Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திருப்புகழ் (குன்றுதோறாடல் இரண்டாம் பகுதி, பழமுதிர்சோலை) - திருமுருக கிருபானந்த வாரியார் - Thirupughal (Kunruthoraadal Part 2, Pazhamuthircholai)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 325
₹215.00
ஆன்மீகம் நூல்.  

கடின அட்டை; 
432 பக்கங்கள்; 
மொழி: தமிழ்;  
ஏழாம் பதிப்பு: பிப்ரவரி 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் திருப்புகழ் (குன்றுதோறாடல் - 2ம் பகுதி (ஐந்தாம் படைவீடு), பழமுதிர்ச்சோலை, ஆறு திருப்பதி (ஆறாம் படைவீடு)), திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

முன்னுரை: 
முருகப்பெருமானுடைய திருவருள் முழுவதும் பெற்ற முனீந்திரர் அருணகிரிநாத சுவாமிகள். இந்த ஞானாசாரியர் உலகம் உய்யப் பாடிய அற்புத ஞானத் தமிழ் திருப்புகழ்.

இந்த ஐந்தாம்படைவீட்டுத் திருப்புகழின் பிற் பகுதியும் 6-ஆம் படைவீட்டுத் திருப் புகழும் உரையுடன் இப்போது வெளிவருகின்றது.

பலகாலமாக உயர்ந்த தமிழ் நூல்களை அச்சிட்டு, செந்தமிழுக்குத் தொண்டு செய்யும் சென்னை வானதி பதிப்பகம் உயர்திரு ஏ.திருநாவுக்கரசு அவர்கள் இந்த ஐந்தாம்படை வீட்டின் பிற்பகுதியையும் 6-ஆம் படைவீட்டுத் திருப்புகழ் உரையையும் அச்சிட்டு அன்பர்கட்கு வழங்குகின்றார்.

இது மிகச் சிறந்த நற்பணியாகும். இதனை அன்பர்கள் ஓதி உய்வு பெறுக.

அன்பர்,
கிருபானந்தவாரி.
                                                                                        
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
More Information
SKU Code VAN B 325
Weight in Kg 0.560000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:திருப்புகழ் (குன்றுதோறாடல் இரண்டாம் பகுதி, பழமுதிர்சோலை) - திருமுருக கிருபானந்த வாரியார் - Thirupughal (Kunruthoraadal Part 2, Pazhamuthircholai)

Similar Category Products