ரிபு கீதை (சிவ ரகசியம்) ஞான கோவை - பா.கமலக்கண்ணன் - Ribu Geethai (Siva Ragasiyam) Gnanakovai
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
VAN B 412
₹90.00
ஆன்மீகம் நூல்.
பேப்பர்பேக்;
112 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
வானதி பதிப்பகம்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் ரிபு கீதை ( சிவரகசியம்) ஞானக்கோவை, பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
முன்னுரை:
உலகிலேயே இந்திய நாடு ஞான பூமியாக உயர்ந்து விளங்குகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் இமயமலைச் சாரலில் தோன்றின. எண்ணற்ற முனிவர்கள் அங்கே தவம் செய்து வருகின்றனர். இந்த உன்னதமான நிலைக்குக் காரணம் என்னவென்று இராமலிங்கப் பெருமானார் கூறுவதைக் கேளுங்கள்:
1. புறந்தலை நடுவொடு புணர்த்து ஒருக்கடை
அறம்பெற வகுத்த அருட்பெருஞ் சோதி
- அருட்பெருஞ்சோதி அகவல், வரி 515-516
பொருள்:
பூமிக்கு மேலே ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்துள்ள ஏழு வானங்களாகிய 1.சலவெளி; 2.வன்னிவெளி; 3.வாயுவெளி; 4.ஆகாசவெளி; 5.பரைவெளி; 6.பராபரவெளி; 7.சச்சிதானந்தவெளி ஆகியவற்றுள், நடுவிலுள்ள ஆகாச வெளியோடு பூமியை இணைத்து, ஏழாவது வானமாகிய நடராஜபதி உறையும் சச்சிதானந்த வெளியோடு பொருத்தி, அறநெறியில் இயங்குமாறு அருள்புரிந்த பரப்பிரமமே !
2.புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளவி
அவையுற வகுத்த அருட்பெருஞ் சோதி
- அருட்பெருஞ்சோதி அகவல், வரி 365-366
- பூமியிலுள்ள பரிசுத்தமான இமயமலையைச் சேர்ந்த (பொற்பதி) கயிலையங்கிரி என்ற மலையை, நடராஜப் பெருமான் உறையும் ஏழாவது வானமாகிய சச்சிதானந்த வெளியோடு இருகப் பிணைந்து, இந்த பூமி ஒரு கட்டுப்பாட்டில் நிலையாக இயங்குமாறு அமைத்த பரப்பிரமமே!
இராமலிங்கப் பெருமானார் கூறிய விஞ்ஞான விளக்கம், வேறு எந்த சிதறும் முனிவரும் கூறாததாகும். இக்காரணம் பற்றியே இந்திய நாடு ஞான பூமியாகத் திகழ்கிறதென்று உலகம் உணருமாக !
இந்திய நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிவலிங்க வழிபாடு செய்யப் பெற்று வருகின்றது. சிவலிங்க வடிவத்தின் விளக்கத்தை திருமந்திரம் இவ்வாறு கூறுகின்றது:
1.தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
- திருமந்திரம், 1823
2.சீவன் எனச் சிவன் என்ன வேறில்லை
- திருமந்திரம், 2017
இந்த திருமந்திரப் பாடல்களால், உயிரின் வடிவமே சிவலிங்கம் என்றும், அதுவே பரப்பிரம்மத்தின் வடிவமென்றும் அறிகிறோம். இந்த அத்வைத உண்மை, பரமசிவன் அருளிய சிவரகசியம் என்ற நூலில் அமைந்துள்ளது. அந்த நூலைப் பரமசிவன், ரிபுமுனிவர், அகத்தியர், இராமலிங்கர் ஆகிய மூவருக்கும் நேரில் கற்பித்தார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அம்மூவருள் ரிபு முனிவர் அருளிய "ரிபு கீதை" யே நம்முடைய ஆய்வுக்குரிய நூலாகும்.
"காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த
கற்பமாகிய (திருஅருட்பா 4/9 ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை, 11) திருஞானசம்பந்தப் பெருமான், சிவ ரகசியத்தின் அடிப்படையில் திருவீழிமிழலைப் பதிகம், பாடல் எண் 4-இல் இவ்வாறு பாடியுள்ளார்:
உரைசேரும் எண்பத்து நான்கு
நூறாயிரம் யோனி பேதம்
நிறைசேரப் படைத்தும் அவற்றின்
உயிருக்குயிராய் அங்கங்கே நின்றான்...
சம்பந்தர் தேவாரத்தில் இந்த சான்றிலிருந்து இறைவனே உயிரினங்களைப் படைத்தான் என்றும், அவற்றின் உயிராக அவனே அமர்ந்துள்ளான் என்றும் தெள்ளத் தெளிவாக அறிகின்றோம்; இதைப் போன்று சைவத் திருமுறைகளில் ஏராளமான சான்றுகள் உள்ளன. சிவரகசியத்தையும், பன்னிரு திருமுறைகளையும் மறுப்போர் சைவ சமயத்தவராக இருக்க முடியாது. ஆயினும் "சைவ சித்தாந்த அடிப்படைக் கொள்கைகள்" என்ற நூல் இவற்றை நேருக்கு நேராக மறுத்து, உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றும் இறைவன் உயிராகமாட்டான்; உயிர் இறைவனாக மாட்டாது என்றும் முழங்குகின்றது. இந்த அபத்தமான கருத்துக்கள் நூறாண்டு காலமாக நிலவி வருகின்றன.
கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்பவர், சிதம்பரத்தில் சைவ சித்தாந்த விளக்க உரையாற்றிய போது, இராமலிங்கர் எதிர் வினாக்கள் எழுப்பியதால், ஆறுமுக நாவலரும் அவரைச் சேர்ந்தோரும் "அருட்பா அல்ல மருட்பா" என்று எதிர் முழக்கம் செய்தனர்.
"சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கைகள்" என்ற நூல் பல்கலைக்கழகப் பாடநூலாக வைக்கப்பட்டு விருது வழங்கப்படுவது பெரிய பாவமாகும். சைவ சமயத்திலுள்ளோர் எவரும் இந்த அநீதியைச் சிந்திக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த அவல நிலையில், நடராஜப் பெருமானே இயற்றியருளிய "சிவரகசியம்" என்ற நூலை - அவரே ரிபுமுனிவருக்கு உபதேசித்தபடி உருவான "ரிபு கீதை" என்ற நூலை, ஆய்வு செய்து, மெய்ஞ்ஞான உண்மைகள் அடங்கிய 135 பாடல்களைத் தொகுத்து, "ரிபு கீதை (சிவரகசியம்) ஞானக்கோவை " என்ற தலைப்பில் இந்த நூலை உருவாக்கி பரமசிவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன். சைவ சமயத்தைச் சேர்ந்தோர் யாவரும் இந்த நூலைக் கற்று, சைவத்தின் உண்மைப் பொருளாம் சிவரகசியத்தைச் சிந்தித்து, ஞானத் தவம் மேற்கொள்ள எல்லாம் வல்ல பரமசிவன் அருள்பாலிக்க வேண்டும் என்று மனமார வேண்டுகின்றேன்.
இந்நூலுக்குச் சிறப்பானதொரு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.
என்னுடைய 35ஆவது நூலாக, இதை வெளியிடும் வானதி உரிமையாளர் Dr.திரு.ராமநாதன் செட்டியார் அவர்களுக்கு நான் பெருநன்றி கடப்பாடு உடையேன்.
வழக்கம்போல் நல்ல முறையில் கணினி ஒளிஅச்சு செய்த நாஞ்சில் பெ.மணி அவர்களுக்கு என் நன்றிகள்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
இங்ஙனம்,
பா.கமலக்கண்ணன்
துணை கலெக்டர் (ஓய்வு).
16, கிழக்குத் தெரு,
பழைய சாரம்,
புதுச்சேரி - 605 013.
9952418046; 0413 2248046
you tube : bakamalakkannan
www.ramalingaperumanar.com
email: kamalakkannan1932@gmail.com
பொருளடக்கம்:
1.சிவரகசியமும் ரிபு கீதையும்;
2.நிதாகன் முதலான சீடர்களுக்கு ரிபு முனிவரின் உபதேசம்;
3.ரிபு முனிவருக்கு நிதாகனின் நன்றியுரை;
4.குருகுலக் கல்வி முடிந்து செல்லும் சீடர்களுக்கு ரிபு முனிவரின் ஆசியுரை;
5.ரிபு கீதையில் ஒளிரும் முத்துக்கள்;
இந்த ஆய்வுநூலில் மேற்கோள் காட்டப் பெற்றிருக்கும் நூல்களின் பட்டியல்.
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால் 1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
SKU Code | VAN B 412 |
---|---|
Weight in Kg | 0.420000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹140.00
Save: 20.00 Discount: 12.50%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%