Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி - THE ART OF HAPPINESS - Tamil - Vazhkayil Magizchiyaga Iruppathu eppadi?

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4462
₹295.00
பிணைப்பு: சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ ISBN-10: 8183226175
ISBN-13: 978-8183226172

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
"மகிழ்ச்சி எல்லோருக்கும் சாத்தியம்தான். மற்ற எந்தவொரு திறமையையும் வளர்த்தெடுப்பதைப்போலவே, முயற்சி மற்றும் பயிற்சியின் வாயிலாக மகிழ்ச்சியையும் நேரடியாக நம்மால் வளர்த்தெடுக்க முடியும்." என்ற தலாய் லாமாவின் அடிப்படைச் செய்து உலக அளவில் மக்களைக் கவர்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. நம்முடைய மனப்போக்குகளையும் கண்ணோட்டத்தையும் மருவடிவமைப்பு செய்வதன் மூலமாக மகிழ்ச்சியை எவ்வாறு வளர்த்தெடுக்கலாம் என்பதை விளக்கும்போது, தலாய் லாமா, மகிழ்ச்சிக்கான திறவுகோல் நம் கையில்தான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறார். மகிழ்ச்சியை அடைவதற்கு நாம் இனி அதிர்ஷ்டத்தைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. நம் எடை குறையும்வரையோ, நாம் பணக்காரராக ஆகும்வரையோ, நமக்குத் திருமணமாகும்வரையோ, நாம் எதிர்பார்க்கின்ற பதவி உயர்வு நமக்கு கிடைக்கும்வரையோ, அல்லது நம் வாழ்வின் அனைத்து அம்சங்களும் சரியாக இயங்கும்வரையோ நாம் காத்திருக்க வேண்டியதில்லை.

தலாய் லாமாவின் அடிப்படைச் செய்தி, மொழி, இனம், நிறம் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, உலகம் நெடுகிலுமுள்ள, வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடுகின்ற, சிறந்தவற்றுக்காக ஏங்குகின்ற மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. இப்புத்தகம் இதுவரை சுமார் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகம் நெடுகிலுமுள்ள கோடிக்கணக்கான வாசகர்கள் இதை படித்துள்ளனர்.

என்னுடைய நீண்ட கால நண்பரும் அமெரிக்க மனநல மருத்துவருமான ஹோவர்ட் கட்லருடன் சேர்ந்து நான் எழுதிய இந்நூலின் பதிப்பாளர் இந்நூலின் பத்தாவது ஆண்டுகாலப் பதிப்பை வெளிக்கொணரவிருக்கிறார். என்பதைக் கேள்விப்பட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்நூல் எனக்கும் ஹோவர்டுக்கும் இடையே நிகழ்ந்த பல மணிநேர உரையாடல்களின் விளைவு. மன ஆரோக்கியம், மனித நலன் ஆகியவை குறித்த விவகாரங்கள் பற்றி ஹோவர்ட் தற்கால அறிவியல்ரீதியான கண்ணோட்டத்தை வழங்கியுள்ளார். இவ்விவகாரங்கள் குறித்து புத்தமதத்தினர் கொண்டுள்ள புரிதலை நான் எடுத்துரைத்துள்ளேன். எனவே இப்புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தபோது, எங்களுடைய கடின உழைப்பு அடுத்தவர்களுடைய நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் சிறிதளவு பங்காற்றியிருந்ததைக் கண்டு நான் பெரும் மனநிறைவு கொண்டேன். ஹோவர்டும் நானும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தாலும், எங்களுடைய கலந்துரையாடலை அடிப்படை மனித நிலைக்குக் கொண்டு வருவதையே நாங்கள் இருவரும் விரும்பினோம். - ஆசிரியர் 

ஆசிரியர்கள்: தலாய் லாமா என்பது திபெத்திய புத்த மதத்தின் தலைமை பொறுப்பினைக் குறிப்பிடும் பெயராகும். 1935 ஆம் ஆண்டு பிறந்த டென்சின் கியாட்சோ என்பவரே பதினான்காவது தலாய் லாமா ஆவார். இவரே திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் மற்றும் உலகளவில் முக்கிய தலைவராகவும் கருதப்படுகிறார். தியானம் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் அறிவியலிலும் ஆர்வம் உடையவர். ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள இவர், 150க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் இந்தியாவின் தர்மசாலாவில் வாழ்ந்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ~
ஹோவர்ட் சி. கட்லர் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் மனநல மருத்துவர் ஆவார். அவர் மனித மகிழ்ச்சியினை அறிவியல் பூர்வமாக அறிவதில் நிபுணர் ஆவார்.            ஹோவர்ட் சி கட்லர் என்பவர் தலாய்லாமாவுடன் மேற்கொண்ட பற்பல உரையாடல்களின் வழியாக அறிந்த கருத்துகளை தொகுத்து, தலாய்லாமாவின் ஒப்புதலை பெற்று ஒரு நூலாக்கி தந்தார். தமிழில் அந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
                 
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4462
Weight in Kg 0.250000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183226172
Author Name His Holiness THE DALAI LAMA & Dr.HOWARD C. CUTLER. தவத்திரு தலாய் லாமா, டாக்டர் ஹோவர்டு சி கட்லர். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name Manjul Publishing House Pvt. Ltd. @ மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி - THE ART OF HAPPINESS - Tamil - Vazhkayil Magizchiyaga Iruppathu eppadi?

Similar Category Products





Other Books by His Holiness THE DALAI LAMA & Dr.HOWARD C. CUTLER. தவத்திரு தலாய் லாமா, டாக்டர் ஹோவர்டு சி கட்லர். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்