Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு - பா.கமலக்கண்ணன் Siddhar Noolgalil Agathiyar, Thiruvalluvar Varalaru - P Kamalakannan - Sidhar Noolkalil Agatiyar, Tiruvalluvar Varalaaru

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 496
₹110.00
ஆன்மிகம்/ வரலாற்று ஆய்வு நூல்.
 
காகித அட்டை / பேப்பர்பேக்; 
140 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதல் பதிப்பு: நவம்பர், 1993; 
நான்காம் பதிப்பு: டிசம்பர், 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு, பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
                                                               முன்னுரை
 
அகத்திய முனிவரின் வரலாற்றைப்பற்றி, பல அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். ரிக்வேத  காலம் முதல் தேவராத்திரட்டு தொகுத்து ஈராகவுள்ள வெவ்வேறு கால கட்டங்களில் ஏழு அல்லது எட்டு முனிவர்கள் 'அகத்தியர்' என்ற பெயரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற கருத்து அறிஞர்களிடையே நிலவுகிறது.
 
அகத்தியரின் பிறப்பைப் பற்றி வேத - புராணங்களில் முன்னுக்குப் பின் முரணான பல கதைகள் கூறப்பட்டுள்ளன.
 
சித்தர் பாடல்களில் தொகுப்பிலுள்ள அகத்தியர் முதலான பல முனிவர்களின் நூல்களை ஆய்வு செய்ததில், மேற்குறித்த அறிஞர்களின் கருத்தும், அவர் பிறப்பைப் பற்றிய பற்பல கதைகளும் ஆதாரமற்றவை என்று நிரூபணமாயின. எவ்வாறெனில், அகத்தியரே தம் சுயசரிதையை சில நூல்களில் கூறியுள்ளார்.
 
அகத்தியரைப் பற்றிய ஆய்வின்போது, அவருடைய சீடரான திருவள்ளுவர் என்பவர் இயற்றிய "ஞானவெட்டியான்' முதலான பல நூல்கள் காணக் கிடைத்ததால் அந்நூல்களின் ஆசிரியரும், திருக்குறள் இயற்றிய திருவள்ளுவரும் ஒருவராய் இருப்பவரோ என்ற வினாவிற்கு விடை காணவேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்னே விந்தை! அவருடைய சுயசரிதையே கிடைத்தது. எனவே, திருவள்ளுவரின் வரலாறு இந்நூலின் இரண்டாம் பாகமாக அமைந்துள்ளது.
 
அகத்தியர், திருவள்ளுவர் இருவரைப் பற்றியும் தமிழ் கூறும் நல்லுலகம் இதுவரை அறிந்திராத பல விளக்கங்களை இக்குறுநூல் வாயிலாக, எளியேன் வெளிக் கொணருமாறு அருள்புரிந்த பொதிகைவாழ் அகத்தீசர் பொற்பாத கமலங்களையும், திருவள்ளுவர் திருவடிகளையும், என்னுடைய மெய்ஞ்ஞான குருநாதர் அருள்திரு பொன். ஆறுமுகம் பிள்ளை அவர்களின் திருவடிகளையும் சிரமேல் தாங்கி வணங்குகிறேன்.
 
இந்த ஆய்வு நூலைக் கண்ணுற்று அன்புடன் அணிந்துரை வழங்கிய புதுவைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் ஆ.ஞானம் F.N.A., F.N.Asc., அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
 
இறையருளால், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சித்தர் நூல்களை ஆராய்ந்து, இதற்கு முன்னர் உருவாக்கிய ஞானவிளக்கம், ஞானக்கனல், குணங்குடியாரின் ஞானவழி ஆகிய நூல்களோடு இந்நூலையும் தமிழ் கூறும் நல்லுலகம் சீர்தூக்கிப் பார்த்துப் பயன்பெறும் என்று நம்புகிறேன்.
 
சித்தர்களின் சீரிய தத்துவங்களை விளக்கும் எளியேனின் நூல்களைத் தமிழகத்தில் உலவச் செய்யும் அண்ணன் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கு உளமார்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகின்றேன்.
          
                  மஞ்சள் மணம்மிகு பொதிகைக் குகையில் 
                  துஞ்சும் அகத்தியர் சுடரடி துணையே!
 
                  இல்லற ஞானி ஈடில் வள்ளுவர் 
                  நல்வழி நாடி நடப்போம் நாமே!
 
                                                         - பா.கமலக்கண்ணன்.    
 
                                                               பதிப்புரை:
ஆசிரியர் திரு. பா.கமலக்கண்ணன் அவர்கள் சித்தர் நூல்கள் பலவற்றை நன்கு ஆராய்ந்து, தெளிந்து, தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறார். இப்பொழுது "சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு" என்னும் சிறந்த நூலைப் படைத்தளித்துள்ளார். இதனை, வானதி பதிப்பகம் பெருமையுடன் தமிழன்பர்களுக்கு வழங்குகிறது.
   
 அகத்தியர் மற்றும் திருவள்ளுவர் ஆகிய சித்தர்களின் முழுமையான வரலாற்றைச் சுருக்கமாகவும் தெளிவாகவும், ஆசிரியர் நமக்கு எடுத்துக் கூறுகிறார். இதற்கு அவர், திருவள்ளுவர் இயற்றிய ஞானவெட்டியான் என்ற நூலைப் பயன்படுத்தியுள்ளார். அன்றைய சித்தர்கள் காலத்து ஞான நிகழ்வுகளை ஆசிரியர் தோண்டித் துருவி நம்முன் வைக்கிறார்.
 
இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் சித்தர்கள் பரம்பரையைச் சார்ந்த அகத்தியர் மற்றும் திருவள்ளுவர் வரலாற்றை அறிந்துகொள்ளுதற்கு மிகவும் பயனுள்ள நூலாக இந்நூல் அமையும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.        
 
இத்தகு பயன்மிக்க நூலை வழங்கிய ஆசிரியர் திரு.பா.கமலக்கண்ணன் அவர்களுக்கு வானதி பதிப்பகத்தின் சார்பாகவும், 'தமிழ்ப் பித்தர்கள்' சார்பாகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
                                                                                                                                       - ஏ.திருநாவுக்கரசு 
                                                                                                                                         வானதி பதிப்பகம்.
                                                                                                                                                                                         
ஆசிரியர் குறித்து: திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது.
More Information
SKU Code VAN B 496
Weight in Kg 0.420000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு - பா.கமலக்கண்ணன் Siddhar Noolgalil Agathiyar, Thiruvalluvar Varalaru - P Kamalakannan - Sidhar Noolkalil Agatiyar, Tiruvalluvar Varalaaru

Similar Category Products





Other Books by பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan