Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மங்கல மங்கையர் - திருமுருக கிருபானந்த வாரியார் - Mangala Mangaiyar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 331
₹120.00
ஆன்மீகம் நூல்; 
சிறு கதைகள்.
   
பேப்பர்பேக்; 
464 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பாதிப்பு: பிப்ரவரி 1976; 
மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 2003.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் மங்கல மங்கையர், திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

முன்னுரை: 

மண்ணுலகமும் விண்ணுலகமும், பெண்ணுலகத்தால் பெருமை பெறுகின்றன. ஒரு பெண் குடும்பத்துக்கு வேறாகி நின்று தாங்கிக் காத்தருளுகின்றாள். தாயின் குணநலன்கள் மக்களிடம் தோன்றுகின்றன.

மண் திருந்தினால் பயிர் வளமையாக வளர்வது போல், பெண் திருந்தினால் அக்குடும்பமே  திருந்தி உயர்வு பெறுகின்றது. ஆதலால் பெண்களின் குணநலம் உயர வேண்டும். வீட்டுக்குப் பெண் மங்கல தீபம் போல் ஒளி செய்கின்றாள்.

கற்புடைய ஒரு காரிகை கைநீட்டினால் கதிரவன் வரவு தடைபட்டுப் போகும். மாண்ட கணவனை மீண்டெழச் செய்து வாழ்ந்த சாவித்திரியின் பெருமை அறியாதார் யார்?

எனவே, பெண்மணிகளின் கற்பு நலன்களைப் பற்றி நான் எழுதிய கதைகளை, வானதி பதிப்பக உரிமையாளர், திரு.வானதி திருநாவுக்கரசு "மங்கல மங்கையர்" என்ற தலைப்புடன் வெளியிடுகின்றார்.

வானதி பதிப்பகம் தமிழுக்கும் சமய நெறிக்கும் இனிய பல தொண்டுகள் புரிகின்றது.

இதனை ஆடவரும் மகளிரும் இனிது ஓதி உயர்வு பெறுக. எந்தை கந்தவேள் கருணை துணை புரிக.

அன்பன்,
கிருபானந்தவாரி.

பொருளடக்கம்: 
01.பவளேந்திரி;  
02.தணிகை நாயகி;  
03.மங்கையும் - நங்கையும்;  
04.அழகம்மை;  
05.அறம் வளர்த்த நாயகி;  
06.சண்முகசுந்தரி;  
07.செந்தில் வடிவு;  
08.கஜவல்லி;  
09.அம்பா சங்கரி;  
உ10.பகோசை;  
11.கல்யாணி;  
12.அமிர்தமதி;  
13.சந்திரவதனி;  
14.வஸந்தா;  
15.கற்பகவல்லி;  
16.நீலவேணி;  
17.சாந்தை;  
18.கமலவேணி;  
19.மதுகரவேணி;  
20.சங்கரி;  
21.ஞானபூஷணி;  
22.செங்கமலவல்லி;  
23.ஞானாம்பிகை;  
24.கமலக்கண்ணி;  
25.அங்கசுந்தரி;  
26.கஜலக்ஷுமி;  
27.சுகுணவல்லி;  
28.வண்டார்குழலி;  
29.மதிநிறைச் செல்வி;  
30.மலைவளர் காதலி;  
31.சயிலாங்கனை; 
32.பூங்கோதை;  
33.கலைமகள்;  
34.வனவல்லி;  
35.நீலாம்பிகை;  
36.மாதினியாள்; 
37.பூங்குழலி;  
38.மாதரசி;  
39.முத்துவல்லி;  
40.கோமளவல்லி;  
41.தனலட்சுமி.   

எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
More Information
SKU Code VAN B 331
Weight in Kg 0.630000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:மங்கல மங்கையர் - திருமுருக கிருபானந்த வாரியார் - Mangala Mangaiyar

Similar Category Products