Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Romapuri Pandiyan by Kalaignar M Karunanidhi ரோமாபுரி பாண்டியன் - கலைஞர் மு. கருணாநிதி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 30
Regular Price ₹400.00 Special Price ₹360.00

Save: 40.00 Discount: 10.00%

சரித்திர புதினம்.
 
655 பக்கங்கள்.
ஆறாம் பதிப்பு: டிசம்பர் 2014; 
   
 
FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
மு. கருணாநிதி எழுதிய வரலாற்றுப் புதினத்தின் கதை. ரோமாபுரி பாண்டியன் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வரலாற்று தொடர். இந்த நூல் பற்றி ‘அறிஞர்கள் பார்வையில் கலைஞர்’ என்கிற நூலில், ‘‘பொதுவாக, வரலாற்றுப் புதினங்களை... வாசகர்களை மகிழ்விப்பதற்காகவே எழுதுவர். கலைஞர், வாசகர்களை இன்புறுத்தவும், அறிவுறுத்தவும் இதனை எழுதியுள்ளார்’’ என்கிறார் டாக்டர் இராகு.நாகு. ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசரின்பால் பாண்டிய மன்னன் தூது அனுப்பியதாக இலக்கியங்களும், வரலாற்றுக் குறிப்புகளும் கூறுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டே கருணாநிதி ரோமாபுரி பாண்டியனைப் படைத்துள்ளார். 
 
                                *** 
 
அறிமுகம்: 
ரோமாபுரிக்கும், தென்னகத்திற்கும் இந்தக் காலத்திற்கு முன்பே வாணிபத் தொடர்புகள் ஏற்பட்டு, இரு நாட்டுக்காரர்களும் அளவளாவி மகிழ்ந்தனர். கரிகாலனும், பெருவழுதிப் பாண்டியனும் மகுடம் புனைந்த பிறகு ரோமாபுரித் தொடர்பு வேகமாகத் தழைத்து வளரலாயிற்று. அகஸ்டஸ் சீசர் காலத்தில் ஓங்கி எழுந்த அந்த உறவு பல ஆண்டுக்காலம் நீடித்தது. நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்திற்கு பிறகுதான் அந்த உறவு சிறிது சிறிதாகத் தேய்ந்து மாய்ந்தது என்று கூறலாம்.
 
தமிழகமும், ரோமும் கொண்டிருந்த தொடர்புகளுக்குச் சான்று பகரும் வகையில் புதைபொருள் ஆராய்ச்சிகள் துணை நிற்கின்றன. 
 
எப்படியோ தமிழகமும், ரோமும் எல்லா வகையிலும் உறவாடியிருக்கக் கூடும் என்பதற்கான சான்றுகள் புதைபொருள் ஆராய்ச்சி மூலமும், இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றிலிருந்தும் வெகுவாகக் கிடைத்திருக்கின்றன.
 
இந்தப் பழைய தொடர்பினை மையமாக வைத்துதான் "ரோமாபுரிப் பாண்டியனை" உருவாக்கிடத் துணிவு பெற்றுள்ளேன்.
 
அகஸ்டஸ் சீசர் காலம் கி.மு.39 முதல் கி.பி.14 வரை! கரிகாலன் காலம் கி.மு.60 முதல் கி.மு.10 வரை. பாண்டியன் பெருவழுதி கரிகாலனின் நண்பன் மட்டுமல்ல. ரோமுடன் நட்புக் கொண்டிருந்தவன் - தூதரை அனுப்பியவன். 
 
அகஸ்டசும் அந்தோணியும் போர்க்களத்திலே சந்தித்துத் திரும்பியிருக்கிறார்கள்! அந்தோணியின் முடிவு இன்னும் சொல்லப்படவில்லை; கிளியோபாத்ராவின் சோக முடிவினையும் எழுதிடவில்லை! நமது கற்பனைக் கதாநாயகி எங்கிருந்து வரப்போகிறாள் என்பதும் அறிவிக்கப்படவில்லை. அவள் கற்பனைக் கதாநாயகிதானா? அல்லது சரித்திர நூலின் வரிகளில் ஒளிந்து கொண்டு இதுவரை அறிமுகமாகாத ஆரணங்கா ? ரோமாபுரிப் பாண்டியன் யார்? இந்த விசித்திரமான தலைப்பு புரிய வைக்கப்போகும் பொருள் என்ன? 
 
இதுவும் புதிராகவே இருக்கிறதல்லவா? இருக்கட்டும்! இருக்கட்டும்! முதலில் ரோமாபுரிக்கு, தமிழகத்துக்கும் உள்ள தொடர்புகளும், காலக் குறிப்புகளும், சமகால மன்னர்களின் பெயர்களும் ஐயமின்றித் தெரிந்தால் போதும். அவை தெளிவாகத் தெரிந்துவிட்டன இப்போது!
 
இனி, கதையைத் தொடரலாம் அல்லவா? 
 
ரோமாபுரியோடு தமிழ்நாடு வாணிகத் தொடர்புடையது மட்டுமன்று. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது. ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது. இதைத் திறம்பட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இவர்கள் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்படியாக இருக்கின்றது. கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தாரோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் இந்தக் காவிரி நாட்டிலேயேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான், காவிரிக்கு அவன் கரை கட்டினான். இவரும் காவிரி நீருக்கு ஒரு வரம்பு கட்டுவதற்கு இயன்றவரை முயல்கின்றார்.
 
- மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்.
 
ஆசிரியர் பற்றி: முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார்.  இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
More Information
SKU Code Bharti B 30
Weight in Kg 0.500000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Kalaignar M Karunanidhi கலைஞர் மு. கருணாநிதி
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Romapuri Pandiyan by Kalaignar M Karunanidhi ரோமாபுரி பாண்டியன் - கலைஞர் மு. கருணாநிதி

Similar Category Products