Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பண்டரிபுரத்து மகான்கள் - பி சுவாமிநாதன் Pandariburathu Magaangal by P.Swaminathan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Sree B 3
₹100.00

ஆன்மிகம்.

பேப்பர்பேக்/ காகித அட்டை; 

144 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

இரண்டாம் பதிப்பு: நவம்பர் 2016.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

என்னுரை: 
 
நமஸ்காரம்.
 
உணவை சாப்பிட்டால்தான், அதன் ருசி தெரியும். அதுபோல் ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றி எழுதி, அங்குள்ள மகிமைகளை ஆன்மிக அன்பர்களுக்கு எடுத்துரைத்தால்தான், அந்த புனிதத் தலத்தின் பெருமை புரியும். அந்த விதத்தில் நம் தேசத்தில் ஆன்மிக உணர்வு இன்று பெருகி இருப்பதற்கு முக்கியமான காரணம் ஆன்மிக எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். எங்கெங்கோ மூலை முடுக்குகளிலும் உள்ள தளங்களைப் பற்றிப் பல கட்டுரைகள் வெளி வந்த காலத்தில்தான், ஆன்மிகம் ஏற்றம் பெற்றது.
 
ஒரு கோயிலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும்போது அங்கு என்ன சிறப்பு, ஆலய மகிமை, தெய்வம் வந்து அமர்ந்த புராணக் கதை போன்ற பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
 
ஒரு மகான் வாழ்ந்தார் என்றால், அந்த மகானின் சிறப்புகளைப் பற்றி நாம் படித்துத் தெரிந்து கொள்ளாமல் அவரைத் தரிசிக்கப் போவது பிரயோஜனப்படாது.
 
பாரத தேசம் முழுதும் எத்தனையோ திருக்கோயில்கள்...அத்தனையும் புராண முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் பண்டரிபுரம் குறிப்பிடத் தகுந்த ஒரு க்ஷேத்திரம். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அற்புத தலம் இது.
 
பண்டரிபுரம் பற்றி எத்தனையோ பேர் அறிந்திருந்தாலும், அங்கு பண்டரிநாதன் வந்து அமர்ந்த கதை, க்ஷேத்திரத்தின் மகிமை, அங்கு வாழ்ந்த மகன்கள் பற்றித் தெரிந்து கொள்வது - போன்ற விஷயங்கள் அவசியம் இல்லையா? அப்படிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்து 'தினமலர்' நாளிதழில் எழுதக் கூடிய ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை நல்கிய 'தின மலர்' அதிபர் திரு.கோபால்ஜி மற்றும் திரு.பார்த்திபன், திரு.இரா.குமார் ஆகிய நண்பர்களுக்கும் என் நன்றி.
 
'தின மலர்'  நாளிதழ் ஆன்மிக இணைப்பு புத்தகத்தில் சுமார் ஆறு மாத காலம் தொடர்ந்து வெளியான இந்தத் தொகுப்பு தற்போது 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்' நூலாக வெளியாகி உள்ளது.
 
என் மீது ஆதரவும் அன்பும் காட்டி வரும் என் நண்பர்களுக்கு இந்த வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அன்புடன்,
பி.சுவாமிநாதன்.
 
உள்ளே: 
பண்டரிபுரம் ஓர் அறிமுகம்; 
புரந்தரதாசர்;  
நாமதேவர்;  
ஞானதேவர்;  
ஜயதேவர்;  
துளசிதாசர்;  
ஜனாபாய்;  
கபீர்தாசர்;  
துக்காராம்;  
ஏகநாதர்;  
சூர்தாசர்;  
சமர்த்த ராமதாசர்;  
நரஹரி;  
மீராபாய்;  
சோகாமேளர்;  
பானுதாசர்;  
கூர்மதாசர்;  
பக்த ராக்கா; 
ஹரிவியாஸர்;  
கர்மாபாய்;  
ரோஹிதாசர்;  
துவாரகை ராமதாசர்;  
மாதவதாசர்.
 
ஆசிரியர் குறித்து: 
ஆசிரியர் : பி. சுவாமிநாதன்
சொந்த ஊர் : திருபுரம்பியம் (கும்பகோணம் அருகில், தமிழ்நாடு); 
படிப்பு : B.Sc. (Maths)) Govt. College for men - கும்பகோணம் M.A. (Journalism) மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; 
அனுபவம் : ஆனந்த விகடன் குழுமம் (22 வருடம்) திரிசக்தி குழுமம் ( 3 வருடம்)
 
ஆன்மீகச் சொற்பொழிவாளராக :
* 'மக்கள் தொலைகாட்சி'யில் 'வாழ்விக்கும் வழிபாடு என்ற தலைப்பில் நம் ஆலயங்களின் புராதனத்தை சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.30 மணி முதல் 7.40 வரை * ' பொதிகை தொலைகாட்சி'யில் 'குரு மஹிமை' என்ற தலைப்பில் பாரத தேசத்து மகான்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.45 மணி முதல் 8.00 வரை) தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார்.
 
பங்கேற்ற தொலைகாட்சி நிகழச்சிகள் :
ஜீ தமிழ் தொலைகாட்சி ( தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் காஞ்சி பெரியவாளின் மகிமையை சுமார் ஒன்றரை வருடம் தொடர்ந்து பேசியது ). சன் நியுஸ் (விவாதங்கள்) விஜய் (பக்தி திருவிழா) ஜெயா ( சிறப்பு விருந்தினர் ) தந்தி டிவி ( சொற்பொழிவுகள் ) ஸ்ரீ சங்கரா ( பல நேரடி ஒளிபரப்புகள் ) மெகா டிவி ....
 
ஆன்மீக எழுத்தாளாராக :
தொடர்கள் வெளியான இதழ்கள் : ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கிய பீடம் உள்ளிட்டவை. மங்கையர் மலர், ஞான ஆலயம், சூரிய கதிர் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார். தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மீக கட்டுரைகளுக்கு புத்தக வடிவம் கொடுத்து வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் ' நிறுவனம் இவற்றை வெளியிட்டு வருகிறது. எழுதிய நூல்கள் : சுமார் 40-க்கும் மேல்.
 
விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் :
* சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புத தொகுப்பு ) 
* ஆலயம் தேடுவோம் ( புராதமான - சிதிலமான அலயங்களைத் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுமுக்கு நடத்தி வைத்தது ) 
* மஹ பெரியவா ( 2 தொகுதிகள் ) 
 
மேலும் சில வெற்றி நூல்கள் : 
திருவடி சரணம் (தொகுதி 1), 
திருவடி சரணம் (தொகுதி 2), 
மகா பெரியவா தொகுதி - 2,
வைணவத்தின் பெருமையும் அடியார்கள் மகிமையும், 
பண்டரிபுரத்து மகான்கள்.
More Information
SKU Code Sree B 3
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பி சுவாமிநாதன் P.Swaminathan
Publisher Name ஸ்ரீ மீடியா வொர்க்ஸ் Sree Media Works
Write Your Own Review
You're reviewing:பண்டரிபுரத்து மகான்கள் - பி சுவாமிநாதன் Pandariburathu Magaangal by P.Swaminathan

Similar Category Products