Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திருப்புகழ் விரிவுரை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்) - திருமுருக கிருபானந்த வாரியார் - Thirupughal Virivurai (Thiruparankundram,Thiruchendur)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 322
Regular Price ₹450.00 Special Price ₹425.00

Save: 25.00 Discount: 5.56%

ஆன்மீகம் நூல்.  

கடின அட்டை;  
696 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
பதினொன்றாம் பதிப்பு: செப்டம்பர், 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் திருப்புகழ் விரிவுரை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் - (முதற்படைவீடும் இரண்டாம் படைவீடும்)), திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும் நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும் கூறுகிறார். 1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம், 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள் நல்ல பதில் கிடைக்கும்.

திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.

முன்னுரை 

மூவர் தேவாதிகள் தம்பிரானாம் முருகப் பெருமான் ஒருவரையே பாடி, பரம பதிவிரத நிலை இதுவே என்று உலகுக்கு உணர்த்திய பரமகுருநாதர் அருணகிரிநாதர் ஆவர். இப்பரமாச்சாரியர் ஏனோரும் ஓதி உய்யும் பொருட்டு , தேனூறும் தித்திக்கும் செந்தமிழால் பாடிய தமிழ் மறை திருப்புகழ் ஆகும். 

இத்தமிழ் வேதம் பரகதிக்கு ஏணி; அருள் கடலுக்கு ஏற்றம்; மனத்தளர்வுக்கு ஆணி; பிறவி மாசறுக்கும் அரம். 

அரணகிரி நாதர்பதி னாறா யிரமென் 
றுரைசெய் திருப்புகழை ஓதீர் - பரகதிக்கஃ
தேணி அருட்கடலுக் கேற்றம் மனத்தளர்ச்சிக் 
காணி பிறவிக் கரம்.

திருப்புகழை அன்புடனும் நியமமுடனும் ஓதுவார்க்கு அஷ்டமா சித்திகளும் உண்டாகும். 

"கருப்புகழாம்   பரசமயக் கதைகளோ தனுதினமுன் 
திருபுகழைக் கற்பார்க்குச் சித்தியெட்டும் எளிதாமே"  

திருப்புகழ் முருகப் பெருமானுடைய திருமார்பை அலங்கரிக்கின்ற மதாணி ஆகும். அவருடைய திருமார்பில் விளங்கும் கடப்ப மலர்மாலை மணக்குமாறு தெளிக்கின்ற பன்னீரும் ஆகும். 

"உரைபெற வகுத்தருணை நகரிலொரு பக்தனிடும் 
ஒளிவளர் திருப்புகழ் மதாணிக்ரு பாகரனும்"

"பலபல பைம்பொன் பதக்கமாரமும் 
அடிமை சொலுஞ்சொல் தமிழப்ப னீரொடு 
பரிமளமிஞ்சக் கடப்ப மாலையு மணிவோனே."

வேதத்திலுள்ள நுண்மான் பொருள்களும், ஆகமங்களிலுள்ள  அரிய பெரிய கருத்துக்களும், புராணங்களிலுள்ள அறநெறிகளும், இசைத் துறைகளும், ஓசை நயங்களும், தாளகதிகளும் திருப்புகழில் ஒருசேரக் குவிந்திருக்கின்றன. அதனால் திருப்புகழைக் கற்பார்க்கு வேதம் முதலிய எல்லா வித்தைகளையும் கற்ற பயன் உண்டாகும்.

"வேதம்வேண் டாம்சகல வித்தைவேண்டாம்கீத 
நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம் - ஆதி 
குருப்புகழை  மேவுகின்ற கொற்றவன் தாள்போற்றும் 
திருப்புகழைக் கேளீர் தினம்."

என்ற பாடலால் அறிக.      

முருகப் பெருமானுடைய திருவருளை எளிதாகப் பெறுகின்ற நெறி திருப்புகழை உள்ளம் உருகி ஓதுவதே யாகும்.

"அளப்பில்  கீதம் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே"
 என்ற அப்பர் பெருமான் அருள்வாக்கால் அறிக.

திருப்புகழை உரை உணர்ந்து ஓதுவது மிகவும் நன்மை பயக்கும். அநுபூதிச் செல்வராகிய அருணகிரி நாதருடைய அருள்வாக்காகிய திருப்புகழுக்கு திருவருளும், அருணை அடிகளாரின் குருவருளும் துணை செய்தால், ஓரளவு உரை காணலாம்.

அடியேன் இளமையிலிருந்து திருபுகழைப் பாராயணம் செய்தும், திருப்புகழ்த் தத்துவார்த்த விரிவுரை புரிந்தும் வரும் நியமத்தால், கந்தவேளின் கருணை துணைபுரிய, ஆறுபடை வீட்டுத் திருப்புகழுக்கும் உரை எழுதி வெளியிட்டேன். அப்புத்தகங்கள் இப்பொழுது கிடைப்பது அரிதாகிவிட்டது. அன்பர்கள் பலரும் திருப்புகழ் உரை நூலைப் படிக்கவேண்டும் என்று பெரிதும் விரும்பிக் கேட்கின்றார்கள்.

அன்பர்களின் இந்த அருள் தாகத்தைத் தீர்க்கவேண்டுமென்று வானதி பதிப்பக அதிபர் திரு வானதி திருநாவுக்கரசு அவர்கள் முன் வந்தார். இப்போது முதற் படைவீடாகிய திருப்பரங்குன்றம், இரண்டாவது படைவீடாகிய திருச்செந்தூர் என்ற இரு திருத்தலங்களின் திருப்புகழ்ப் பாடல்களின் உரைகளை அழகாக அச்சிட்டுத் தமிழகத்திற்கு வழங்குகின்றார். மற்றை நான்கு படைவீடுகளின் உரைகளைப் பின்னே அச்சிட்டு வழங்குவார். 

அன்பர் திருநாவுக்கரசு அவர்கள் இதை வியாபார நோக்கமாகக் கருதாமல் தமிழ் அன்னைக்குச் செய்யும் திருத்தொண்டாகக் கருதி செய்கின்றார். திருநாவுக்கரசு உள்ளத்தால் உயர்ந்தவர்; கந்தன் கருணை வெள்ளத்தில் திளைக்கின்றவர்.

இந்த உரை நூலை அன்பர்கள் அனைவரும் முறை உணர்ந்து, திருப்புகழை ஓதி, இம்மை, மறுமை, வீடு என்ற மும்மை நலங்களையும் பெற்று உய்வார்களாக.

20.12.1976
கிருபானந்தவாரி.                                                                                                                                      

எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
More Information
SKU Code VAN B 322
Weight in Kg 0.850000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:திருப்புகழ் விரிவுரை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்) - திருமுருக கிருபானந்த வாரியார் - Thirupughal Virivurai (Thiruparankundram,Thiruchendur)

Similar Category Products