நான் கண்ட பாரதம் - எம். அம்புஜம்மாள் - Naan Kanda Bharatham - M. Ambujammal - Nan Kanta Baratham - Bhaaradham Baradham Baratam Baaratam Baaradham Baradh அம்புஜத்தம்மாள் Ambujathammal
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
காகித உறை/ பேப்பர்பேக்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் நான் கண்ட பாரதம், எம். அம்புஜம்மாள் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தனது எழுபதாம் வயதில் "நான் கண்ட பாரதம்" என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
ஆசிரியர் குறித்து: அம்புஜத்தம்மாள் (Ambujathammal, சனவரி 8, 1899-1993) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண் ஆவார். இவரது தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் தாய்வழி பாட்டனார் வி. பாஷ்யம் ஐய்யங்கார் ஆகியோர் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஆவார். அம்புஜத்தம்மாள் 1899 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் வசதியான குடும்பத்தில் பிறந்தார். வீட்டிலேயே கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலம் ,இந்தி, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளையும் கற்றார். அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு இவரும் எளிமையாக வாழ்ந்தார். பிற்போக்கு சிந்தனைகளுடைய குடும்பச் சூழலிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டார். வை. மு. கோதைநாயகி, ருக்குமணி லட்சுமிபதி ஆகியோருடன் இணைந்து பெண்ணடிமைக்கு எதிராகப் போராடினார். பாரதியாரின் பாடல்களைப் பாடி மக்களிடையே விடுதலையுணர்வைத் தூண்டினார் ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அந்நியத் துணிகள் விற்கும் கடைக்கு முன்பாக மறியல் போராட்டம் நிகழ்த்தியதனால் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில், தான் கற்ற மொழிகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தார். காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்ற செல்லப் பெயர் பெற்றார். தனது தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் ”சீனிவாச காந்தி நிலையம்” என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார். 1964 ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.1955 ஆம் ஆண்டு, சென்னை, ஆவடியில் நடைபெற்ற சிறப்புமிக்க காங்கிரஸ் மாநாட்டின் செயலாளராக இருந்து அம்புஜம் அம்மையார் அரும்பாடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
வகித்தப் பதவிகள்:-
மாநிலத் துணை தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் குழு [1957 - 1962]; மாநில சமூக நல வாரியம் (சேர்மன்) [1957 - 1964].
நூல்:-
நான் கண்ட பாரதம் என்ற நூலை எழுதியுள்ளார். அம்புஜம்மாள் சிறந்த எழுத்தாளரும் கூட.
காந்தி குறித்து 'மகாத்மா காந்தி நினைவு மாலை' என்ற நூலை எழுதியிருக்கிறார்.
பல முன்னணி இதழ்களில் நிறையக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
ஆன்மீக நாட்டமும் அதிகம் உண்டு. சித்த மார்க்கத்தில் விருப்பம் கொண்டிருந்தவர். தன் குருவாகக் கருதிய 'காரைச் சித்தர்' பற்றி நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
கே.எம்.முன்ஷி எழுதிய நூலை 'வேதவித்தகர் வியாசர்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.
'சேவாசதன்' என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. எம்.எஸ்.சுப்புலட்சுமி நாயகியாக நடித்திருந்தார்.
தினமணி வெளியிட்டு வந்த இலக்கிய நூல்களுக்கு ஆலோசனையாளராகவும் திகழ்ந்திருக்கிறார்.
ஹிந்தி பிரச்சார சபாவின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். பலருக்கு ஹிந்தி போதித்திருக்கிறார்.
இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 1964ல் 'பத்மஸ்ரீ' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
இவரது வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் வசுமதி ராமசாமி ஆவணப்படுத்தியிருக்கிறார்.
தமிழக அரசு சாலை ஒன்றிற்கு இவரது பெயரைச் சூட்டி சிறப்பித்துள்ளது.
SKU Code | Alnce B 1127 |
---|---|
Weight in Kg | 0.300000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | எம். அம்புஜம்மாள் @ அம்புஜத்தம்மாள் - M. Ambujammal @ Ambujathammal |
Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 20.00 Discount: 10.53%
GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1
Save: 25.00 Discount: 3.85%
GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட சோழன் பாகம் 3
Save: 30.00 Discount: 5.66%
உடையார் முதல் பாகம் - Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1
Save: 25.00 Discount: 5.88%
உடையார் இரண்டாம் பாகம் - Udayar Paagam 2
Save: 15.00 Discount: 3.53%
உடையார் மூன்றாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 3 -Balakumaran - Udayaar
Save: 25.00 Discount: 4.76%