Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4422
Regular Price ₹250.00 Special Price ₹225.00

Save: 25.00 Discount: 10.00%

பிணைப்பு: சாதா அட்டை; 
பக்கங்கள்: 280; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ ISBN-10: 8183223680
ISBN-13: 978-8183223683

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்கள் மற்றும் சோதனைகளுக்கும் திருப்பதி வெங்கடாசலபதியைத் சுற்றியிருக்கும் தத்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்பு முதன்முறையாக இந்நூலில் எடுத்துரைக்கப்படுகிறது. எது பாவம், எது புண்ணியம் என்பதிலிருந்து துவக்கி வெற்றி, செல்வம் ஆகியவற்றை அடைவதற்கான வழிமுறைகள் வரை இப்புத்தகம் அநேக விஷயங்களை அலசி ஆராய்கிறது. உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவில்களின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை இது விவரிக்கிறது.     பூமியில் சில காலம் வாழ்வதென்று முடிவு செய்த வராகப் பெருமாள், தனது பட்சி வாகனமான கருடனை அழைத்து, சொர்க்கத்திலிருந்து தனது வசிப்பிடமான வைகுண்டத்தில் இருந்து தனக்குப் பிரியமான கிரீடாச்சல மலையை எடுத்து வந்து, தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த ஓர் இடத்தில் அதை வைக்குமாறு கட்டளையிட்டார். 

இந்த இடம்தான் திருப்பதி எனப்படுகிறது. திருப்பதி கோவிலில் நடத்தப்படுகின்ற பல்வேறு சடங்குகள் மற்றும் திருவிழாக்களைப் பட்டியலிடுவதோடு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு வசதிகளையும் பட்டியலிடுகிறது. 

  - திருப்பதியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்
  - பகவானின் ஊர்வலங்களில் உபயோகிக்கப்படும் பல்லக்குகள்
  - காலையில் சுவாமியைக் கண்விழிக்கச் செய்வதற்கு உச்சரிக்கப்படும் சுலோகங்கள்
  - கோவிலில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நியதிகள்

தங்கள் விதியை மாற்ற முடியும் என்று நம்புகின்றவர்களுக்கும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்குமான அற்புதமான கையேடு இப்புத்தகம்.

கோவில் வளாகம் மற்றும் அதன் பிற அம்சங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரிப்பும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கதைகளோடும் உண்மையான தகவல்களோடும் எளிமையாக உள்ள இந்த புத்தகம், அறிஞர்கள், பக்தர்கள் மற்றும் சாதாரண மக்களின் மனங்களைக் கவரும் வகையில் நூலாசிரியர் கோட்டா, நீலிமை ஆங்கிலத்தில் படைத்துள்ளதை தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம்.

ஆசிரியர் :    : கோட்டா நீலிமா இந்திய பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஆவார். அவர் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அரசியலமைப்பு, ஜனநாயக சீர்திருத்தங்கள், இந்தியாவில் கிராமப்புற ஏழைகளைப் பற்றிய பிரச்சினைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதுகிறார். தற்போது அவர் தில்லி சண்டே கார்டியனுடன் அரசியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.                    

மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4422
Weight in Kg 0.250000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183223683
Author Name KOTA NEELIMA. Translator NAGALAKSHMI SHANMUGAM. கோட்டா நீலிமா. அணிந்துரை : திருப்பதி தேவஸ்தானப் பிரதான அர்ச்சகர் டாக்டர் ஏ.வி.ரமண தீக்க்ஷிதுலு. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name Manjul Publishing House Pvt. Ltd. @ மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:திருப்பதி - ஒரு வாழ்க்கைக் கையேடு - Thiruppathi Oru Vazhkai Kaiyedu - TIRUPATI - Tamil

Similar Category Products





Other Books by KOTA NEELIMA. Translator NAGALAKSHMI SHANMUGAM. கோட்டா நீலிமா. அணிந்துரை : திருப்பதி தேவஸ்தானப் பிரதான அர்ச்சகர் டாக்டர் ஏ.வி.ரமண தீக்க்ஷிதுலு. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்