Details
இப்புத்தகத்தில் 2 நாவல்கள்.
1.தோழன்
2.பொன்னார் மேனியனே
தோழன் :-
"புன்னை நல்லூர் மாரியம்மன் எனும் மகா சக்தியின் திரு உருவை புற்று மண் கொண்டு உருவாக்கி பல அதிசயம் நிகழ்த்திய மகான் சதாசிவ பரப் பிரமேந்திரர் சரிதம்." "குருவினுடைய் அன்பு ஒரு தாயின் அன்பைக்காட்டிலும் பல மடங்கு பெரியது."
"குருவினுடைய கருணை தெய்வத்தின் கருணையைக்காட்டிலும் பல ஆயிரம் மடங்கு
வேகமாகப் பொங்கக் கூடியது."
"மனிதன் என்பவன் உடம்பல்ல. அதுவொரு மகத்தான சக்தி. ஆத்ம சொரூபம்." "உலகின் மிகச்சிறந்த மொழி மௌனம்தான். அந்த மொழி பேசுபவர்களுக்குத்தான், அந்த மொழியின் இலக்கணங்கள் தெரிந்தவர்க்குத்தான், அந்த மொழியில் வளமை மிக்கவர்களுக்குத்தான் கடவுளோடு பேசமுடியும்.
கடவுளோடு பேச மௌனம் ஒரு மொழி. அதுவொரு வழி.
- தோழன்"
அவர் சொன்னபடியே, அவர் உள்ளே அமர்ந்ததும் குகை மூடப்பட்டது. ஒன்பதாம்நாள் வில்வம் துளிர்த்தது. பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வந்தது. சகல காரியங்களையும் கோபாலகிருஷ்ண சாஸ்திரிக ள் செய்து முடித்தார்.
இப்பொழுதும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூருக்கு அருகேயுள்ள நெரூர் என்கிற சிறிய கிராமத்தில் சதாசிவ பிரும்மந்திராளின் அதிர்ஷ்டானம் நேர்த்தியாய் பாதுகாக்கப்பட்டு வருகிறது, மிக அதிர்வுகளுள்ள அமைதியான அந்த இடத்தை ஒருமுறை போய் தரிசனம் செய்யுங்கள். அவரை தரிசிப்பது உங்களுக்கு இருக்கிற கடவுள் தன்மையை ஊக்குவிக்கும்,. பெரிதாக்கும். உங்களைப் பலப்படுத்தும்.
பொன்னார் மேனியனே:-
ஐயனே, நீ குரு. தட்சிணாமூர்த்தி. சொல்லாமல் சொல்லுகின்ற மேதாவி. பரம புருஷன். சிவபெருமான். இதில் எனக்கு சந்தேகமே இல்லை. மயிலாப்பூர் மக்களே வாருங்கள். இதோ கடவுள் இங்கே வந்து பிறந்திருக்கிறார். மயிலாப்பூர் செய்த பாக்கியத்தை பாரய்யா, கடவுள் சிவபெருமான் இங்கே வந்து பிறந்திருக்கிறார். பாரய்யா" என்று அந்த அந்தணர் முன்னும், பின்னும் அலைந்து உரக்கக் கத்தினார்.
பிள்ளைவாளின் உடல் போன் போல் ஜொலித்தது. ஞானியின் காசு இறைவனுக்கே. ஞானியின் வாழ்வும் வாசஸ்தலமும் இறைவனுக்கே என்று, அவர் இருந்த இடம் கோயிலாயிற்று. அவரை மெல்ல மூடும் பொது மயிலை ஜனங்கள் பொன்னார் மேனியனே என்று ஒரே குரலில் பாடினார்கள். பிள்ளைவாளைப் போற்றினார்கள்.
பொன்னார் மேனியர் இருந்த இடத்திற்கு கபாலியையும், கற்பகத்தாயையும் மாற்றி பெருங்கோயில் எழுப்பி திரள்திரளாய் இன்றளவும் ஜனங்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். கபாலி கோவில் இன்றளவும் பொற்காசு குறையாமல் பொன் நகைகளில் பொலிவாகி ஜொலிக்கிறது.