Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஒழுக்கம் - பேராசிரியர் அரங்க இராமலிங்கம் - Ozhukkam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 192
₹120.00
தமிழ் இலக்கியம்; 
இலக்கிய திறனாய்வு நூல். 

மொழி: தமிழ்; 
பேப்பர்பேக்; 
192 பக்கங்கள்;
முதற் பதிப்பு: மார்ச், 2018. 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் ஒழுக்கம், பேராசிரியர்.அரங்க இராமலிங்கம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

மாட்சிமை மிக்க சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் - கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவர் சித்தர் பிரபாவார், திருமந்திரத் தமிழ் மாமணி பேராசிரியர் அவர் அரங்க. இராமலிங்கம், எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., அவர்கள் நல்ல பண்பாளர்; நாடறிந்த நல்ல பேச்சாளர்; நல்ல காளார்; அவர்தம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாகவே இருக்கும். நின்ற சொல் லர்; நீடு கோமினியர், சொல்லேருழவரான அவர்தம் பெருமையை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது தமிழ் முதுகலை வகுப்பில் பயிலும் போதுதான். தம் முழுத் திறமையையும் கையாண்டு இலக்கியங்களை முழு ஈடுபாட்டுடன் அவர் நடத்திய திறம் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது.             

பேராசிரியர் அவர்கள் பல்வேறு கருத்தரங்குகளிலும், பல்வேறு மேடைகளிலும் ஆற்றிய உரை மழைதான் திரண்டு "ஒழுக்கம்" என்னும் அரியதோர் நூலாக (உரைத்தேக்கமாக) வடிவம் பெற்றுள்ளது.

 

"ஒழுக்கம்" முதல் "ஒன்பதாம் திருமுறை" உள்ளிட்ட எட்டுத் தலைப்புகளில் பேராசிரியர் கட்டுரைத்திருப்பது அவர்தம் பன்முனைப்பட்ட அறிவு நலத்தை எடுத்துக் காட்டுகிறது.

 

1.ஒழுக்கம் - ஒழுக்கம் பற்றி பன்னூல்கள் பரக்கப் பேசினும் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்தான் ஒழுக்கத்தை விளக்கிக் காட்டும். அவ்வகையில் தனிமனித ஒழுக்கமும், சமுதாய ஒழுக்கமும் இக் கட்டுரையில் ஆராயப்படுகிறது. திருவள்ளுவர் வழியில் கல்வி கண்ணானால் ஒழுக்கம் உயிராகும் என்ற தெளிந்த கருத்து சுட்டிக் காட்டப்படுகிறது. ஒழுக்கத்திற்கு நூலில் முதலிடம் தந்திருப்பது இவர்தம் அறநெறிப்ப பண்பை தெற்றெனப் புலப்படுத்துகிறது.

 

2.தமிழ் கற்பித்தலில் ஆசிரியர் பங்கு - காந்தியடிகள் கல்வியைப் பற்றிக் கூறியிருப்பதை எடுத்துக் காட்டியும், கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற உண்மையை வலியுறுத்தியும் அமைகிறது இக்கட்டுரை. அதிலும் குறிப்பாக தமிழாசிரியரிடம் இருக்க வேண்டிய புலமையின், பத்துக் கூறுபாடுகளை பேராசிரியர் வரிசைப்படுத்தியிருப்பது இவர்தம் நுண்மாண் நுழைபுலத்தை எடுத்தியம்புகிறது. தமிழாசிரியர்கள் இந்தத் தலைப்பில் உள்ள கட்டுரையைப் பன்முறை பயின்று பயன்பெறுவார்களாக. புலமையின் பத்துக் கூறுபாடுகளில் இறுதியில் உள்ளதான 'நாளை என்று கருதா நன்மனம்' வாய்க்கப் பெறுதல் மானுட இனத்திற்கே மிகவும் வேண்டற்பாலது. அப்படிப்பட்ட மனம் உள்ளவர் தாம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப முடியும்; பேராசை எனும் பிணி அண்டாது வாழ முடியும்.

 

மொழியறிவு   எத்துணைதான் ஒருவர் வாய்க்கப் பெற்றிருப்பினும் அதனை நிரலே பிறருளம் பதிய எடுத்துரைத்தல் என்பது ஒரு தனி ஆற்றல். அதிலும் மாணாக்கர்க்குப் பயிற்றுவித்தல் என்பது மிகவும் கடினமான செயலாகும். அதை உணர்ந்து பேராசிரியர் வழிகாட்டியுள்ளார். மிகச் சிறந்த வழிகாட்டிக் கையேடாக இக்கட்டுரை அமைகிறது.

 

3.ஒளவையார்: 'ஒளவையார் யார்' என்னும் தலைப்பில் சங்க கால ஒளவையார் - அவர்தம் புலமைத்திறம், இடைக்கால ஒளவையார் - அவர்தம் புலமைத்திறம் ஆகியவை பற்றி ஏறக்குறைய நாற்பது நூல்களைச் சான்றாகக் காட்டும் பேராசிரியர் இத்தலைப்பில் பெரிய ஆய்வுக் கட்டுரையே தந்துள்ளார்கள். இமையை உயர்த்தும் இமயச் செய்திகள் இக்கட்டுரையில் ஏராளம்! ஏராளம்!

 

4.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி - சைவ, வைணவ, சித்தர் இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவுடன் பேராசிரியர் அவர்கள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்னும் தலைப்பில் ஆழ்வார்கள் குழுவிலே விஞ்சி நிற்கும் பெருமை வாய்ந்த ஆண்டாள் நாச்சியாரைப் பற்றிச் சிந்தித்த சிந்திப்பே இக்கட்டுரையாகும். 'நாராயணா என்னா நாவென்ன நாவே' என்ற வைர வரிகளை சதாகாலமும் முழங்கிக் கொண்டிருக்கும் பேராசிரியர் அவர்கள் 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' யைப் பற்றி அகச் சான்றுகளோடு விளக்கியிருப்பது தெய்வ மணங் கமழ்வதாக அமைந்துள்ளது.

 

5. பெரியபுராணம் ஒரு வரலாற்று ஆவணம். கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள சக்திவிநாயகர் ஆலயத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் சாரமே பெரியபுராணம் ஒரு வரலாற்று ஆவணம் ஆகும்.

 

இக்கட்டுரையில் தமிழ் இலக்கிய வரலாறு, அதனூடே எழுச்சி பெற்ற பக்தி இயக்கம் ஆகியவற்றைத் தெளிவாக விளக்கியுள்ள பேராசிரியர் அவர்கள் வரலாற்று உணர்வுடன் இக்காப்பியத்தை அணுகியிருப்பது மிகவும் பாராட்டுதற்குரியது. தமிழக வரலாற்றுப் பரப்பையும் அதனுடன் இணைந்த தல வரலாற்றுப் பரப்பையும் ஆய்ந்து முடிவு கண்டிருப்பது பேராசிரியரின் திட்ப நுட்ப அறிவிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. சேக்கிழாரைப் பற்றிச் சுட்டும்போது காலவழு என்னும் வரலாற்றுக் குற்றம் நிகழாமல் காப்பியத்தை யாத்துள்ளார் என்பது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது.

 

6.இருபத்தோராம் நூற்றாண்டுக்கும் வள்ளுவம் - தெய்வத் திருவள்ளுவர் அருளியுள்ள திருக்குறளிலிருந்து பத்துச் சிந்தனைகளை எடுத்துக் கொண்டு இத்தலைப்பில் பேராசிரியர் ஆய்வு செய்துள்ளார். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த வாழ்க்கை நெறிமுறைகள் பலவற்றிற்கு எதிர்மறையான அறம் சார்ந்த சிந்தனைகளை உரத்துக் கூறிய புரட்சியாளர் என்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புதுமையாகவும் புரட்சியாகவும் புகலப் பெற்ற சிந்தனைகளை உள்ளடக்கி எதிர்வரும் நூற்றாண்டுகளுக்கும் பொருந்தக் கூடியனவாகவும், ஏற்கக் கூடியவனாகவும் திருக்குறள் இருக்கும் என்றும் மானுடத்தை வேறாக்கி மனித நேயத்தை விழுதாக்கி மாலின் குறள் உருவைப் போல் ஈரடியாய் மலர்ந்துள்ள குறள் மலர்களின் மனம் காலங்களைக் கடந்தும் கமழும் என்றும் முடித்திருப்பது பேராசிரியரின் ஆழ்ந்த, அகன்ற, நுண்ணிய புலமையை விளக்குகிறது.

 

7.திருஞானசம்பந்தரின் ஆளுமைத்திறம்  - சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார் என்று தெய்வச் சேக்கிழார் சிறப்பித்த திருஞானசம்பந்தரை, அவர்தம் ஆளுமைத் திறத்தை, பக்தி இயக்கத்தை முன்னின்று நடத்திய தலைமைத்துவப் பண்பை விளக்கிக் காட்டுவதே இக்கட்டுரையாகும். திருஞானசம்பந்தரை ஒரு சைவ அருளாளராக மட்டும் பாராமல் அவரை ஓர் இயக்கமாகப் பார்க்கின்ற பார்வை ஓர் புரட்சிப் பார்வை. அப் பார்வைக் கலை நம் பேராசிரியார்க்குக் கைவந்த கலை போலும். சைவ பக்தி இயக்கம் என்ற பெயரில் மாபெரும் தமிழ் இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்தித் தனிப்பெரும் தலைவராகத் திருஞானசம்பந்தரைப் பார்ப்பது சிந்திக்கற்பாலது. திருஞான சம்பந்தரின் புலமைத் துவத்தையும், தலைமைத்துவத்தையும், இறைமைத்துவத்தையும் பேராசிரியர் நன்கு உற்று நோக்கி ஆய்ந்து அளிக்கப் பெற்றதே இக்கட்டுரை எனலாம்.

 

8.ஒன்பதாம் திருமுறை - இலண்டனில் நடைபெற்ற உலகச் சைவ மாநாட்டு மலருக்கு பேராசிரியர் அளித்த கட்டுரை வடிவமே ஒன்பதாம் திருமுறையாகும். ஒன்பதாம் திருமுறை நூலமைப்பையும் ஒன்பதின்மரின் அருட்பாடல்களையும் தனித்தனியாக பேராசிரியர் ஆய்ந்து பிழிவாகக் கொடுத்திருக்கும் செய்திகள் சைவ சமய உலகம் பாராட்டிப் போற்றக் கூடியதாக விளங்குகிறது.   

திருவிசைப்பா பாடல்கள் அனைத்தும் இனிமையும் எளிமையும் நிறைந்த பக்திப் பாடல்கள் எனவும், கற்பார் மனத்தைக் கனிய வைக்கும் எனவும் இரும்பையும் இளக வைக்கும் எனவும் பக்தியின் உச்சிக்குக் கொண்டு சென்று இறைவனோடு கலக்க வைக்கும் எனவும் பேராசிரியர் கூறியிருப்பது அவர்தம் சைவப் புலமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இறுதியாக ஒரு சொல்:- 
சிறுகுழவியாய் இருக்கும்போதே சித்தர் பாடல்களைப் பாட்டனாரால் செவிவாயாக மாந்தியும் இராமலிங்கம் என்று வடலூராரின் பெயரைத் தம் பெயராகச் சூட்டப்பெற்றும், பெரும் புலவராக விளங்கிய தம் தந்தையாரிடத்து வைணவ இலக்கியத்தை நன்குணர்ந்தும் ஏனைய சான்றோர்களால் சைவ மற்றுமுள்ள பக்தி இலக்கியங்களை அறிந்தும் அவற்றுள் ஆழ்த்தும் தோய்ந்தும் படிந்தும் விளங்குகின்ற செந்நெறிச் சீலரான பேராசிரியர் அவர்கள் அம்பலவாணப் பெருமான் சிவகாமவல்லித்தாயார் அருளாசியுடன் அனைத்து  நலன்களும், வலன்களும் இம்மை அம்மை நன்மைகளும் பெற்று விளங்கிட வேண்டுகின்றனம்.

இவண்,
அன்பன்,
புலவர் சி.வெ.சுந்தரம்.

பொருளடக்கம்: 
1.ஒழுக்கம்;  
2.தமிழ் கற்பித்தல் ஆசிரியர் பங்கு;  
3.ஔவையார்; 
4.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி;  
5.பெரிய புராணம் ஒரு வரலாற்று ஆவணம்;  
6.இருபத்தோராம் நூற்றாண்டிற்கும் வள்ளுவம்;  
7.திருஞானசம்பந்தரின் ஆளுமைத்திறம்;  
8.ஒன்பதாம் திருமுறை.

எழுத்தாளர் பற்றி: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்: விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகத்தில் (1954) பிறந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை (1971-1976) பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் எம்.பில்., (1976-1977) பி.எச்.டி., (1977-1982) ஆய்வினைச் செய்தவர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உயர்நிலை ஆய்வினை முடித்தவர். நூற்றிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 40 நூல்களையும் எழுதியவர். சித்தர்சீர் பரவுவார் விருது, திருமந்திரத் தமிழ்மாமணி விருது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விருது, வைணவச் சுடர் விருது, மு.வ.தமிழ்ச் சான்றோர் விருது, இலக்கியச் செம்மல் விருது, சொற்கோ விருது என 30க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையின் தலைவராகச் சிறக்கப் பணியாற்றியவர்.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சுவிட்சர்லாந்து, கனடா, மொரீசியஸ் ஆகிய அயல்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இன்றும் தெய்வத் தமிழை ஒலிப்பவர். 

108 வாரத் தொடர் சொற்பொழிவாக தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் மற்றும் திருமந்திரம் தொடர் சொற்பொழிவுகளை ஒன்பது முறை நிகழ்த்தியவர். 10-வது 108 வாரத் தொடர் சொற்பொழிவாகத் திருமந்திரச் சொற்பொழிவினை நிகழ்த்தி வருபவர்.

கன்னியாகுமரி மாயம்மாவின் அருளாசியினைப் பெற்றவர். 
More Information
SKU Code VAN B 192
Weight in Kg 0.550000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பேராசிரியர் அரங்க இராமலிங்கம் - Professor.Aranga Ramalingam
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:ஒழுக்கம் - பேராசிரியர் அரங்க இராமலிங்கம் - Ozhukkam

Similar Category Products





Other Books by பேராசிரியர் அரங்க இராமலிங்கம் - Professor.Aranga Ramalingam