Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும் - Medhai Kambanum Kodhai Piratiyum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
VAN B 086
₹22.00
ஆன்மீகம் நூல்.

பேப்பர்பேக்; 
முதற் பதிப்பு: மே, 1994; 
168 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
வானதி பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும், பாவலர்மணி சித்தன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூல் 13-5-94 புதுவைக் கம்பன் விழாவில் வெளியிடப் பெற்றது.

நூல்முகம்:

ஆழ்வார்களின் அருளிச் செயல்களின், கோதை பிராட்டியார் பிரபந்தங்களும் அடங்கும். அன்னையார் இரண்டு பிரபந்தங்கள்    அருளியுள்ளார். அவை திருப்பாவையும், நாச்சியார் திருமொழியுமாம்.

சொற்சுவை, பொருட்சுவைகளுடன், பத்திச்சுவை விஞ்சி நிற்கக்கூடிய இப்பிரபந்தங்கள் வைணவ சமயக் கருத்துக்களைப் புதை பொருளாகக் கொண்டவை.

இப்பிரபந்தங்களைப் படிக்கும் தொறும் கம்பரின் இராமாவதாரத்தில் உள்ள சில தொடர்கள், அடிகள், கருத்துக்கள் என் நினைவுக்கு வந்தன.

புதுவைக் கம்பன் விழாமலரில் 1991-இல், இவ்விரு அருளாளர்களின் பாடல்களில் ஒத்த கருத்துடையதாக விளங்கும் சில இடங்களைக் காட்டிக் கட்டுரையொன்று எழுதினேன். படித்த அன்பர்கள் இதை ஒரு நூலாக எழுதப் பணித்தனர்.

கம்பர் காப்பியம் வைரச் சுரங்கம்; அதை வெட்டி எடுக்க எடுக்க வைரக் குப்பைகளே வற்றாது கிடைக்கும். ஆற்றல் அற்ற எளியேனால் அது இயலுவதொன்றோ?

என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இவ் ஒப்பீட்டு ஆய்வைச் செய்ய முயன்றேன்.

அனைத்தையும் எடுத்துக் காட்டிவிட்டேன் - என்று எண்ணல் ஆகாது. சில இடங்களே காட்டப்பெற்றுள்ளன.

இந்நூலுக்கு "அறிமுகம்" எழுதி வழங்கியவர், நூற்கடல் திரு.தி.வே.கோபாலையர் எம்.ஏ., பி.ஓ.எல் -அவர்கள். அவர்கள், பிரஞ்சு பண்பாட்டுக் கழகத்தின் தமிழ்துறைத் தலைவர். தமிழும் வைணவமும் அவரின் சொந்த சொத்துக்கள். அவைகளைத் தமிழுலகுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் வள்ளல் அவர். இச்சிறு நூலையும் அவர் அறிமுகம் செய்துள்ளார். அது யான் பெற்ற பேறாம்.

"தலையலால் கைம்மாறிலேன்" என்பதே அவர்க்கென் நன்றியுரையாகும்.

மற்றொரு பெருமகனார், சிரோமணி ர.வரத தேசிகனார் எம்.ஏ. அவர்கள். இவரும் புதுவைப் பிரஞ்சு பண்பாட்டுக் கழகத்தின் தமிழ் ஆய்வாளர்; தமிழ், வடமொழி ஆகிய இருமொழிகளிலும் வல்லவர்.

அவர்கள், இந்நூலைப் படித்துச் சுவையான இடங்கள் சிலவற்றைச் சுட்டியோர் அணிந்துரையும் வழங்கியுள்ளார்கள், அவர்களின் வாழ்த்துரைக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்நூலைப் புதுவைக் கம்பன் கழகத்தின் 29 ஆவது கம்பன் விழாவில் வெளியிட ஏற்பாடு செய்த அதன் தலைவர், புரவலர் திரு.ந.கோவிந்தசாமியார், அதன் செயலர் வழக்கறிஞர் திரு.தி.முருகேசனார் ஆகியோர்க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

புதுவைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், முனைவர் திரு.ஆ.ஞானம் அவர்கள் இந்நூலைக் கம்பன் விழாவில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தார்கள்.

அவர்கட்கு என் இதயம் கனிந்த வணக்கத்தையும் நன்றியையும் கூறி மகிழ்கிறேன்.

புத்தக வித்தகர், வானதி. திரு.ஏ.திருநாவுக்கரசர் அவர்கள், வழக்கம்போல் இந்நூலைப் பொலிவுடன் வெளியிட்டுள்ளார்கள். அவர்கட்கு என் கனிந்த கை கூப்பு.

இந்நூலை அச்சிட்டு தந்த ஸ்ரீ பரமேஸ்வரி அச்சக உரிமையாளர் அவர்கட்கும், முகப்போவியம் வரைந்த திரு.ஆனந்தன் அவர்கட்கும் என் அன்பை உரித்தாக்குகிறேன்.

மேதை கம்பனும் கோதைப் பிராட்டியாரையும் முற்ற உணர்ந்த கற்றோர் - குற்றம் களைந்து என்னைச் சுற்றமாக்கிக் கொள்வர் என்னும் துணிவுடன் இந்நூலைத் தமிழுலகுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

சித்தன் 
10-5-94

                                            பொருளடக்கம்:
மேதை கம்பர்; 
கோதை தமிழ்;  
கோதை நாயகியும் சீதை நாயகியும்;  
சங்கத் தமிழ்மாலை முப்பது;  
மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்;  
நானேதான் ஆயிடுக!; 
மனத்துக் கினியான்.

எழுத்தாளர் பற்றி: பாவேந்தர் பாரதிதாசனின் சீடரான பாவலர்மணி சித்தன், அவரது குயில் பத்திரிகையில் முக்கிய பங்கு ஆற்றினார். தொடக்க காலத்தில் பல் மருத்துவராக பணியாற்றிய இவர், பின்னர் இலக்கிய பணியில் ஈடுபட்டார். நாலாயிர திவ்விய பிரபந்தத்தை நன்கு அறிந்தவர். 50- க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஜீயர் சுவாமிகளால் வைணவ செம்மல் என்ற பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் நடைபெறும் கம்பன் விழாவில் இவரது அறக்கட்டளை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறும்.
More Information
SKU Code VAN B 086
Weight in Kg 0.520000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாவலர்மணி சித்தன் - Paavalarmani Sithan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும் - Medhai Kambanum Kodhai Piratiyum

Similar Category Products





Other Books by பாவலர்மணி சித்தன் - Paavalarmani Sithan