Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பட்டினத்தார் -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் - Pattinathar - Thirumuruga Kirubanandha Variyar Swamigal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri B 004
₹24.00
ஆன்மிகம் புத்தகம். 

அட்டை: சாதா / பேப்பர்பேக்; 
பக்கங்கள்: 64 பக்கம்; 
பதிப்பு: நான்காம் பதிப்பு - 2015 ஆண்டு; 
எழுத்து : 10.5 புள்ளி 
தாள்: டி.என்.பி.எல். வெள்ளைத்தாள்; 
மொழி: தமிழ்; 
உரிமை: பதிப்பகத்தாருக்கு;
வெளியீடு: குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் பட்டினத்தார் (பேச்சு நடையில்) உள்ள புத்தகம்.  

என்னுரை:   
                  பட்டினத்தாரும் பட்டினத்தாரும்


சித்தர்களில் சிறந்தவர், ஜீவன் முத்தர்களில் முதன்மையானவர், உள்ளத் துறவுக்கும் உடல் துறவுக்கும் உதாரணமானவர். அவர்தான் பாரோர் போற்றும் பட்டினத்தார். தத்துவப் பேரமுதைப் பாமரரும் அறிந்துய்யும் வண்ணம் கோலத் தமிழில் குழைத்துக் கொடுத்தவர். இவர்தம் வரலாற்றை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இரண்டு பாடல்களில் எழுதிக் காட்டுவார்.

 

ஆரூரில் மொத்துண்டு செத்தார்க்கு உயிர்நல்கி அன்னையினால்

நீரூரும் வாழையிற் றீமூட்டிக் கச்சியில் நிந்தைசெய்தோன்

பேரூன் வயிறு பிளந்து, கைப் பாகிய பேய்க்கரும்பும்

சீரூர்தென் ஒற்றியில் தித்திக்கச் செய்தது செந்தமிழே.


அழுதேங்கி நஞ்சிட்ட அக்காள் மனையில் அனர்கொளுத்திக்

கழுமரம் தீப்படக் கண்டு பயறு கடலையெனக்

குழுமிய பாலர்க்கு மண்ணள்ளி யிட்டக் கொதிகடற்பால்

விழுமிய லிங்கமும் ஆனான் ஒருதமிழ் வித்தகனே.


இத்தகைய அருமை பெருமை வாய்ந்த பட்டினத்தார் வரலாற்றை இல்லறத் துறவியாகி, நம் பார்வையிற் பட்டினத்தாராகப் பரிமளித்த வாரியார் சுவாமிகள் வகுத்துக் கொடுத்துள்ளார்.


பட்டினத்தாரின் உபதேசமான "ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு. உயர்செல்வமெல்லாம் அன்றென்றிரு. பசித்தோர் முகம்பார். நல்லறமும் நட்பும் நன்றென்றிரு. நடுநீங்காமலே நமக்கிட்டபடி என்றென்றிரு." என்னும் வரிகளை வாரியார் சுவாமிகள் தம் வாழ்வின் குறிக்கோளாகவே கொண்டு வாழ்ந்தார்.

ஒலிப்பேழையில் இருந்ததைப் புத்தகமாக்கி உங்கள் கைகளில் புரளச் செய்தவர் தருமபுரி புலவர் .தியாகசீலன்.

சேந்தனாரைப் பட்டினத்தடிகள் சீராட்டியதுபோல் இவரை வாரியார் சுவாமிகள் வாழ்த்தட்டும்

அழகுற அச்சிட்ட ஸ்ரீவாரி கார்ட்சுக்கு நன்றி.

 

                                                                    -  தீபா மயிலப்பன்

                                                                       குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.

 
புத்தகத்திலிருந்து:               
அதனைச் சீடன் குருவுக்கு அளித்துத் தானும் பசியாறி இருந்தான்.

காலம் கழிந்தது. அந்த விலைமாதுதான் பெட்டைநாயாகப் பிறந்தாள். ஆயினும் ஒரு சிவயோகியின் பசியைப் தணிவித்த புண்ணியத்தினால் பத்திரகிரியார் தரும் உணவைக் உண்டு அவருடன் இருக்கும் பேற்றினைப் பெற்றது.

ஒருநாள் சிவபெருமான் சந்நியாசி வடிவில் வந்து பட்டினத்தாரிடம் ஆகாரம் கேட்டார்.

அதற்கு பட்டினத்தார், "நீயும் சந்நியாசி, நானும் சந்நியாசி. என்னிடம் ஏன் வந்தீர். மேற்குக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கின்றான். அவனிடம் போய்க் கேள்." என்றார். 

அதுபடியே மேலைக் கோபுர வாசலுக்கு வந்தார். வந்தவர் பத்திரகிரியாரைப் பார்த்து, "ஐயா, கீழ கோபுர வாசலில் ஒரு சந்யாசி இருக்கின்றார். அவரிடத்திலே சாப்பாடு கேட்டேன். சந்யாசிகிட்டே சந்யாசி வரலாமா? மேல கோபுர வாசலில் குடும்பஸ்தன் இருக்கின்றான். அங்கே போய்க் கேள் என்று அனுப்பினார்." என்றார்.          

பத்திரகிரியார் தலையில் அடித்துக் கொண்டார். என்னைக் குருநாதர் குடும்பஸ்தன் என்று சொன்னாரா? என்னிடத்தில் மாற்றுக் கௌபீனம் இல்லையே. சுற்று முற்றும் பார்த்தார். ஓடு இருந்தது. இந்த ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தன் ஆக்கி விட்டனவே. 'ஓடு என்னை விட்டு ஓடு" என்று சொல்லிப் போட்டு உடைத்தார். 

அது நாயின் தலை மீது பட்டது. முதலிலே நாய்க்கு முக்தி. பிறகு பத்திரகிரியாருக்கு முக்தி. 

ஆசிரியர் குறித்து: திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
More Information
SKU Code Guhashri B 004
Weight in Kg 0.250000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name Thirumuruga Kirubanandha Variyar Swamigal - பிரவசன சுதர்னவ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Publisher Name Guhashri Vaariyaar Pathippagam - குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:பட்டினத்தார் -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் - Pattinathar - Thirumuruga Kirubanandha Variyar Swamigal

Similar Category Products