டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள "The Magic of Thinking Big" என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு. பிரம்மாண்டமாக சிந்திப்பதற்குரிய அளப்பரிய சக்தியைப் பயன்படுத்தி நீங்கள் பெரிதும் விரும்புகின்ற வெற்றியையும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெறுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய பல நடைமுறை யோசனைகளையும் உத்திகளையும் கொள்கைகளையும் இந்நூலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் நீங்கள் காண்பீர்கள். ஒவ்வோர் உத்தியும் ஓர் உண்மையான நபரின் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, ஒவ்வொரு கொள்கையையும் உண்மையான சூழ்நிலைக்கும் பிரச்சினைக்கும் எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் கண்டறிவீர்கள்.
பின்வருவனவற்றை எப்படிச் சாதிக்கலாம் என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்று கொடுக்கும் -
- நம்பிக்கையின் சக்தியைக் கொண்டு உங்களை வெற்றிக்கு தயார்படுத்துதல்
-உங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புவதன் மூலம் வெற்றியைக் கைவசப்படுத்துதல்.
-நம்பிக்கையின்மையையும் அதன் விளைவாக ஏற்படுகின்ற எதிர்மறை சக்தியையும் விரட்டியடித்தல்.
-பிரம்மாண்டமாக சிந்திப்பதன் மூலம் பிரம்மாண்டமான விளைவுகளைப் பெறுதல்.
-உங்கள் மனத்தை நேர்மறையான எண்ணங்களை உற்பத்தி செய்ய வைத்தல்.
-நம்பிக்கை என்னும் சக்தியை உங்களிடம் வளர்த்துக் கொள்ளுதல்.
-வெற்றியை உருவாக்கித் தரக்கூடிய ஓர் உறுதியான திட்டத்தைத் திட்டமிடுதல்.
-தோல்விக்கு வித்திடுகின்ற 'சாக்குபோக்கு' எனும் நோய்க்கு எதிராக உங்களைத் தற்காத்து கொள்ளுதல்.
-ஆரோக்கியம் குறித்த உங்களுடைய மனப்போக்கில் அடங்கியுள்ள ரகசியத்தைக் கற்றுக் கொள்ளுதல்.
மேலும் பற்பல.
ஆசிரியர் : டாக்டர் டேவிட் ஜே. ஸ்க்வார்ட்ஸ் அட்லாண்டா ஜோர்ஜியா மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். மேலும் தலைமை குணம் வளர்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசனை நிறுவனமான 'Creative Educational Services, Inc.'-ன் தலைவரும் ஆவார்.
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.