Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

THE 45 SECOND PRESENTATION - Tamil - உன் வாழ்க்கையை அடியோடு மாற்றவல்ல 45 நொடி பிரசன்டேஷன்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4321
₹199.00
சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183223109; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183223102

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் கையேடு.

1981-ம் ஆண்டு தங்களுடைய சொந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைப் பெருக்குவதற்காக டானும் நான்சியும் பயன்படுத்திய ஒன்று இப்போது சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் பல புரிந்துள்ள ஒன்றாக விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த 30வது சிறப்புப் பதிப்பில் இரண்டு புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புத்தகம் உங்களுடைய வாழ்க்கையில் அசாதாரணமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.

உங்களுடைய இன்றைய தினம் எப்படி இருந்தது ?

காலையில் அரக்கப் பறக்க எழுந்தீர்களா ?

குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுவிட நேரமாகிவிட்டது என்று முனகிக் கொண்டிருந்தீர்களா ?

வேறு ஒருவருக்காக வேலை செய்ய சுறுசுறுப்பாகக் கிளம்பினீர்களா ?

இன்றும் குடும்பத்தினரோடு நேரத்தைச் செலவிட முடியாது என்று புலம்பிக் கொண்டிருந்தீர்களா ?

வருங்காலம் குறித்த பயத்தோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தீர்களா ?

இந்த வருடமும் உல்லாசப் பயணம் செல்வது சாத்தியமில்லை என்று உங்களை நீங்களே நொந்து கொண்டிருந்தீர்களா?

நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் வெற்றிப் பெற்றப் பிறகு உங்கள் வாழ்க்கை இப்படியிருக்கும்:-

எப்போது விடியப்போகிறது என்று நீங்கள் ஆவலாகக் காத்திருப்பீர்கள்
உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்புக் கணிசமாக அதிகரித்திருக்கும் 
நீங்கள் உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்தும் பெருமிதத்தால் நிமிர்ந்து நிற்பீர்கள்
உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து செலவிட உங்களுக்கு அபரிமிதமாக நேரமிருக்கும்
ஆடம்பரமான உல்லாசப் பயணம் செல்லக் கூட நேரமும் இருக்கும், பணமும் இருக்கும்
மொத்தத்தில் வருங்காலம் உங்கள் கைகளில் இருக்கும் 

மேற்கூறப்பட்டுள்ளவற்றையும் அவற்றுக்கு மேலாகவும் உங்களுடைய நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் மூலமாக நீங்கள் அடைய இப்புத்தகம் உங்களுக்குப் பெருமளவு உதவும்.

ஆசிரியர்: டான் ஃபைலா. டானின் இப்புத்தகம் 20 மொழிகளில் 60 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. உங்கள் வாழ்க்கையை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வது எப்படி என்பது குறித்த கருத்தரங்குகளை அவர் நடத்தி வருகிறார். பல ஆடியோ சிடிக்களையும் அவர் தயாரித்துள்ளார். 

டான் ஃபைலா ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார், அவர் பல்-நிலை சந்தைப்படுத்தல் (Multi Level Marketing ) துறையில் தனது பணிக்காக நன்கு அறியப்பட்டவர். டான் ஃபைலா 1960 களில் இருந்து MLM இல் பணி புரிகிறார். 2011 வரை, உலகம் முழுவதும் 23 மொழிகளில், இவரின் புத்தகங்கள் 4.5 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. 

அவரின் புத்தகங்கள் : 
10 Lessons on Napkins (1968)
The 45 Second Presentation that Will Change Your Life (1984)
The Basics How to Build a Large Successful Multi-Level Marketing Organization (1996)
The System: The 3 Steps to Building a Large, Successful Network Marketing Organization (2006)
The System: And Other Tools for Rapid Success in Network Marketing (2009)
More Information
SKU Code PRK B 4321
Weight in Kg 0.250000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183223102
Author Name DON FAILLA - டான் ஃபேலா
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:THE 45 SECOND PRESENTATION - Tamil - உன் வாழ்க்கையை அடியோடு மாற்றவல்ல 45 நொடி பிரசன்டேஷன்

Similar Category Products