Details
நான் இன்னொரு நூற்றுப்பத்து அத்தியாயங்கள் எழுதப்போகிறேன் என்றபோது வாரப்பத்திரிகைக்கு சங்கடம் என்பதால் நாவலாக வெளியிடலாம் என்று தோன்றியது. இவ்வளவு பெரிய தொடர்கதையை யார் படித்திருப்பார்கள் என்று நான் சற்று கவலையோடு இருக்க பல வாசக உள்ளங்கள் இதைத் தொடர்ந்து படிப்பதாகச் சொல்லி என்னை உற்சாகமூட்டின. என்னை விவாதத்திற்கு இழுத்தன. (ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில்கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது. )