Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Sundarar Varalaru - History of Sundarar - Thirumuruga Kirubanandha Variyar Swamigal - சுந்தரர் வரலாறு -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri B 003
₹35.00
ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு புத்தகம். 

அட்டை: சாதா / பேப்பர்பேக்; 
பக்கங்கள்: 96 பக்கம்; 
பதிப்பு: ஆறாம் பதிப்பு 2019 ஆண்டு; 
எழுத்து : 10.5 புள்ளி 
தாள்: டி.என்.பி.எல். வெள்ளைத்தாள்; 
மொழி: தமிழ்; 
உரிமை: பதிப்பகத்தாருக்கு;
வெளியீடு: குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின்  சுந்தரர் வரலாறு புத்தகம்.   

என்னுரை: 
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு இரண்டு அத்தியா வசிய துணைகள் தேவை. ஒன்று அறிவாளியின் துணை; மற்றொன்று செல்வந்தனின் சேர்க்கை.

இவர்களை அடையாளங் காண்பது எப்படி? பணக்காரனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். படித்தவனை? காத்திருந்துதான் கண்டு கொள்ள வேண்டும்.

சிவபெருமானே இப்படிச் செய்தார் என்று சிவப்பிரகாசர் கூறுகின்றார்.

செல்வத்துக்குக் குபேரனோடு சிநேகங் கொண்ட பெருமான், "உறழ்ந்த கேள்வி உடையவனும் ஒருவன் வேண்டும் என இருந்து" பார்த்தாராம். பிறகு தோதான துணையென்று சுந்தரரைத் தோழமை கொண்டாராம். சுந்தரர் எத்தகையவர்? "துறந்த முனிவர் தொழும் பரவை துணைவனாம்" இப்படி இறுதுணைகளைத் தேடிப்பிடித்த தேவன் எத்தன்மையர்? "சிறந்த அறிவு வடிவமையாத் திகழும் நுதற்கண் பெருமான்."

இப்படிச் சிவபெருமானால் சிலாகிக்கப்பட்ட சுந்தரர் பெருமை ஆராலும் அளக்கவொண்ணாதது.

பேரூரும் பறவைமனப் பினக்கறஎம் பெருமானை 
ஊரூரும் பலபுகள ஓரிரவில் தூதனெனத் 
தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய் 
ஆரூர, நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.

என்று வள்ளற்பெருமான் பாடுவார்.

அத்தகு பெருமைமிகு சுந்தரர் வரலாற்றைச் சேக்கிழார் வாக்கும் சுந்தரர் வாக்கும் சேர்ந்துவர தெள்ளிய நடையில் தெளித்துள்ளார் வாரியார் சுவாமிகள்.

ஏற்கனவே, சென்னை ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தின் வழியாக 'சுந்தரர்' என்னும் தலைப்பில் ஆடியோ கேசட்டாவாகவும் அளித்திருக்கின்றார்.

அரை நூற்றாண்டாக அஞ்ஞாதவாசம் செய்திருந்த இந்த நூலினை உலாவரச் செய்திட்ட தருமபுரி புலவர் க.தியாகசீலன் அவர்களின் சலியா உழைப்புக்கு ஒரு சபாஷ் போடுவார் நம் வாரியார் சுவாமிகள்.

விழியை ஈர்க்கும் விதத்தில் அச்சிட்ட ஸ்ரீவாரி கார்ட்ஸ் நிறுவனத்துக்கு என் நன்றி. 

இந்நூலை நான் படிக்கும்போது என்னை நானறியேன், நாவொன்றோ, ஊன்படிக்கும் உயிர் படிக்கும் உளம்படிக்கும் உயிர்க்குயிருந் தான்படிக்கும் அனுபவங் கண்டேன். 

அந்த அனுபவத்தை நீங்களும் பெற அழைக்கிறேன்.

 

                                                                    -  தீபா மயிலப்பன்

                                                                       குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.

 
புத்தகத்திலிருந்து:  

கேரள நாடாளும் சேரமான்பெருமாள் தோழரைத் தமது நாட்டுக்கு எழுந்தருளுமாறு பலகாலும் பணிந்து வேண்டினார். ஆரூரரும் இசைந்தார். பரவையார்பால் விடைபெற்று, தியாகேசனைத் தொழுது திருவாரூரை விடுத்து மேற்பால் செல்வார். காவிரியின் தென்கரையிலே சென்று திருக்கண்டியூரை யடைந்தார். ஆங்குரையும் அண்ணலைத் தொழுது, வடகரையில் விளங்கும் திருவையாற்றினைக் கண்டார். உடலும் உள்ளமும் உருகிக் கைகூப்பித் தொழுதார். கடல் போன்ற வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காவிரியைக் கடக்கமாட்டாராய் வருந்தினார். மிகப் பெரிய வெள்ளம்; இருகரையும் உடைத்துக் கொண்டு யானைகளைப் போல் எழுந்து வீசும் அலைகளுடன் செல்லுங் காவிரியில் ஓடமும் நாவாயும் செல்லுதற் கரியவாயின. அப்போது நம்பியாரூரர் திருவையாறடிகளை நோக்கி, "என்னாண்டவனே! இந்த வெள்ளத்தில் எதிர்த்து நீந்தமாட்டேன். அடியேன் என் செய்வேன்? இப் பெரிய வெள்ளத்தைக் கடந்து உன்னை எவ்வாறு காண்பேன்?" என்று அன்புடன் வேண்டித் தீந்தமிழ்த் பதிகம் ஓதினார்.  காவிரி வெள்ளம் வழிவிட்டது.

ஆசிரியர் குறித்து: திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
More Information
SKU Code Guhashri B 003
Weight in Kg 0.250000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name Thirumuruga Kirubanandha Variyar Swamigal - இசைப் பேரறிஞர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Publisher Name Guhashri Vaariyaar Pathippagam - குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Sundarar Varalaru - History of Sundarar - Thirumuruga Kirubanandha Variyar Swamigal - சுந்தரர் வரலாறு -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

Similar Category Products