Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4447
Regular Price ₹295.00 Special Price ₹265.00

Save: 30.00 Discount: 10.17%

பிணைப்பு: சாதா அட்டை
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183222943
ISBN-13: 978-8183222945

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சித்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும். எல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால் எல்லோரும் அடைகின்ற இடத்தைத்தான் நீங்கள் அடைவீர்கள். வேறு எவரும் அடைந்திராத இடத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால் வேறு எவரும் செய்திராத காரியங்களைச் செய்யத் துணிய வேண்டும். வெற்றி கிட்ட வேண்டுமென்றால் வித்தியாசமாக இருக்க வேண்டும். வித்தியாசமானவர்கள்தான் புதிய பாதைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

எல்லையற்றக் காலம் மற்றும் வெளியின் ஊடாக நீங்கள் என்னைக் கண்டுபிடித்ததும், நான் உங்களை  கண்டுபிடித்ததும் தெய்வாதீனம்தான். நான் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற நிதர்சனம், உங்கள் வாழ்க்கையில் நிகழப் போகும்  ஒரு மாபெரும் விடியலுக்கான வெள்ளோட்டம்.                             
நான் கதைகளால் நிறைந்துள்ளேன். பாரதியின் மூலமாக என்னை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன். தெய்வீக அபரிமிதத்தை  உங்கள் வாழ்வில் நீங்களே உருவாக்கிக்  கொள்ள உங்களுக்கு சக்தி அளிப்பதற்காக என் கதைகளில் பாரதி பல அவதாரங்களை எடுப்பார்.

உங்களுடைய வலிமையாக விளங்கும் அக தரிசனங்கள், என் மூலம் உங்கள் வாழ்வில் ஒளிவீசப் பிரபஞ்ச சக்தி அருளட்டும். என்னை அனுமதியுங்கள். என் பெயர் ' தெரிந்த ரகசியங்கள்"

உள்ளடக்கம்:-
1.நீங்கள் யாராக இருக்க விரும்புகுறீர்கள்? ஊர்பேர் தெரியாத ஒருவராகவா அல்லது பிரபலமான ஒருவராகவா?
2.மேன்மைத்துவம்.... தொட்டுவிடும் தூரத்தில்! 
3.அபரிமிதத்திற்கு நான் தகுதியானவன்தான் 
4.அனுபவம்... அப்படியென்றால்? 
5.சந்தர்ப்பவாதச் சிந்தனை 
6.வளர்ச்சியை அளவிட வழியேதும் உள்ளதா?
7.ஆழ்மன சந்தேகங்களும் ஆழ்மன நம்பிக்கைகளும் 
8.கீழே உள்ளது உந்தித் தள்ளப்படும்போது மேலே உள்ளது மகிழ்ச்சி கொள்கிறது
9.என்னிடம் ஏகப்பட்ட நேரம் உள்ளது 
10.நீங்கள் யாருடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
11.நானும் என் வெற்றியும் 
12.படிப்படியான பக்குவம் 
13.யார் எஜமான்?
14.ஐயோ, மறுபடியுமா...
15.எல்லாவற்றுக்கும் ஓர் இடம் 
16.வாய்ப்பே இல்லாதபோதும் 
17.வெற்றிக் கோட்டிற்கு அப்பால் 
18.வடிகட்டும் நேரங்கள் 
19.எப்படியோ என்பதல்ல இது! எப்படி என்பதுதான் இது!
20.சூழ்நிலைத் தலைமைத்துவம்  
21.முழுமையான வாழ்க்கை 
22.நல்ல பெயர்! ஆனால் அதன் விலை என்ன?
23.போக்குவரத்து நெரிசலுக்கு அப்பால் 
24.எதிர்பார்ப்பைக் கையாளுதல் 
25.தலைவனை வழிநடத்துதல் 
26.'பெயர் சொல்ல' ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் 
27.நான் அங்கு சென்றடைந்தபோது, அங்கு என்ற ஒன்று அங்கு இல்லவே இல்லை 
28.என் வாழ்க்கைதான் என் பிரார்த்தனை 
29.தாஜ்மகால் கணங்கள் 

ஆசிரியர்: மகாத்ரியா ரா அல்லது டி.டி.ரங்கராஜன் அல்லது ராஜன் மாற்று அணுகுமுறைகள் கொண்ட இந்திய ஆன்மீக குரு. அவர் ஆல்மா மேட்டர் நிறுவனத்தை நிறுவியவர். ஆல்மா மேட்டர் நிறுவனம் ஆளுமை அபிவிருத்தி மற்றும் சுய-முன்னேற்றத்தை மக்களிடையே வளர்ப்பதற்காக உருவானது. Mahatria Ra தனது அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக 'அதிக ஆழத்திற்கு அப்பால்' என்று அழைக்கப்படும் வருடாந்திர ஆன்மீக பயிற்சியை நடத்துகிறார். அவர் அல்மா மேட்டரால் வெளியிடப்படும் 'இன்பினித்தாட்ஸ்' என்ற மாதாந்திர இதழின் ஆசிரியர். 'அன்பின் குரல்' என்றே அவரை அனைவரும் அடையாளப் படுத்துகின்றனர்.

மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4447
Weight in Kg 0.250000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183222945
Author Name T. T. RANGARAJAN. Translator NAGALAKSHMI SHANMUGAM. டி. டி. ரங்கராஜன் @ மஹாத்ரேயா ரா . தமிழில்: நாகலட்சுமி சண்முகம்.
Publisher Name Manjul Publishing House Pvt. Ltd. @ மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:தெரிந்த ரகசியங்கள் - MOST AND MORE - Tamil - Therinda Ragasiyangal

Similar Category Products

Other Books by T. T. RANGARAJAN. Translator NAGALAKSHMI SHANMUGAM. டி. டி. ரங்கராஜன் @ மஹாத்ரேயா ரா . தமிழில்: நாகலட்சுமி சண்முகம்.