Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Nandanar - Thirumuruga Kirubanandha Variyar Swamigal - நந்தனார் -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri B 002
₹21.00
ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு புத்தகம். 
 
அட்டை: சாதா / பேப்பர்பேக்; 
பக்கங்கள்: 50 பக்கம்; 
பதிப்பு: 2017 ஆண்டு; 
மொழி: தமிழ்; 
வெளியீடு: குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் நந்தனார் புத்தகம்.     
 
என்னுரை:  
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவம் உலகை வலம் வராத காலம். 'பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா இறைச்சி தோல் எலும்பிலே இலக்கமிட்டிருக்குதோ' என்று சிவவாக்கியர் சீறி எழாத காலம். சாதிச்சாயம் பூசப்பட்டுச் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருந்த காலம், அந்தக் காலம்தான் நந்தனார் காலம்.
 
பத்தி செய்தால் முத்தி பெறலாம் என்பதைச் செயல்படுத்திய நந்தனார் புலைச்சாதி என்று தூற்றப்பட்டுப் பின்னாளில் தில்லை தீட்சிதர்களாலே 'ஐயரே' என்று போற்றப்பட்டவர்.
 
நந்தனார் பெருமையைச் 'செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்' என்று சுந்தரர் ஒரு வரியில் ஓடைநீராய் உருவகித்தார். அடுத்து வந்த நம்பியாண்டார் நம்பிகள் நடந்து வரும் காவிரியாக நந்தனார் வரலாற்றைச் சற்றே விரித்தார். பின் வந்த சேக்கிழார் பெருமான் இன்னும் சற்று விரித்துக் கங்கையாகக் காட்டினார்.
 
கீர்த்தனை உலகில் கிரீடமாகத் திகழ்ந்த கோபாலகிருஷ்ன பாரதி யாரோ ஆகாச கங்கையாக அடையாளமிட்டுக் காட்டினார். பின் வந்த வாரியார் சுவாமிகள் மக்கள் கடலில் கலக்கச் செய்தார். அந்த
நாதத் தமிழை ஒலிப் பேழையில் உருவேற்றி நாடெங்கும் முழங்கியவர் என் தாத்தா வாரியார் சுவாமிகள். அந்த ஒலிப்பேழையை நூலாக்கினால் உலகுக்கு மேலும் உபயோகமாகுமே என்னும் கருத்தில் இந்நூல் வெளிவருகிறது.
 
இதனைத் தருமபுரி புலவர் க.தியாகசீலன் மிகவும் மெனக்கெட்டு உருவாக்கி உள்ளார். நந்தனர்தான் அவருக்கு நன்றி கூற வேண்டும். 
 
இனி, நீங்களாச்சி; நந்தனாராச்சி!  
                                                                   
                                                                   - தீபா மயிலப்பன் 
                                                                     குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.
           
புத்தகத்திலிருந்து: 
'இது ரயில் வண்டிதாண்ணா. ஆனா இது திருச்சிக்குப் போற வண்டி' என்கிறார்.
 
'ஐயையோ ஒரு பயலும் சொல்லலையே' என்று துள்ளிக் குதித்து எழுகிறார்.
 
வாங்கிய டிக்கெட் சென்னை எழும்பூருக்கு. ஆனால் ஏறிய வண்டி திருச்சிராப்பள்ளி செல்லும் வண்டி. '
 
இப்படி முக்தியடைய வேண்டுமென்று நாம் எண்ணுகிறோம். ஆனால், அந்த மார்க்கம் தெரியாமல் தவிக்கிறோம். ஆண்டவனை அடைவதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒரு பெரிய நகரம் என்றால் அதற்குப் பல வழிகள் இருக்கும்.
 
'ஒன்றது பேரூர் வழியா றதற்குள' என்பார் திருமூலர்.
 
ஆனால், ஊர் போய்ச் சேர எளிமையான வழி எதுவென்று பார்க்க வேண்டும். கரடு முரடான பாதைகளும் உண்டுதானே.'
 
ஆகவே, இறைவனை அடைவதற்குப் பல்வேறு மார்க்கங்கள் இருந்தாலும் மிகமிக எளிதான மார்க்கம் எதுவென்று சிந்திப்பது அறிவுடைமையாகும்.
 
இறைவனை அடைவதற்கு எளிமையான மார்க்கம் பக்திநெறியாகும்.
 
பக்தியே முக்தியாகிவிடும்.
 
ஆசிரியர் குறித்து: திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
More Information
SKU Code Guhashri B 002
Weight in Kg 0.250000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Thirumuruga Kirubanandha Variyar Swamigal - 64 வது நாயனார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Publisher Name Guhashri Vaariyaar Pathippagam - குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Nandanar - Thirumuruga Kirubanandha Variyar Swamigal - நந்தனார் -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

Similar Category Products





Other Books by Thirumuruga Kirubanandha Variyar Swamigal - 64 வது நாயனார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்