்று அவள் நினைத்தாலும், தன் குழந்தை மேல் இருக்கிற வாஞ்சையும் கருணையும் கொடுக்க வைத்து விடும்.

அதுபோல்தான் நாம் வணங்குகிற குருவும். ஒரு குரு மகானின் சந்நிதிக்குச் சென்று அவரிடம் எதை வேண்டிப் பிரார்த்தித்தாலும், தகுதிக்கு உட்பட்டது என்றால், நிச்சயம் தந்து அருளி விடுவார் அவர்.

எனவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கக் கூடிய குரு பக்தியானது உயர்ந்த பக்தியாகப் போற்றப்படுகிறது.

அப்படி நாம் அனைவரும் கேட்டனவற்றை, வேண்டியவற்றை, பிரார்த்தித்தவற்றை உடனுக்குடன் அருளக் கூடிய - ஒப்பற்ற குருவாக இன்றைக்கும் விளங்கி வருகிறவர் காஞ்சி மகா பெரியவா.

தன்னை நம்பி வந்து, தனது திருப்பாதங்களில் சரண் புகுகிற பக்தனை எந்த ஒரு காலத்திலும் ஏமாற்றியதில்லை மகா பெரியவா. ஒருவேளை பக்தன் கேட்டது உடனுக்குடன் கிடைக்கவில்லை என்றால், அவனது பக்தியில் போதிய வலிமை இல்லை என்று பொருள்.

ஷீர்டி பாபா, புட்டபர்த்தி சத்யபாபா போன்ற மகான்களின் வழிபாடு இன்றைக்கு உலகெங்கும் இருந்து வருவதைப் பார்க்கிறோம். அதுபோல் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் உலகெங்கும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. 

எண்ணற்ற யாத்திரைகள் செய்து, பக்தர்களுக்கு நல்வழிகளை உபதேசிப்பதுதான் சந்நியாச தர்மம். அதன்படி பாரத தேசத்தின் பெரும்பாலான ஊர்களில் யாத்திரை செய்து அவர்களுக்கெல்லாம் தன் இன்னருளை வழங்கி இருக்கிறார் மகா பெரியவா. 

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்திலோ, அல்லது தான் தங்கி இருக்கிற முகாமிலோ நித்தமும் ஸ்ரீசந்திரமௌளீஸ்வர பூஜையை நடத்துவார் மகா பெரியவா.

காஞ்சி ஸ்ரீமடத்தில் ஆச்சார்யர்களாக இருக்கிற பீடாதிபதிகள் நித்தமும் இரு வேளைகளில் சிவ சொரூபமாக விளங்குகிற இந்த ஸ்படிக லிங்கத்துக்கு பூஜை நடத்த வேண்டும். ஆதி சங்கரர் கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஸ்படிக லிங்கங்களுள் ஒன்றுதான் இந்த ஸ்ரீரீசந்திரமௌளீஸ்வரர்.

ஆத்மார்த்தமாக இந்த சிவலிங்க பூஜையை மகா பெரியவா தினமும் நிகழ்த்தும்போது, சாட்சாத் சிவபெருமான் தனக்குத் தானே பூஜையை செய்து கொள்வது போல் இருக்கும் என்று அவரது பக்தகோடிகள் சொல்வார்கள்.

இன்றைக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு செல்கிற பக்தகோடிகள் உள்ளே நுழைந்ததும், அங்கிருக்கிற பிரமாண்டமான பூஜை மண்டபத்தில் இந்த சந்திரமௌளீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.

மனதுக்குள் மகானைப் பரிபூரணமாக கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், உங்கள் உதடுகள் அசைவதே ஒரு மந்திரம்தான்.

'மகா பெரியவா சரணம்' என்றோ, 'ஜய ஜய சங்கர .... ஹரஹர சங்கர" என்கிற நாமத்தையோ எவ்வளவு முடியுமோ சொல்லுங்கள்! குறைந்த பட்சம் 108 சொல்ல முயற்சியுங்கள்!

அவருக்கு நிவேதனமாக உங்களால் முடிந்ததை வீட்டு பூஜையறையில் சமர்ப்பியுங்கள். மலை வாழைப்பழம், விளாம்பழம், திரட்டுப் பால் (பால்கோவா), சர்க்கரைப் பொங்கல், ரவா கேசரி, நாட்டுச் சர்க்கரை கலந்த அவல், நெல்பொரி  - இவை எல்லாம் அந்த மகானுக்கு நிவேதனம் செய்ய உகந்தவை.

கண் கண்ட தெய்வமாக - கலியுக தெய்வமாக காலாகாலத்துக்கும் விளங்கி, தன்னை நம்பிச் சரண் புகுந்த பக்தர்களின் பிணிகளைத்  தீர்த்து வருகிறார் மகா பெரியவா.

'மாலை மலர்' நாளிதழில் வெளியானவையே இந்தத் தொகுப்பு. ஒரு சில கட்டுரைகள் 'ராணி', தினத் தந்தி' இதழ்களில் வெளியானவை. இத்தகைய நல்வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்தக் குழுமத்தின் அதிபர் திரு.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'பெண்மையைப் போற்றும் மகா பெரியவா' என்ற மினி தொடரை 'மங்கையர் மலர்' இதழில் எழுதினேன். அந்தக் கட்டுரைகளும் இந்த நூல்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மகா பெரியவா அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த மகானின் திருவடிகளைப் பணிகின்றேன்.

மகா பெரியவா சரணம்.

                                                                                    அன்புடன்,
                                                                                    பி.சுவாமிநாதன்.

மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன்:-
ஜய ஜய சங்கர! ஹர ஹர  சங்கர!
ஹர ஹர  சங்கர! ஜய ஜய சங்கர! 

அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் 'இந்து மதம் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு 'ஸ்ரீ சந்திரசேகரேந்திர  சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான். 

ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும். 
- மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன்.

ஆசிரியர் : பி. சுவாமிநாதன்
சொந்த ஊர் : திருபுரம்பியம் (கும்பகோணம் அருகில், தமிழ்நாடு); 
படிப்பு : B.Sc. (Maths)) Govt. College for men - கும்பகோணம் M.A. (Journalism) மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; 
அனுபவம் : ஆனந்த விகடன் குழுமம் (22 வருடம்) திரிசக்தி குழுமம் ( 3 வருடம்)

ஆன்மீகச் சொற்பொழிவாளராக :
* 'மக்கள் தொலைகாட்சி'யில் 'வாழ்விக்கும் வழிபாடு என்ற தலைப்பில் நம் ஆலயங்களின் புராதனத்தை சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.30 மணி முதல் 7.40 வரை * ' பொதிகை தொலைகாட்சி'யில் 'குரு மஹிமை' என்ற தலைப்பில் பாரத தேசத்து மகான்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.45 மணி முதல் 8.00 வரை) தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார்.

பங்கேற்ற தொலைகாட்சி நிகழச்சிகள் :
ஜீ தமிழ் தொலைகாட்சி ( தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் காஞ்சி பெரியவாளின் மகிமையை சுமார் ஒன்றரை வருடம் தொடர்ந்து பேசியது ). சன் நியுஸ் (விவாதங்கள்) விஜய் (பக்தி திருவிழா) ஜெயா ( சிறப்பு விருந்தினர் ) தந்தி டிவி ( சொற்பொழிவுகள் ) ஸ்ரீ சங்கரா ( பல நேரடி ஒளிபரப்புகள் ) மெகா டிவி ....

ஆன்மீக எழுத்தாளாராக :
தொடர்கள் வெளியான இதழ்கள் : ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கிய பீடம் உள்ளிட்டவை. மங்கையர் மலர், ஞான ஆலயம், சூரிய கதிர் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார். தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மீக கட்டுரைகளுக்கு புத்தக வடிவம் கொடுத்து வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் ' நிறுவனம் இவற்றை வெளியிட்டு வருகிறது. எழுதிய நூல்கள் : சுமார் 40-க்கும் மேல்.

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் :
* சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புத தொகுப்பு ) 
* ஆலயம் தேடுவோம் ( புராதமான - சிதிலமான அலயங்களைத் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுமுக்கு நடத்தி வைத்தது ) 
* மஹ பெரியவா ( 2 தொகுதிகள் ) 

மேலும் சில வெற்றி நூல்கள் : 
திருவடி சரணம் (தொகுதி 1), 
திருவடி சரணம் (தொகுதி 2), 
மகா பெரியவா தொகுதி - 2,
வைணவத்தின் பெருமையும் அடியார்கள் மகிமையும், 
பண்டரிபுரத்து மகான்கள்.
More Information
SKU Code Sree B 12
Weight in Kg 0.200000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name P.Swaminathan பி சுவாமிநாதன்
Publisher Name Sree Media Works ஸ்ரீ மீடியா வொர்க்ஸ்
Write Your Own Review
You're reviewing:Maha Periyava - Part 8 by P.Swaminathan மகா பெரியவா - தொகுதி VIII - பி சுவாமிநாதன்

Similar Category Products





Other Books by P.Swaminathan பி சுவாமிநாதன்