Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திருவாசகம் (அரும்பதவுரை, தெளிவுரை, குறிப்புரையுடன்) - மாணிக்கவாசகர் - சி.தா.ராஜேந்திரன் - Thiruvasagam Arumpathavurai Thelivurai Kurippurayudan - Manikkavacakar Rajendiran - Maanikkavaasagar - Manickavasagar - Manikavasagar - Manikavaasagar - Rajendhiran

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 464
₹300.00

தமிழ் இலக்கியம்.

காகித அட்டை/ பேப்பர்பேக்;

323 பக்கங்கள்;

மொழி: தமிழ்;

முதல் பதிப்பு: ஆண்டு 2022.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

திருவாசகம் (அரும்பதவுரை தெளிவுரை குறிப்புரையுடன்) எனும் நூலை சி.தா.ராஜேந்திரன் அவர்கள் இயற்றி பாரதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகள் அவர்களின் ஆசியுரையுடன்.

அணிந்துரை: 

சுத்த சன்மார்க்கத்தைப் போதித்தருளிய சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள், "தோத்திரத்தில் சிறந்தது மணிவாசகர் அருளிய திருவாசகம்; சாத்திரத் திற் சிறந்தது திருமூலர் அருளிய திருமந்திரம்"என்றார். “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்றொரு பழமொழியும் உண்டு. 

அத்தகைய திருவாசகத்துக்கு ஏற்கனவே பல அறிஞர்கள் உறை எழுதியுள்ளனர். அவர்களெல்லாம் சமயங்களில் ஒன்றான சைவத்தைச் சேர்ந்த நூலாக மட்டுமே கருதி உரை எழுதியுள்ளனர். திரு.ஏ.எஸ். வழித்துணைராமன் என்பவர், வள்ளலாரின் சமயங்கடந்த சமரச சுத்த சன்மார்க்கத்தையொட்டி திருவாசகத்துக்கு உரை எழுதித் தந்துள்ளார். 

தமிழ் மொழியில் ஓரளவே புலமை பெற்றவர்கள் கூடப் புரிந்து கொண்டு  பொருள் உணரும் அளவுக்கு எளிய நடையில் தெளிவுரை எழுதியுள்ளார். 

திரு.வழித்துணைராமன் தெளிவுரையோடு, பல இடங்களிலே குறிப்புகளையும் கொடுத்துள்ளார். செய்யுட்களை சந்தி பிரித்துத் தந்துள்ளதால், மூலச் செய்யுளை ஒரு முறை படித்த அளவிலேயே பொருள் உணர்ந்து கொள்ள முடியும். அத்துடன், தெளிவுரையும் குறிப்பும் தந்துள்ளதால், திருவாசகத்தைப் படித்துப் பயனடைய முடியும். 

பல இடங்களிலே உரையாசிரியரின் கருத்துக்கள் விவாதத்திற்குரியதாக இருப்பினும் தமக்கு தோன்றியவற்றைத் துணிவோடு எடுத்துக் கூறியிருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டலாம். 

சிந்தனையைக் கிளறிவிடுவதற்கு திரு. வழித்துணைராமனின் ஆராய்ச்சி ரீதியான குறிப்பு பயன்படும். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். 

உரையாசிரியர் திரு. வழித்துணைராமன் பெருமுயற்சி எடுத்து அரும் பாடுபட்டு, மணிவாசகப் பெருமானின் திருவாசகப் பாடல்களை எழுத்தெண்ணிப் படித்துப் பொருள் கண்டிருக்கிறார். தமிழ் மக்கள் இந்நூலை வாங்கிப் படித்து ஆசிரியரை ஊக்குவிக்க வேண்டுகிறேன். 

ம. பொ. சிவஞானம் 

தலைவர்

தமிழ் வளர்ச்சி உயர் மட்டக் குழு

மயிலாப்பூர், 

சென்னை-4

23.5.1987.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

பதிப்புரை: 

திருவாசகம் எழுதியவர் மாணிக்கவாசகர். பிறந்த ஊர் மதுரை அருகே உள்ள திருவாதவூர் மதுரை மன்னன் ஆன அரிமர்த்தன பாண்டியனுடைய அமைச்சர் அவர். சிவயோக சித்தி எல்லாம் விளங்க, சிவஞான நிலை விளங்க திருவிளங்க, வாசகத்தை வடித்துத் தந்தார். அவரிடம் சிவபெருமான் ஒரு நாள் அந்தணக் கோலத்தில் வந்தார். மணிவாசகரிடம் திருவாசகம் முழுவதையும் ஓதச் செய்தார். 

திருவாசகத்தில் வாதவூரர் "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்;  செல்வர் சிவபுரத்தில்" என்று கூறுகிறார். ஆகவே, இதற்கு எளிய முறையில் தெளிவரையும் அரும்பதவுரையும், திரு, ஏ. எஸ். வழித்துணைராமன் அளித்துள்ளார். 

"வான் கலந்த மாணிக்கவாசகர் தம் வாசகத்தை" தான் கலந்து பாடி மகிழ்ந்து பரவசம் எய்திய வள்ளலார் சொன்னார்:- 

"வாட்டமில்லா மாணிக்க வாசக நின் வாசகத்தைக் கேட்டபொழுது அங்கிருந்த கீழ்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்கு களும் மெய்ஞான நாட்டமுறும் என்னில் இங்கு நான் அடைதல் வியப்பன்றே" என்று. 

இந்நூலுக்கு மகுடமாக ஆசியுரை நல்கிச் சிறப்பித்த காஞ்சி ஜெகத்குரு சங்கராச்சார்யார் அவர்களுக்கும், அழகியதோர் அணிந்துரை நல்கிய சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி. அவர்களுக்கும் எங்கள் உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

பழ. சிதம்பரம்

நிறுவனர்

பாரதி பதிப்பகம்

தி. நகர்

25.5.1987. 

ஆசிரியர் குறித்து: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் 3-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.

மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது.

உரையாசிரியர் குறித்து: சி.தா.ராஜேந்திரன் அவர்கள் பாரதி பதிப்பகம் உரிமையாளர் ஆவார். அவரின் பதிப்பகம் மூலம் கல்கி, கலைஞர், சாண்டில்யன், பாரதியார் போன்றோரின் படைப்புகளை வெளியிட்டார்.

More Information
SKU Code Bharti B 464
Weight in Kg 0.400000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name மாணிக்கவாசகர் - சி.தா.ராஜேந்திரன் - Rajendiran
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:திருவாசகம் (அரும்பதவுரை, தெளிவுரை, குறிப்புரையுடன்) - மாணிக்கவாசகர் - சி.தா.ராஜேந்திரன் - Thiruvasagam Arumpathavurai Thelivurai Kurippurayudan - Manikkavacakar Rajendiran - Maanikkavaasagar - Manickavasagar - Manikavasagar - Manikavaasagar - Rajendhiran

Similar Category Products