Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஷீர்டி பாபா - பி சுவாமிநாதன் Shirdi Baba by P.Swaminathan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Sree B 15
₹110.00

ஆன்மிகம்/ ஆன்மீகக் கதைகள்/ ஷீர்டி பாபா அவதார நூல்.

காகித அட்டை/ பேப்பர்பேக்; 

160 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதல் பதிப்பு: மே 2014.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
'மகா பெரியவா மகிமை' பி சுவாமிநாதன் அவர்கள் எழுதிய ஷீர்டி பாபா.
 
பதிப்புரை:-
ஸ்ரீ மீடியா ஒர்க்சின் 8-வது படைப்பாக இந்த 'ஷீர்டி பாபா' அவதாரம் எடுத்துள்ளது. 
 
இன்றைக்குத் தெய்வ பக்தியை விட மகான்கள் பக்திதான் மேலோங்கி நிற்கிறது. அந்த வகையில் ஸ்ரீ சாய்பாபாவுக்கு ஷீர்டி என்கிற புனித பூமியைத் தவிர உலகெங்கும் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பாபாவின் அருளும் ஆசியும் இன்றைக்கும் பரிபூரணமாக வெளிப்பட்டு வருகிறது. 
 
'நம்பிக்கையுடன் எவர் ஒருவர் என் சந்நிதிக்கு வந்து வணங்குகிறாரோ அந்த பக்தர் எந்தக் காலத்திலும் ஏமாற்றப்பட மாட்டார்'  என்கிற வாசகத்துக்கு இணங்க, பாபாவின் பக்தர்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 
 
போற்றுதலுக்குரிய இந்த 'ஷீர்டி பாபா' நூலை அந்த மகானின் பக்தர்களுக்கு காணிக்கை ஆக்குவதில் பெருமை கொள்கிறேன்.
 
சாய் ராம்.... சாய் ராம்....சாய் ராம்....
- ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்.
 
என்னுரை:
 
''திருவடி தரிசனம்' தொடருக்காக பல மகான்களின் சரிதத்தையும் படிக்க நேர்ந்தது. ஷீர்டி பாபாவும் அப்படித்தான் எனக்குள் புகுந்தார். பாபாவின் அருளாசியுடன் இந்த ஷீர்டி பாபா நூலை 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
 
உலகெங்கும் இருக்கக் கூடிய அன்பர்கள் அனைவராலும் கொண்டாடப்படக் கூடிய மகான்களில் ஷீர்டி பாபாவும் ஒருவர். 'ஹலோ' சொல்வதற்கு பதிலாக 'சாய்ராம்' என்று சொல்பவர்கள் இன்று அதிகம்.
 
பாபா வாழ்ந்த காலத்தில் 'ஷீர்டி' என்பது ஒரு சாதாரண குக்கிராமம். வானம் பார்த்த பூமி. பாபா அப்போதே கிராமவாசிகளிடம் நெகிழ்வுடன் சொல்வார்: 'ஒரு நாள் இது பெரிய ஊர் ஆகப் போகிறது. உலகெங்கும் உள்ளவர்கள் இங்கு வரப் போகிறார்கள். இந்த இடம் அனைவரது கவனிப்புக்கும் உள்ளாகப் போகிறது' என்று. கிராமவாசிகள் அப்போது பாபாவின் மேல் நம்பிக்கை இல்லாமல் கேலியாகப் பார்த்து விட்டுப் போவார்களாம். ஆனால், இன்று பாபாவின் வார்த்தைகள் மெய்யாகி, உலகமே ஷீர்டியை நோக்கிப் படை எடுக்கிறது. அந்த மகானுக்கென்று ஷீர்டியில் அமைந்த கோயில்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வருமானம் வரும் கோயில். 
 
அத்தகைய மகானின் வாழ்க்கை பற்றி - அவரது வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை என் எழுத்து நடையில் தந்திருக்கிறேன். ஷீர்டி பாபாவை பற்றி எத்தனையோ அன்பர்கள் காலம் காலமாக எழுதி வருகிறார்கள். அத்தகைய பக்தர்களின் உழைப்புக்கும் பக்திக்கும் தலை வணங்கி, இந்த நூலை அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன்.
 
அன்புடன்,
பி. சுவாமிநாதன் 
 
பொருளடக்கம்:-
1.கொடுத்து வைத்த ஷீர்டி;   
2.பாபாவும் அவரது குருநாதரும்; 
3.பாபாவின் முதல் தோற்றம்;  
4.பாபாவின் நண்பர்கள்;  
5.ஷீரடிக்கு பாபா திரும்பிய கதை;  
6.மசூதியில் தங்கிய பாபா;  
7.பாபா உருவாக்கிய பூந்தோட்டம்;  
8.பாபாவும் மல்யுத்தமும்;  
9.தண்ணீரில் எரிந்த விளக்குகள்;  
10.கோதுமையும் பாபாவும்;  
11.போலீஸ்காரர், பிரசங்கம் செய்த கதை; 
12.பாபாவும் யோகக் கலையும்;  
13.பாபாவும் ஊஞ்சலும்;  
14.ஷாமாவும் பாம்புக் கடியும்;  
15.எங்கும் நிறைந்திருக்கும் பாபா;  
16.பல்லிகள் பேசும் பாஷை;  
17.பேய் மழையை நிறுத்திய பாபா; 
18.மூலே சாஸ்திரிக்கு காட்சி தந்தார்; 
19.நாய்க்குத் தயிர்சாதம்; 
20.பேதியை நிறுத்திய கடலைப் பருப்பு; 
21.மேகாவின் உண்மையான பக்தி;  
22.ஹரித்வார் பக்தரின் சந்தேகம்;  
23.'இறப்பு குறித்து வருந்துவானேன்?'; 
24.பாபா இந்துவா? முஸ்லிமா?; 
25.பாபாவின் இறுதி காலம்;  
26.பாபாவின் அமுத மொழிகள்;  
27.கடவுளை தரிசிக்க பாபா சொன்ன வழி;  
28.பிரசித்தி பெற்ற ஷீர்டி.
 
ஆசிரியர் : பி. சுவாமிநாதன்
சொந்த ஊர் : திருபுரம்பியம் (கும்பகோணம் அருகில், தமிழ்நாடு); 
படிப்பு : B.Sc. (Maths)) Govt. College for men - கும்பகோணம் M.A. (Journalism) மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; 
அனுபவம் : ஆனந்த விகடன் குழுமம் (22 வருடம்) திரிசக்தி குழுமம் ( 3 வருடம்)
 
ஆன்மீகச் சொற்பொழிவாளராக :
* 'மக்கள் தொலைகாட்சி'யில் 'வாழ்விக்கும் வழிபாடு என்ற தலைப்பில் நம் ஆலயங்களின் புராதனத்தை சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.30 மணி முதல் 7.40 வரை * ' பொதிகை தொலைகாட்சி'யில் 'குரு மஹிமை' என்ற தலைப்பில் பாரத தேசத்து மகான்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.45 மணி முதல் 8.00 வரை) தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார்.
 
பங்கேற்ற தொலைகாட்சி நிகழச்சிகள் :
ஜீ தமிழ் தொலைகாட்சி (தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் காஞ்சி பெரியவாளின் மகிமையை சுமார் ஒன்றரை வருடம் தொடர்ந்து பேசியது). சன் நியுஸ் (விவாதங்கள்) விஜய் (பக்தி திருவிழா) ஜெயா (சிறப்பு விருந்தினர்) தந்தி டிவி ( சொற்பொழிவுகள்) ஸ்ரீ சங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்) மெகா டிவி ....
 
ஆன்மீக எழுத்தாளாராக :
தொடர்கள் வெளியான இதழ்கள் : ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கிய பீடம் உள்ளிட்டவை. மங்கையர் மலர், ஞான ஆலயம், சூரிய கதிர் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார். தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மீக கட்டுரைகளுக்கு புத்தக வடிவம் கொடுத்து வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் ' நிறுவனம் இவற்றை வெளியிட்டு வருகிறது. எழுதிய நூல்கள் : சுமார் 40-க்கும் மேல்.
 
விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் :
* சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புத தொகுப்பு) 
* ஆலயம் தேடுவோம் (புராதமான - சிதிலமான அலயங்களைத் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுமுக்கு நடத்தி வைத்தது) 
* மஹ பெரியவா (2 தொகுதிகள்) 
 
மேலும் சில வெற்றி நூல்கள் : 
திருவடி சரணம் (தொகுதி 1), 
திருவடி சரணம் (தொகுதி 2), 
மகா பெரியவா தொகுதி - 2,
வைணவத்தின் பெருமையும் அடியார்கள் மகிமையும், 
பண்டரிபுரத்து மகான்கள்.
More Information
SKU Code Sree B 15
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பி சுவாமிநாதன் P.Swaminathan
Publisher Name ஸ்ரீ மீடியா வொர்க்ஸ் Sree Media Works
Write Your Own Review
You're reviewing:ஷீர்டி பாபா - பி சுவாமிநாதன் Shirdi Baba by P.Swaminathan

Similar Category Products





Other Books by பி சுவாமிநாதன் P.Swaminathan