Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சக்தி வழிபாடு - பகீரதன் - Sakthi Vazhipaadu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 446
₹60.00
ஆன்மீகம் நூல்.
பேப்பர்பேக்;
முதற் பதிப்பு: ஜூலை 1998; 
300 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
வானதி பதிப்பகம்.

 FREE SHIPPING ON ALL ORDERS. 
 Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் சக்தி வழிபாடு, பகீரதன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

என் உரை :
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாத்திகர்கள் மேடையில் ஒரு பிலாக் கணம் பாடுவார்கள்.

சொல்லி வாய்த்த மாதிரி நாத்திகர்கள் மேடைகளில் "அடியே! மதுரை மீனாட்சி! உனக்கு என் மாணிக்க மூக்குத்தி?" என்று கேட்பார்கள்.

அந்த மாணிக்க மூக்குத்தியின் சுடர் ஒளியில்தான் மதுரை மக்களின் வாழ்வும் வளமும் அடங்கிக் கிடக்கின்றன என்ற அடிப்படை தெரியாதவர்கள்.

'செங்கயல் நெடுங்கண்' அங்கயற் கன்னியின் மங்கல அழகைப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்.

பாண்டிய மன்னர்கள் பார்புகழ ஆண்டது அவளது அருளினால்தான்.

அவளால்தான் பழைமை மாறாத புதுமையை இன்றும் பெற்றிருக்கிறது மதுரை.

சென்ற அரை நூற்றாண்டுக்கு மேலாக மேடைதோறும் முழக்கிய நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு கொள்கை இப்போது காலாவதி ஆன பாத்திரமாகிவிட்டது. இதற்கு சாட்சி இன்று அங்கயற்கண்ணி மக்களின் பக்தி வெள்ளத்தில் மிதக்கிறாள்.

காஞ்சி காமாட்சி தங்கத் தேரில் பவனி வருகிறாள். அங்கும் மக்களின் பக்தி வெள்ளம்.

வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் நீந்திக் கரையேறுகிறவனுக்கு அடைக்கலம் கொடுக்கத்தான் நம்முடைய முன்னோர்கள் இத்தனை கோயில்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.

மற்றெல்லா காட்சிகளையும்விட இந்தக் கோயில்கள் மட்டும் ஏன் இப்படி மனிதர்களைக் குலவை இட்டு அழைக்கின்றன?

ராமகிருஷ்ண பரமஹம்சரும், திருக்கடவூர் அபிரமிப் பட்டரும் சக்தி வழிபாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில் இருக்கும் ஒரு ஞான யோகி இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டில் தமிழகத்தில் இருக்கும் பிற சமய வழிபட்டுத் தலங்கள் எல்லாம் சக்தி வழிபாட்டுத் தலங்களாக விளங்கும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார்.    
நாத்திகர்களின் கடவுள் மறுப்புக் கொள்கையை வற்புறுத்துவதற்காக மதுரை மீனாட்சியையும், காஞ்சி காமாட்சியையும், காசி விசாலாட்சியையும் பற்றி கொச்சைப் படுத்திப் பேசியதைக் கேட்டு - 

சக்தி வழிபாட்டின் பெருமையை "சத்திய கங்கை"யில் தொடர்ந்து எழுதி வந்தேன்.

சக்தி வழிபாட்டுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று ஏராளமான கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன.

பதிப்பக துறையின் இமயமாக விளங்கும் வானதி திருநாவுக்கரசு அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நூலாக வெளியிடுவதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

வானதி திருநாவுக்கரசு பக்தியுள்ளவர். நட்புக்கு இனியவர். பதற்றமோ கோபமோ, சலனமோ இல்லாதவர். கடுமையான உழைப்பாளி.

சுயபுத்தி, சுய சிந்தனை, எதையும் எடைபோடும் ஆற்றல் - இவை வானதி திருநாவுக்கரசரின் தனித்தன்மை.

எழுத்தாளர்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவர்.

'ஜெகசிற்பியன்' என்று அருமையான எழுத்தாளர். அவருடைய புத்தகங்களை எல்லாம் வெளியிட்டவர் வானதி திருநாவுக்கரசு.

வானதி திருநாவுக்கரசு கொடுத்த ராயல்டி தொகையிலேயே அவர் குடும்பம் நடத்தி வந்தார். சொந்த வீடு கட்டினார்.

திடீர் என்று மாரடைப்பால் மறைந்து விட்டார்.

அவருடைய மூன்று பெண்களுக்கும் தந்தையாக இருந்து திருமணம் செய்து வைத்த உத்தம சீலர் வானதி திருநாவுக்கரசு அவர்கள்.

'இடுக்கண் களையும்' அந்த மனித நேயத்துக்காக வானதி திருநாவுக்கரசை நாடே மதிக்க வேண்டும்.

எப்போதும் அவர் ஆரோக்கியத்துடனும், ஆனந்தத்துடனும் இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.

'சக்தி வழிபாடு' என்ற இந்த நூலுக்கு முன்னுரை எழுதிக் கொடுக்கும்படி அருட்செல்வர் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

அருட்செல்வர் அவர்களும் சிறப்பான முன்னுரை எழுதிக் கொடுத்தார்.

இந்த நூல் உருவாவதற்கே அருட்செல்வர்தான் காரணம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

பகீரதன் 
02.08.1998.
சென்னை-17

                                       பொருளடக்கம்:-
1.சக்தி வழிபாடு;  
2.தாய்;  
3.தாயாகிய சக்தி;  
4.அருள் மாரியம்மன்;  
5.கொங்கு நாடும் சக்தி வழிபாடும்;  
6.பெருங்கதையில் கொற்றவை;  
7.தமிழகமும் கன்னித்தாயும்;  
8.தமிழ்நாட்டில் காளியும் காத்தாயியும்;  
9.இன்னும் சில சக்தி சொரூபங்கள்;  
10.மகிஷாசுரமர்த்தினி;  
11.தேவி பாகவதமும் நவராத்திரி கதைகளும்;  
12.நவராத்திரி விரதம்; தத்துவம்;  
13.தேவிக்கு உரிய திருவிழாக்கள்; 
14.கொற்றவையின் கோலங்கள்;  
15.தேவி பக்தர்கள் இருவர்;  
16.பழைய கதையும் புதிய கதையும்;  
17.இந்திய ஒருமைப்பாட்டுக்கு முதல் குரல் கொடுத்த தமிழர் சங்கரர்; 
18.இந்தியா எங்கும் தேவி வழிபாடு;  
19.இந்திய வரலாற்றில் சக்தி வழிபாடு;  
20.காலவெள்ளத்திலே எதிர்நீச்சல்;  
21.பரமஹம்சர் கண்ட பராசக்தி;  
22.ஒருமைப்பாட்டுக்கு ஒரு தெய்வம்;  
23.அறிவுச்சுடரை ஏற்றுபவள் சக்தி.      
                                                                                                      
எழுத்தாளர் பற்றி : பகீரதன் எழுத்தாளர். இதழாசிரியர். புதினங்கள். சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் எழுதியவர். விடுதலைப் போராட்ட வீரர். பகீரதன் தொடங்கிய "சத்திய கங்கை' என்ற இதழ் தொடர்ந்து 33 ஆண்டுகள் வெளிவந்து சாதனை படைத்தது. 18 ஆண்டுகள் கல்கியில் துணையாசிரியராகவும், "ஓம் சக்தி' மாத இதழில் 14 ஆண்டுகள் ஆசிரியராகவும், "கிசான் வர்ல்ட்' என்ற ஆங்கில வேளாண்மை இதழில் 4 ஆண்டுகள் இணையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 14 புதினங்கள், 4 சிறுகதைத் தொகுதிகள். தவிர, தாம் சென்ற இடத்தைப் பற்றியெல்லாம் அவர் எழுதிய எண்ணற்ற பயணக் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை.இராமலிங்கர் பணிமன்றம், பாரதியார் சங்கம் ஆகிய இலக்கிய அமைப்புகளில் பல்லாண்டுகள் செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் பகீரதன்.
More Information
SKU Code VAN B 446
Weight in Kg 0.490000
Brand Bookwomb
Author Name பகீரதன் - Bageerathan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:சக்தி வழிபாடு - பகீரதன் - Sakthi Vazhipaadu

Similar Category Products





Other Books by பகீரதன் - Bageerathan