Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சொல்லித் தெரிவதில்லை - வன்மீக. வெங்கடாசலம் - Solli Therivadhillai by Vanmeega Venkataasalam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 96
₹21.00
திருக்குறள் இன்பத்துப்பால் பகுதி கட்டுரைகள்.

காகித அட்டை (Paperback); 
112 பக்கங்கள்;
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);
 முதல் பதிப்பு: டிசம்பர் 2006; 
பாரதி பதிப்பகம். 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
வன்மீக. வெங்கடாசலம் எழுதிய சொல்லித் தெரிவதில்லை புத்தகம்.

புகுமுன்...
ஈரோட்டிலிருந்து ஒரு இலக்கிய ஏடு...
குரலியம் என்ற பெயரோடு...
"ஆடிவரும் தென்றலிலே குளிரா இல்லை 
தோப்பில் நிழலா இல்லை தணப்பரிதாம் 
கொடுமையிது தமிழ் நாட்டின் 
தமிழ்த் தெருவில் தமிழ் தான் இல்லை".
என்ற புரட்சி கவிஞரின் அந்தநாள் 
வேதனையைத் தீர்ப்பதற்காக...
ஆர்ப்பரித்துப் புறப்படுகிறது!
தமிழர்களின் இல்லந்தோறும் புகுந்து 
தமிழனின் வீர உணர்வை...
அவன்தன் தன்மான உணர்வை...
தட்டியெழுப்பி தலைநிமிர்த்தப் போகிறது!
என்ற செய்தி என் செவிப்பறையைத் தட்டியது.
கிளர்ந்தெழுந்தேன்.

என் உள்ளத்து மகிழ்ச்சியை அந்த இலக்கிய ஏட்டின் ஆசிரியர் திரு.வேலா இராசமாணிக்கம் அவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.

விளைவு?

நான் சற்றும் எதிர்பாராதவிதமாக அமைந்தது. அந்த இலக்கிய ஏட்டின் ஆசிரியர் திரு.வேலா அவர்கள், 'படைப்புகளை அனுப்புங்கள்' என்ற அன்புக் கட்டளையை இட்டார்கள்.

'கம்பர் கடன் வாங்கி இருக்கிறார்' எனும் கட்டுரையை உடன் அனுப்பி வைத்தேன். அது அந்தமாதக் குறலியத்திலேயே வெளி வந்தது. தொடர்ந்து படைப்புகளை அனுப்புங்கள் என்பதுதான் அது.

தொடர்ந்து எழுதினேன்.

இப்படி கடந்த ஓராண்டில் 'குறளியம்' இலக்கிய ஏட்டில் வெளியான கட்டுரைத் தொகுத்து இன்னும் சில கட்டுரைகளையும் இணைத்து ஒரு நூலாக நான் வழங்க வேண்டும் என்று நண்பர்கள் 'கனவு சிறைகள்' மு.நடராசனும் திரு.சீ.சிவக்குமார் அவர்களும் விழைந்தார்கள்.

பூம்புகார் பேரவைக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் முழக்கம் இலக்கிய ஏட்டின் பொறுப்பாசிரியருமான திரு.ஆ.செகந்நாதன் அவர்கள் அன்போடு ஒத்துழைத்து அறிவுரை வழங்கினார்கள்.

என்னுடைய இந்த சிறிய நூல் உயிர்பெற்று விட்டது.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் வள்ளுவரின் இன்பத்துப் பால் பகுதியைச் சார்ந்தன.

அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலும் கருத்துகளைத் தன் கூற்றாக கூறி வந்த வள்ளுவர் இன்பத்துப் பாலினை மட்டும் நாடகப் பாங்கில் அமைந்துள்ளார்.

காரணம் - 
காதல் பிறர் சொல்லித் தெரிந்து கொள்ளக் கூடியது அன்று!

கண்ணம்மா பாடலில்...
சிருங்கார ரசம் பற்றிப் பாடவந்த பாரதியார் வள்ளுவரின் உள்ளக்கருத்தைப் புரிந்து கொண்டு 'சொல்லி தெரிவதில்லை மன்மதக் கலை'... எனப் பாடியிருப்பது நினைக்கத்தக்கது, பாரதியின், இந்தத் தொடரே தலைப்பாக அமைவது சிறப்பாக இருக்கும் என்று கூறி, 'சொல்லித் தெரிவதில்லை .." என்ற தலைப்பை எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் தி.வ.காந்திமதி நாதன் அவர்கள் இந்த நூலுக்கு சூட்டினார்கள்.

இதுதான் இந்த நூல் தோன்றிய வரலாறு.

                                                                                             அன்பன்
                                                                                             வன்மீக. வெங்கடாசலம்.

                                                        உள்ளே...
01. தழைக்கும் காதல் 
02. காண்பது எப்போது?
03. ஒருத்தி மட்டும் உறங்கவில்லை
04. நினைத்துக் கொண்டே 
05. தூக்கமில்லை தோழி 
06. மயக்கம் தந்தாள் ஒரு மாது!
07. கம்பர் கடன்வாங்கி இருக்கிறார்!
08. அந்தப் பார்வை...
09. தவழ்ந்து வந்தது...
ஒரு தள, தள மேனி!
10. அவள் மெல்லச் சிரித்தாள்!
11. கலந்தன விழிகள்!
12. ஒவ்வோர் அணுவிலும் இன்பம்!
13. அந்தச் சுவை...
14.மலரே! அனிச்ச மலரே!
15. காதல் நினைவு...
16.அவர் பிரியவில்லை...!
17.அந்த வீணையிலோர் வேதனை கீதம்...
18. அப்போது தெரிவதில்லை!
19.சிதறிய கோட்டை...
20.இப்பொழுது சொல்... 

                                                                           வாழ்த்துரை
                                                                                               கலைஞர் மு.கருணாநிதி

தீந்தமிழ்ப் பெட்டகமாம் திருக்குறள் மக்களிடையில் பரவி, அதன் காரணமான உறுபலன்களும் அனைவரும் மகிழத்தக்க வகையில் அதிகரித்து வருவது நாட்டில் இன்று காணப்படும் நல்ல அறிகுறி!

வள்ளுவன் யாத்த ஒவ்வொரு ஈற்றடியும் அவரவர் பயிற்சிக்கு ஏற்ப ஓராயிரம் கற்பனையைத் தூண்டும் என்பதற்கு நண்பர் வன்மீக. வெங்கடாசலம் அவர்கள் முயற்சி செய்து சிறு நூலாகக் கொணர விரும்பும் 'சொல்லித் தெரிவதில்லை' ஒரு சான்று.

சினிமாப் பாடல்களின் அடிகளையே தலைப்பாகக் கொடுத்து, குறள்பாக்களுக்கு வர்ணனை மெருகேற்றுவதற்கு நண்பர் வன்மீக.வெங்கடாசலம் எடுத்துக் கொண்டுள்ள உழைப்பு பாராட்டத்தக்கது.

'சொல்லித் தெரிவதில்லை' ஆசிரியர் வன்மீக.வெங்கடாசலம் தமது முயற்சியில் மேலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புள்ள,
மு.கருணாநிதி.

ஆசிரியர் குறிப்பு: முனைவர் வன்மீக. வெங்கடாசலம் நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் முன்னாள் வணிகவியல் துறைத்தலைவராகவும்,  பின்னர் துணை முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். தமிழில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், பாரதிதாசன் பல்கலைக்கழக வணிகவியல் பட்டமேற்படிப்புப் பாடத்திட்டக் குழுத் தலைவராகவும் உள்ளார்.
More Information
SKU Code Bharti B 96
Weight in Kg 0.100000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name வன்மீக. வெங்கடாசலம் - Vanmeega Venkataasalam
Publisher Name பாரதி பதிப்பகம் - Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:சொல்லித் தெரிவதில்லை - வன்மீக. வெங்கடாசலம் - Solli Therivadhillai by Vanmeega Venkataasalam

Similar Category Products





Other Books by வன்மீக. வெங்கடாசலம் - Vanmeega Venkataasalam