Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Sri Krishna Anthathi / ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 017
Regular Price ₹45.00 Special Price ₹40.00

Save: 5.00 Discount: 11.11%

ஆன்மீகம்-Spiritual / மதம் - Religious; 
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; 
பக்கங்கள்-Pages : 96

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் 

அபிராமி அந்தாதியைப் படித்தபோது அப்படி ஒரு அந்தாதி எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கெழுந்தது.

முதலில் எங்கள் கிராம தேவதை "மலையரசி   அம்மனை'ப் பற்றி எழுதலாம் என்று கருதினேன். என்ன காரணத்தாலோ அந்த முயற்சி ஒத்திப் போடப்பட்டே வந்தது.

கடைசியாகக் கிருஷ்ணன் பேரில் ஒரு அந்தாதி எழுதலாம் என்றெண்ணியபோது, அன்றே அந்த முயற்சியைத் தொடங்க முடிந்தது.

அதற்குக் கிருஷ்ணனைத் தவிர வேறு காரணம் என்னால் சொல்ல முடியவில்லை.

அந்தாதிக்கு ஒரு இலக்கணம் உண்டு.

கட்டளைக் கலைத்துறையில் நேரசை என்றால் ஒற்று நீக்கிப் பதினாறு எழுத்துக்களும், நிரையசை என்றால் பதினேழு எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்பது மரபு.

அந்த மரபின்படி நான் இதை எழுத வில்லை.

'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல்' என்ற மரபின்படி, இதை ஒரு புதிய வழியாக எழுதினேன்.

எழுத்துக்களை எண்ணிக் கொண்டு கருத்துக்களைச் சிதறடிப்பதைவிட, ஒரு புதிய வழியை உற்பத்தி செய்து கொள்வது தவறல்ல என்பது என் துணிபு.

விகற்பங்கள் மிகுந்த விருத்தத்தில் இராமகாதை எழுதிய கம்பன், எல்லா விகார்பங்களுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டான்.

விருத்தத்தில் உள்ள வசதி கலித்துறையில் இல்லை என்றாலும், அப்படி ஒரு வசதியை உண்டாக்க நான் துணிந்தேன். இத்தகைய வசதிகளுக்குத் தமிழ் இலக்கணம் தாராளமாக இடமளிக்கிறது.

எந்தப் பாடலிலும் ஓசை ஒழுங்கு கெடாமல் இதனை நான் எழுதியிருக்கிறேன்.

முதற் பாடலின் ஆதியை, நூறாவது பாடலின் அந்தமாகவும் ஆக்கியிருக்கிறேன்.

ஸ்ரீ கிருஷ்ணன் மீது எனக்குள்ள பக்திக்கு இது ஒரு நூலே தவிர, இலக்கண விமர்சகரின் ஆராய்ச்சிக்கு இது களமல்ல.

இலக்கணம் என்பதே சந்தம், ஓசை, தாளம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு எழுந்தது தான் என்று நான் கருதுகிறேன்.

தளைகள், சீர்கள் எல்லாம் பலபேர் இலக்கியத் துறைக்குள் வந்து புகுந்துவிடக் கூடாதே என்பற்காகப் போடப்பட்ட வேலிகள் தாம்.

அந்த வேலிகளைத் தாண்டுவோர் தாளமும், ஓசையும் தப்பாமல் எழுதுவர்களானால், தமிழ் இலக்கணம் அதை ஒரு புதிய அத்தியாயமாக ஏற்றுக் கொள்ளும்.

தொல்காப்பியத்தையும் சங்க நூல்களையும் இன்று படிப்பவர்கள், செந்தமிழில் அமைந்த புதுக் கவிதை என்றுதான் அவற்றை நினைப்பார்கள்.

ஆனால் அது முதல் இலக்கண மரபு. அதைத் தொடர்ந்து உண்டான மரபுகளே வெண்பாக்களும், விருத்தப்பாக்களும்.

ஆகவே, காலங்களாலே மாறிவந்த இலக்கணத்தில் நான் ஏற்படுத்திய சிறு மாற்றத்தையே காண்கிறீர்கள்.

எனினும் இதைப் படிக்கும் பாமரர்களும் பாடம் செய்ய முடியும்.

பூஜைக்கும் இது உதவும்.

வாழ்க்கைக்கும் இது வழி காட்டியாக அமையும். 'அந்தாதி' என்று இதற்குப் பெயர் கொடாமல், 'மணிமாலை" என்று அதற்குப் பெயர் கொடுத்திருந்தால், இந்த விளக்கம் தேவையில்லை.

இதனைத் தொடர்ந்து நூறு நூறு பாடல்களாகக் கண்ணனது பல வடிவங்களையும் பாட ஆசை. அடுத்தது, 'பார்த்தசாரதி அந்தாதி' - பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டது.

அன்பன்,
கண்ணதாசன் 
27.06.1976


கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! 

அவர் ‘ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி’ என்று 100 பாடல்களை படைத்திருக்கிறார். 

“நாடுவதில் மிகத்தேவை 
நம்பிக்கை, வைராக்கியம்,
நல்ல பக்தி; 
தேடுவதில் மிகத்தேவை 
திட சித்தம், தேர்ந்த மனம் 
சிறந்த ஞானம்;
பாடுவதில் மிகத்தேவை 
ஊனுருக, உடலுருகப் 
பாடும் பாவம்;
கூடுவதில் மனைவியினும் 
கண்ணனோடு குழைவாகக் 
கூடு வீரே ! ( 77 )
கூடு வெறும் கூடாகிக் 
கொள்ளியிலே வீழ்ந்து விடும்; 
கொண்ட கோலம் 
காடு வரை வாராது;
கனல் தனையும் வெல்லாது;
கரைந்து போகும்!
ஆடுவதும் பாடுவதும் 
அறுபதிலோ இருபதிலோ
அடங்கிப் போகும் !
வாடுவதில் பயனில்லை;
‘சிக்’கென்று மாதவனை 
வளைப்பீர் நீரே !

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 017
Weight in Kg 0.020000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184020274; 8184020279
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Sri Krishna Anthathi / ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம்

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்