Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சமயம் ஒரு புதிய பார்வை (ஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி) - சுகி.சிவம் - Samayam Oru Puthiya Paarvai (Aanmiga Poongavil Athisaya Thulasi)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 489
₹70.00
ஆன்மீகம் நூல்.   

பேப்பர்பேக்; 
172 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
ஐந்தாம் பதிப்பு: ஜனவரி, 2013.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் சமயம் ஒரு புதிய பார்வை (ஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி), சுகி. சிவம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

முன்னுரை: 
தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதினாலும், இலக்கியத்தை மையப்படுத்தி எழுதும்போது மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது. அதிலும் சமய இலக்கியங்கள், பழைய கவிதை நூல்கள் பற்றி எழுதும்போது ஒரு மலைக் காட்டில் சஞ்சரிக்கும் பொது அநுபவிக்கும் குளுமையும் கேட்கும் ரீங்காரமும் எனக்குக் கிடைக்கிறது. 

அந்தச் சுகம்தான் இந்தப் புத்தகம். பல்வேறு கால கட்டங்களில் 1995 முதல் 2006 வரை பல்வேறு பத்திரிகைகளில் குறிப்பாகத் தீபாவளி மலர்களில் வெளியான கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் நிறைந்துள்ளன. 

ராதா காதலன் என்றொரு கட்டுரை, ராதையின் காதல், சரீரம் ஆன்மா இரண்டையும் ஊடுருவி நிற்கும் அழுத்தமும் தூய்மையும் வாய்ந்தது என்கிற கோணத்தில் எழுந்தது. என் நெஞ்சின் அருவி அந்தக் கட்டுரை. ராதையின் பிரேமை அதி அற்புதமானது. ஆண்டாள், மீரா, கணணனின் ஸர்வ லோகத்துக் காதலிகள் யாரும் எட்டமுடியாத நிலை அது. மிக உயர்ந்த மலையுச்சியில் இருந்து தண்ணீர்ப் புகை தூவி விழும் சில் அருவி அந்தக் காதல். மலையின் உச்சி என்கிற உயரமும், அருவி பள்ளத்தை நோக்கிப் பாயும் பள்ள மடையும் சேர்ந்த எதிர் எதிர் நிலைகளின் இனிய கலவை அது. உயரத்தை வியப்பதா பள்ளத்தில் லயிப்பதா என்று பார்வையாளனைத் தடுமாற வைக்கும் பசுமைப் புதிர் போன்ற அருவியின் நிலைதான் மிக உயரமான கண்ணன் ராதையின் பள்ளத்தாக்கு நோக்கிப் பாயும் காதல் ஆவேசம். கவிதா வெறியோடு வெளிப்பட்ட கலவை ராதா காதலன். 

அதில் உள்ள ஓர் ஆதங்கம் ஓர் அமர இலக்கியம். இந்த இலக்கிய அனுபவங்கள் தாண்டி பக்தி மணம் கமழும் கட்டுரைகள் இந்நூலை அழகு செய்கின்றன. வள்ளி மணாளன் என்கிற கட்டுரை முருகன் கருணா மூர்த்தி என்கிறது. அவனது மோகம் மோகமல்ல, மோக தயை என்று முறுவலிக்கிறது. வெற்றிலை பாக்கு மோகத்தின் மூலச் சரக்கு... ஆனால் வழிபாட்டில் ஞானச் சரக்கு. அந்தத் தாம்பூலம் போலவே வள்ளி மணாளன் கட்டுரை... ஞான மோகத்தின் அத்தாட்சி அது. 

தெய்வசிகாமணி என்கிற கட்டுரையில் எல்லாத் தெய்வங்களின் செய்கையிலும் அதாவது உச்சத்தில் முருகன் இருக்கிறார் என்பதை Logicஉடன் எழுதி இருக்கிறேன். அது வெறித்தனமான நோக்கில் எழுதப்பட்டது அல்ல... உற்சாகத்தின் உயரத்தில் உருவான ஒரு வித்தியாசமான பார்வை அவ்வளவே.

கந்தர் அநுபூதிக்குப் பலர் பல விளக்கங்கள் எழுதி இருந்தாலும் மிகக் கோர்வையாக- அதே சமயம் தீர்க்கமாக - மிகச்சிறிய விளக்கக் கட்டுரை தந்திருக்கிறேன். கந்தர் அநுபூதி பற்றிய என் பேச்சு அந்தக் கட்டுரை. ஐம்பத்தோரு பாடல்களுக்கும் அர்த்தம் சொல்வதைவிட ஊடுருவி நிற்கும் உயிரைப் படம் பிடித்துக் காட்டிய கட்டுரை அது. 

அபிராமி அந்தாதி பற்றிய கட்டுரையும் அப்படியே. வாகீச கலாநிதி கி.வா.ஜ பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது பாதிப்பில் எனக்கு அந்தாதி மீதும்  அநுபூதி மீதும் ஆர்வம் பிறந்தது. அதில் அபிராமி அந்தாதி என் ஆன்மாவுக்கு வெளிச்சம் ஊட்டிய ஞானத் தமிழ். ஒளிவீசும் ஒலியே ஒவ்வொரு வரியாகவும் உருப்பெற்று வந்திருக்க வேண்டும். 'அம்மா' என்கிற கோணமே அந்நூலின் திறவுகோல்... அந்தச் சுருதி விலகாமல் படித்தால் அது ஒரு ஆன்மிக அநுபவம். 

மங்கையர் மலரில் ஒருமுறை பெண்களை உயர்த்தும் ஆன்மிகம் என்றொரு இணைப்பு நூல் எழுதினேன். பெண்ணுக்குச் சமய உலகில் உள்ள இடம், அவர்கள் தனிப் பெருமை என்ன என்று பல்வேறு துனைச் செய்திகளுடன் விளக்கி இருக்கிறேன். ஆண்கூட ஆணாகத் தன்னை எப்போதும் உணரும் பொது பக்தி முழுமை அடைய முடியாது என்பது பேருண்மை. பெண் மனமே பக்தியை உணரும் பூரண நிலை... அதனால்தான் ராமகிருஷ்ணர், ஞானசம்பந்தர், நம்மாழ்வார் போன்ற ஆண்கள் நாயகி பாவத்தில் நின்று கடவுளை உணர்ந்தனர். பக்தி உலகில் பெண்களின் பெருமையை உணர்த்த - உணர அந்த ஒரு கட்டுரையே போதுமானது. 

கிட்கிந்தையை அரசாண்ட வலி இராமன் தன்னைக் கொள்ள வந்ததை அறிந்தான் இல்லை. ஆனால் அவன் மனைவி தாரை அறிந்திருந்தாள். இது Inteligence-ஆ Intuition-ஆ என்பது முக்கியமல்ல... ஆணைவிட பெண் எந்த உயரத்தில் இருந்தாள் என்கிற அபூர்வ உண்மையை உணர்த்தும் நிலை. 

சமயம் ஏன்னு வரும்பொழுது சென்ற நூற்றாண்டில் தமிழ்ச்சமய உலகை வெகுவாக பாதித்த இரு நபர்கள் காஞ்சிமகா சுவாமிகள் மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். இவர்கள் இருவரது மேன்மையையும் பூரணமாக உணர்ந்து உருவானதே என் ஆன்மிக அலைவரிசை. என் ஆன்மிகத்தின் பிதாவும், மாதாவும் அவர்களே. அவர்களை மாறுபட்ட முகாம்களின் தலைவர்களாக மட்டுமே பார்த்தது தமிழ்ச்சமய உலகம். ஆனால் அவர்கள் இருவருமே சமயத்தை மிகச் சரியாக கொண்டு செலுத்த கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசார்யர்கள் என்பதே என் கருத்து. 

எதிர் எதிர் முகாம்களின் தலைவர்களாகப் பலர் கருதும் இந்த இரண்டு ஞானத் தலைவர்களின் ஆத்ம சக்தியைப் பூரணமாக உள்வாங்கி நிற்பதுதான் எனது முழு பலம். கடவுளை மக்கள் உணர கஷ்டப்பட்டவர் காஞ்சி மகான் மக்களை கடவுள் ஏற்கக் கஷ்டப்பட்டவர் குன்றக்குடி மகான். சமயத்தைப் பாதுகாக்கும்படி சமுதாயத்திற்கு அறிவுறுத்தியவர் காஞ்சி மகான். சமுதாயத்தை பாதுகாக்கத் தவறினால் சமயம் அழிந்து போகும் என்று முழங்கி சமுதாயத்தைப் பாதுகாக்கும்படி சமயத்திற்கு அறை கூவல் விடுத்தவர் குன்றக்குடி பெரியவர். காஞ்சி நாயகர் நிறைய புத்தகங்கள் படித்தவர். குன்றக்குடி நாயகர் நிறைய மனிதர்களைப் படித்தவர். கோவில்களை இடியாதபடி காப்பாற்ற மனிதர்களை உருவாக்கிய துறவி அவர். மனிதர்களைக் கோவில்களாக உருவாக்கிய மகத்தான துறவி இவர். 

இருவரையும் நான் புரிந்து வைத்த மாதிரி தமிழ்நாடு புரிந்து கொண்டிருந்தால் எவ்வளவோ நன்மைகள் தமிழ்நாட்டுக்கு வாய்த்திருக்கும். இரண்டு பல்கலைகழகங்களிலும் ஒரே நேரத்தில் படித்த அதிலும் பட்டம் பெற்ற மாணவன் நானாக மட்டுமே இருக்க முடியும்.

என் ஆன்மிகம் ரயில் போல... எப்போதுமே இணையாத அந்த இரண்டு தண்டவாளங்களின் மீது என் ஆன்மிக ரயில் கம்பீரமாக எப்போதும் ஓடுகிறது. காஞ்சி மகா பெரியவர் பாதை ஒரு தண்டவாளம்... குன்றக்குடி மகா பெரியவர் பாதை இன்னொரு தண்டவாளம். காஞ்சி மடத்தின் பக்தர்களுக்கும் குன்றக்குடி மடத்தின் தீவிரத் தொண்டர்கட்கும் எப்போதுமே புலப்பட முடியாத புதிய பாதை எனக்கு மட்டுமே வாய்த்தது. அந்த உணர்வில் அந்த இரு மகான்கள் பற்றியும் இரண்டு கட்டுரைகள் வந்துள்ளன.

சமய இலக்கிய அன்பர்கட்கு இந்நூல் ஒரு இனிய விருந்து. இதனை சமைக்கும் பணி எனக்களித்த பல்வேறு பத்திரிகைகள், குறிப்பாக கல்கி இதழ், மற்றும் விருந்தைப் பரிமாறும் புத்தக அரசர் வானதி திருநாவுக்கரசு அவர்கட்கும், வாசிக்கப் போகும் நேசமிக்க வாசக நேயர்களுக்கும் நன்றி... நன்றி...  

அன்பினிய 
சுகி.சிவம்.

பொருளடக்கம்: 
01.மங்கலம் காக்கும் மங்கையர்;  
02.மரபுகளின் ரட்சகர்;  
03.காவி கட்டிய கார்ல்மார்க்ஸ்;  
04.கந்தர் அநுபூதி;  
05.வள்ளிக்கு வாய்த்த வள்ளல்;  
06.தெய்வசிகாமணி;  
07.அபிராமி அந்தாதி - ஒரு விளக்கம்;  
08.பகீரதப் பிரயத்தனம்;  
09.ராதா காதலன்;  
10.ஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி;  
11.பக்தி வியாபாரம் அல்ல;  
12.துன்பத்திலிருந்து விடுதலை!.

ஆசிரியர் குறித்து: சுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி சிவம் சன் தொலைக்காட்சியில் தினமும் இந்த நாள் இனிய நாள் என்ற சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார். இவர், “மோனமாகிறபோது ரமணராகவும் கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது என் இயல்பு”  என தன்னைப் பற்றிப் பிரகடனம் செய்துகொண்டவர்.      

சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்ட இளவர் பட்டமும் பெற்றார்.    

விருதுகள்:-
சுகி. சிவம் தனது சொற்பொழிவிற்காக காஞ்சி சங்கர மடம் வழங்கும் காஞ்சி பரமாச்சார்ய் சுவாமிகள் விருதினைப் பெற்றிருக்கிறார்; 
சொல்வேந்தர் என்னும் விருது; 
கலைமாமணி விருது.                                                                           

சுகி. சிவம், ஆனந்த விகடன் குழுமத்தால் வெளியிடப்படும் சக்தி விகடன் இதழுக்கு ஆறு மாதங்கள் ஆசிரியராக பணியாற்றினார்.                              

இந்து மதக் கருத்துகளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவும் நோக்கில் இந்து தர்மவித்யா பீடம் என்னும் அமைப்பை சுகி. சிவம் உருவாக்கி நடத்தி வருகிறார். அவ்வமைப்பின் வழியாக வாழும் கலை என்னும் பயிற்சியை நடத்தி வருகிறார்.           

சுகி. சிவம் தனது நூல்களை வெளியிடுவதற்காக சுகி புக்ஸ் என்னும் நூல் வெளியீட்டகத்தை உருவாக்கி உள்ளார்.                              

நூல்கள்: சுகி. சிவம் எழுதிய கட்டுரைகளும் ஆற்றிய சொற்பொழிவுகளும் பின்வரும் நூல்களாக வெளிவந்துள்ளன:

அச்சம் தவிர் (திசம்பர் 2006); 
அபிராமி அந்தாதி தெளிவுரை; 
அர்த்தமுள்ள வாழ்வு (திசம்பர் 2005) (சக்தி விகடனில் எழுதிய கட்டுரைகள்); 
ஆதிசங்கரர்; 
ஆனந்தம் பரமானந்தம்; 
ஆன்மீகப் பூங்காவில் அதிசயத் துளசி; 
இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி (சூலை 2006) (சன் தொலைக்காட்சி உரைகள்); 
உணவே உயிரே (திசம்பர் 2004); 
ஊருக்கு நல்லது சொல்வேன்; 
என் கேள்விக்கு என்ன பதில்? - பகுதி 1 (திசம்பர் 2007) (சக்தி விகடனில் வெளிவந்த கேள்வி பதில்); 
ஏமாற்றாதே, ஏமாறாதே…! (ஏப்ரல் 2007) (காலைக்கதிர், சக்தி விகடன் இதழ்களில் எழுதிய கட்டுரைகள்); 
ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (திசம்பர் 2002) (கல்கி இதழில் 1995 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரைகள்); 
ஒளி பரவட்டும்; 
கந்தர் அனுபூதி; 
கம்பன் நேற்று – இன்று - நாளை (ஆகத்து 2001) (அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு); 
கனவு மெய்ப்படும் (ஆகத்து 2002); 
கிரியா பாபாஜி; 
கீதை விளக்கம்; 
கும்பாபிஷேகம்; 
சமயம் ஒரு புதிய பார்வை; 
சிந்தனை முத்துக்கள்; 
சுந்தர காண்டம்; 
சொன்னார்கள் சொன்னார்கள் சொன்னார்கள் - 1; 
சொன்னார்கள் சொன்னார்கள் சொன்னார்கள் - 2; 
ஞானமலர்கள் (நவம்பர் 2001) (கல்கி இதழில் எழுதிய கட்டுரைகள்); 
நல்ல குடும்பம் நமது இலட்சியம் (சூலை 2003) (குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகள்); 
நல்ல வண்ணம் வாழலாம் (நவம்பர் 2001) (கல்கி இதழில் எழுதிய கட்டுரைகள்); 
நினைப்பதும் நடப்பதும் (ஆகத்து 2004); 
படிக்க ஜெயிக்க! (சனவரி 2005); 
பிரார்த்தனை; 
பெண்ணே நீ வாழ்க; 
மனசே நீ ஒரு மந்திரச் சாவி; 
மனிதனும் தெய்வமாகலாம் (திசம்பர் 2002); 
வாழப் பழகுவோம் வாருங்கள் (செப்டம்பர் 2002); 
வாழ்தல் ஒரு கலை; 
வாழ்ந்து பார்க்கலாம் வா; 
வாழ்வியல் சிந்தனைகள்;
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்; 
வெற்றி நிச்சயம்; 
வெற்றி மீது வெற்றி வந்து; 
முதல் இடம்.
More Information
SKU Code VAN B 489
Weight in Kg 0.430000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சுகி.சிவம் - Sugi. Sivam
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:சமயம் ஒரு புதிய பார்வை (ஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி) - சுகி.சிவம் - Samayam Oru Puthiya Paarvai (Aanmiga Poongavil Athisaya Thulasi)

Similar Category Products