Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Subbayavin Vazhvum Vazhithadamum by Kasivillavan சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும் காசிவில்லவன்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 111
₹75.00
வாழ்க்கை வரலாறு புத்தகம்;  
ஆண்டு : 2011;
150 பக்கங்கள்; 
பாரதி பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
மக்கள் தலைவர் வ.சுப்பையா நூற்றாண்டு (1911-2011) சிறப்பு வெளியீடு.

நூலின் சிறப்பு அம்சங்கள்: 
- வ.சுப்பையாவின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியோடும், ஆவணச் சான்றுகளோடும் படம் பிடித்துக் காட்டும் ஆவணப் பெட்டகம்.

- திட்டமிட்ட இருட்டடிப்புச் சதிகளை முறியடித்து உண்மைச் சம்பவங்களை மக்கள் மன்றத்தின் முன் கொண்டுவரும் அரிய வரலாற்றுப் பேழை!

- ஒரு ஆத்திகன், நாத்திகராகிய சுப்பையாவிடம் கற்ற அரசியல் பாடம், பெற்ற ஆன்மிக விளக்கத்தின் பட்டறிவுப் பதிவு.

- வ.சுப்பையா தலைமறைவு காலத்தில் தன் கைப்பட எழுதிய ரகசிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள், இறுதி உயிலின் உள்ள டக்கச் செய்திகள், அதன் பின்புல நிகழ்வுகளை வெளிச்சமிடும் வெளிச்சப் புள்ளிகளின் விவரத் தொகுப்பு.

உள்ளிருப்பவை:
1.சுப்பையாவை அறிமுகம் செய்த முதல் கதாசிரியர்; 
2.வ.சுப்பையா - முதல் சந்திப்பு;  
3.நெருக்கம் ஏற்படுத்திய  சம்பவங்கள், சந்திப்புகள்; 
4.'ஃபிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு' - நூல் உருவான விதம்; 
5.கணக்கை நேர் செய்த கண்ணியவான்; 
6.சுப்பையாவிடம் கண்டு வியந்த அரிய திறன்கள் - பெரிய  குணங்கள்; 
7.சுப்பையா புகட்டிய பாடம்; 
8.சுப்பையா வரைந்த இரண்டாவது சாசனம்.


நூல் முகம் :-
அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு அகங்கனிந்த வணக்கம். "வ.சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும்' என்ற இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பெட்டகம். மக்கள் தலைவர் சுப்பையா அவர்களோடு பல ஆண்டுகாலம் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் அந்த வரலாற்றுப் பெட்டகத்தை திறக்கும் முயற்சியில் ஒரு சிறு பங்கைத்தான் இந்த நூல் வழியே செய்திருக்கிறேன்.

வாழ்ந்த தலைமுறை, வாழும் தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச் செல்லவும், சொல்லவும் வேண்டும். அதை வ.சு.செய்தார். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குண்டு என்பதாலே இந்நூல் வெளிவரலாயிற்று. இதில் அன்றாட வாழ்வில் நான் சுப்பையாவைக் கண்டவிதமாகக் காட்ட முயன்றிருக்கிறேன்.

வ.சுப்பையா வெறும் வாய்ப்பேச்சு வீரர் அல்லர்; வாழ்ந்து காட்டிய வாய்மையாளர். சந்தர்ப்பவாதியல்ல; சத்தான அரசியலுக்கு வித்தாகத் திகழ்ந்தவர். அவரிடம் தலைமறைவு வாழ்க்கை இருந்ததே தவிர, திரைமறைவு வாழ்க்கை இருந்ததில்லை. அவர் தன இதயக் கதவைப் போலவே இல்லாகி கதவையும் எல்லோருக்காகவும் திறந்து வைத்தவர். அவரிடம் காரிய சித்தி இருந்தது. மாற்றாரையும் மனங்கோள்ளச் செய்யும் மகத்துவம் இருந்தது. எதிரியை எதிர்கொண்ட விதத்திலும் அவரிடமிருந்த அரசியல் நாகரிகம், பெருந்தன்மை, அசாத்திய துணிச்சல் வெளிப்பட்டது. அதனால் சுப்பையாவின் வீடு மட்டுமல்ல, சுப்பையாவே இன்று மக்கள் சொத்தாகி மாநிலம் முழுவதும் கொண்டாடும் வகையில் அவரது வாழ்க்கை உயர்ந்து மிளிர்கிறது.

என்றும் வேண்டும் இன்ப அன்பன்,
காசிவில்லவன் 
புதுச்சேரி - 9
07.02.2011

‘வி.எஸ்.’ என்றும் ‘மக்கள் தலைவர்’ என்றும் மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்ட வ.சுப்பையா, பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மகத்தான மக்கள் போரை நிகழ்த்தி, சுதந்திரத்தின் விதையை நட்டு, அதை விருட்சமாக்கிய மாபெரும் புதுச்சேரித் தலைவர். புதுச்சேரி சுதந்திரப் போரை முன்நின்று நிகழ்த்தியவர். புதுச்சேரி விடுதலைக்கும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் சுப்பையா. வ .சுப்பையா பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார் .இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர் ஆவர். ஆரம்பகால அரசியல் வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார். இவர் "சுதந்திரம்" என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன்னோடி ஆவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு ஏற்று இந்திய விடுதலைக்கு பாடுபட்டதிற்காக தாமரை பட்டயம் பெற்ற 97 சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். 

1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார். 1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். 

இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் வ.சுப்பையா அவர்களே. பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு என்கிற தலைப்பில் அவரே நூல் ஒன்றை எழுதியுள்ளார். 1993 அக்டோபர் 12ந்தேதி மறைந்தார். அவருக்கு புதுவையில் ஆளுயுற சிலை வைக்கப்பட்டது, அவரது இல்லம் காட்சியகமாக அரசு மாற்றியது. கவிஞர் பாரதிதாசன் 'புதுச்சேரியின் வரலாறு என்பது 'வி.எஸ்” என்கிற இரண்டு எழுத்தின் வரலாறு...” என்று பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார்.  கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழிலும் தெலுங்கிலுமாக அவரைப் பற்றி எழுதிய கவிதை இது:

'கப்சுப் என்னக் கலதிகள் அடங்க
மெய்ப்பொருள் விரிக்கும் வீரச் செம்மல்
மக்கள் மதிக்கும் மாண்புறு தலைவன்
பக்குவ மன்றிலே பழுத்த சொல்லான்
சோர்வு படாத சொல்-எழுத் துரையான்
நேர்மை யுடைய நேயன்...

புதுவை அரசியல் புலி எனத் தக்கோன்
பொதுநல மேதன் பொழுதுபோக் கானோன்...

நாயுடு காரு நடதலோ மஞ்சி
சேயுடு வாரு சிரஞ் ஜீவிகா
ஜனுலந்த பொகட தனகன பாக்யமு
சனுவுகா கலிகி சக்ககா பெருக
ஆசீர் வதிஞ்சேனு அந்தரங்க முலோ...

பேச்சும் நடையும் வீச்சும் வீறும்
ஓச்சும் கையும் உறுதியும் உள்ளமும்
சோவியத் ரஷ்ஷியச் சுடர்பொது வுடைமை
மேவிய வீறுகொள் வீரனை விளக்கும்
மார்க்சும் லெனினும் மாண்புறு ட்ராஸ்கியும்
ஆக்கிய பொதுநல பாக்கிய உருவே
புதுவைத் 'தமிழ்நாயுடுஃ வின் பெரும் புகழாம்..”  

புதுச்சேரிக்கு முதன்முதலில் காந்தியை அழைத்துவந்தவர். 'நாட்டின் புரட்சி இயக்கத் தலைவர்களோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பும், நான் படித்த அரசியல் நூல்களும், என்னுள் மார்க்சிய அரசியல் சித்தாத்தங்களை வடிவமைப்பதில் பெரிதும் துணைபுரிந்தன. இந்தக் காலகட்டம் என் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். காந்தியக் கோட்பாட்டிலிருந்து மார்க்சிய- லெனினியக் கோட்பாடுகளுக்கும், அரசியல் சித்தாந்தங்களுக்கும் திசை திருப்பிய திருப்பு முனையாகும்.

இந்த நாட்டில் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் பல லட்சக்கணக்கான பாட்டாளி மக்கள் கடைத்தேற வேண்டுமென்றால் சுரண்டலையும், சமூகக் கொடுமைகளையும் எதிர்த்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே அது கைகூடும் என்னும் ஆழ்ந்த உறுதியை என் மனதில் ஏற்படுத்தியது...” என்று மார்க்சிய சித்தாந்தத்தில் தம்மை இணைத்துக் கொண்டது பற்றி 'பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு’ எனும் தம் நூலில் அவரே குறிப்பிடுகிறார்.

ஆசிரியரை பற்றி :
திரு. காசிவில்லவன் ஒரு எழுத்தாளர் மற்றும் ஆன்மீக நெறியாளர். எம்.ஏ (தமிழ்), எம்.ஏ (ஆங்கிலம்), பி.எட்., மேனாள் முதுநிலை கருத்து வளமையர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்.

மக்கள் தலைவர் வ.சுப்பையா எழுதிய பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.
More Information
SKU Code Bharti B 111
Weight in Kg 0.100000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Kasivillavan காசி. வில்லவன்
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Subbayavin Vazhvum Vazhithadamum by Kasivillavan சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும் காசிவில்லவன்

Similar Category Products

Other Books by Kasivillavan காசி. வில்லவன்